புத்திரசுவிகாரம் - பாகம் - 4 Jeffersonville, Indiana, USA 60-0522E 1விலையேறப்பெற்ற எங்களுடைய நண்பர்களே, இன்று இரவு திரும்பவும் சபைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேம். கொஞ்சம் வெப்பமாக உள்ளது, நாம் இயன்றவரை நேராக செய்திக்குள் வேகமாகச் செல்வோம். முதலவாதக, நாம் செய்வதற்கு சில அறிவிப்புகள் இருக்கிறது - விஷேசித்த ஜெப வேண்டுக்கேள். நீங்கள் எனக்கு கொடுத்த கடிதங்கள் என்னிடத்தில் உள்ளன; ஒரு சகோதரிக்கு மூளையில் கட்டியுள்ளதாக, லூயிஸ்வில்லியிலும் (Louisville) ஒருவர், மற்றும் இன்னோறு உழியக்காரரின் சகோதரர், அவருடைய தகப்பனருக்கு மாரடைப்பு. இன்னும் அநேகர், அநேகர் இவ்வுலகத்தில் வியாதிப்பட்டிருக்கின்றனர். அநேகர் தொலைப்பேசியில் தொடர்பு கொள்கின்றனர். அவர்கள் அனைவருக்காகவும் நாங்கள் முழு இருதயத்தோடு ஜெபிக்கிறோம், தேவன் எங்களுக்கு உதவி செய்வராக. 2வழக்கமாக என்னுடைய 95% ஊழியங்கள் எப்போதும் வியாதியஸ்தவர்களுக்காக ஜெபிப்பதே! பாருங்கள். ஆனால், நான் பெற்றுள்ள அவ்விதமாக ஒரு சிறு வழியில் நான் இன்னமும் வியாதியஸ்தவர்களுக்காக ஜெபிக்கிறேன். அதை நினைவுக் கூருகிறீர்களா? அவ்வழியில் அது சரியாக செல்கிறது. ஆனால், ஓ சபையானது அதன் ஸ்தானத்தில், ஒழுங்கில் இருக்குமானால், நாம் செயல்பட முடியும் பாருங்கள். எல்லாவற்றையும் ஒழுங்காக அமைக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு முன்பு, என் இருதயத்தை ஏதோ ஒன்று தாக்கியது. அது, அவர் ஒரு பழைய போர் வீரர், அவருடைய ஒரு கையும், காலும் சுடப்பட்டு... அவர், இப்போது நான் கூறுவதைக் கேட்க இங்கு இல்லை. ஆனால், அவர் ஒரு உண்மையான இளவரசர், அவரின் பெயர் ராய் ராபர்சன் (Roy Roberson). நம் சபையில் ஒரு தர்மகர்த்தாவாக, ஒரு நல்ல பண்புள்ள கிருஸ்தவ கனவானாவார். அவர் அங்கு உட்கார்ந்துக் கொண்டு, ''சகோ. பிரன்ஹாமே, ஜனாதிபதியை மறந்துவிடாதேயும் என்பார்.'' அவர் விமானத்தை விட்டு இறங்குவதை தொலைக்காட்சியில் இவர் பார்த்தபோது, கண்ணங்களில் கண்ணீர் வழிந்தவராய், அவருடைய வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு, அது எனக்கு வருத்தத்தை அளித்தது என்றார். போர்களத்தில் ராய் மற்றும் மற்றவர்களுடன் அவர் அங்கே இருந்தார் என்பதை நீங்கள் அறீவீர்கள். 3நீங்கள் என்னோடு அரசியலில் வேறுப்பட்டால் பரவாயில்லை, இன்றும் அவர் நமது ஜனாதிபதியே. ஆம், ஐயா! என்னை பெறுத்தவரையில், நான் ஜனநாயகக் கட்சியுமில்லை, குடியரசுக் கட்சியுமில்லை. நான் ஒரு கிருஸ்தவன். நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நான் ஜனாதிபதி டுவைட் ஐசனோரை (Dwight Eisenhower) கண்டு மிகவும் வியக்கிறேன். என் சிந்தையில், அவர் நிச்சயமாக ஒரு பெரிய மனிதராக இருந்துள்ளார். அவர் மறுபடியுமாக நிற்பாரானல், நான் மறுபடியுமாக அவருக்கே வாக்களிப்பேன். அது சரியே. அவர் நூறு வயதுடையவராய் இருந்தாலும், நான் கவலைப்படாமல் அவருக்கே திரும்பவும் வாக்களிப்பேன், என்னென்றால் எனக்கு அவரை பிடிக்கும். நாம் நம்முடைய ஜெபத்தில் இன்று இரவு அவரை நினைவுக் கூருவோமாக. ஜே.டி.ஐ நீங்களும், சகோ. வில்லார்டும், இந்த வாரத்தில் கொண்டிருந்த அருமையான கூட்டங்களுக்காக பாராட்டுகள். நான் வெளியிலிருந்து உள்ளே வரும்போது நீங்கள் எல்லோரும், ''அதுசரி சகோ. பிரன்ஹாமே, ஒரு நபராகிய இன்னார் வெளியில் நின்றுக் கொண்டு நீங்கள் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தார்.'' அவ்விதமான அது நல்லது என்று நீங்கள் நினைக்கவில்லையா? 4நீங்கள் விரும்புவீர்களானால் சில சபைகளுக்கு அனுப்ப என்னிடம் வாய்ப்புகள் உள்ளது. நான் விசுவாசிக்கும் காரியங்களில் நீங்கள் பயிர்ச்சி பெற்றவராய்; அதில் நிலைவரப்பட்டிருப்பீர்களானால், நீங்கள் மேய்ப்பர்களாக செல்ல ஆயத்தமாய் இருப்பீர்களானால் என்னிடத்தில் ஒரேகான் (Oregon), வாஷிங்டன் (Washington), கலிஃபோர்னியா (California), அரிசோனா (Arizona), இன்னமும் அநேக இடங்கள் உள்ளன. நீங்கள் எதாவது சபையை எடுத்துக்கொளள வேண்டும் என்றால், ஏன் இதிலிருந்து ஒரு நல்ல துவகத்தை துவங்கக்கூடாது. அநேக இடங்களில் ஆத்தமாக்கள் அழுதுக் கொண்டிருக்கிறன, இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களிளும் நீங்கள் எங்காவது செல்ல வேண்டுமென்றால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். ஏன்னென்றால் வாலிபர்கள் (பையன்கள்) நீங்கள், இப்போது சரியாக நங்கூரப்பட்டு இருக்கிறீர்கள் என்று விசுவாசிக்கிறேன். அவர்கள் அதை செய்வதைப் பார்க்க நான் விரும்புகிறேன். அங்கே சாலையில் சகோதரன் ரட்டல் (Brother Ruddell) இருக்கிறார். இன்னும் சில நாட்களில் அவருக்கான கூட்டத்திற்கு போகிறோம். சகோ. ரட்டல் ஒரு எழுப்புதலைக் கொண்டிருக்கப் போகிறார். இந்த சிரிய சகோதரனை நான் எல்லாவிடங்களுக்கும் தள்ளி, சேணத்திலிருந்து வெளியில் எடுத்து பிரசங்கிக்க வைக்கும்படி முயற்ச்சி செய்ததை நினைவுக் கூருகிறேன். ஏனென்றால், அவர் மிகவும் பின்தங்கி இருந்தார். அவர், ''என்னால் பேச முடியாது என்றார்.'' நீங்கள் அவருக்கு செவிக் கொடுக்க வேண்டும். உங்களை பரிசுத்த ஆவியானவர் பிடித்துக் கொள்ள நீங்கள் அனுமதிக்கும் போது, உங்களால் என்ன செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியாது. பாருங்கள், அது சரியே! 5உட்டிகாவில் (Utica) உள்ள சகோ. கிரஹாம் ஸ்நெல்லிங் (Graham Snelling) மற்றும் கீழே அங்கே உள்ள சகோ. ஜீனியர் ஜாக்சன் (Junior Jackson), அவர்களை நம்முடன் உள்ள சிறிய சகோதரி சபைகள் என கூறுகிறோம். நாம் எல்லோரும் ஒன்றாய் இருக்கிறோம். நாம், நம் உபதேசங்களையும், நம்பிக்கையையும் நோக்கங்களையும் குறித்து முரண்படவில்லை. நம்முடைய உபதேசங்கள் எல்லாம் ஒன்று தான். நாம் எல்லாற்றிலும் ஒன்றாகவே நிற்கிறோம். நாம் ஒரே சபையாக இருக்கிறோம். நாம் எல்லாவிடங்களிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் இன்னும் தேசத்தை சுற்றி எல்லா இடங்களிலும் இருக்கின்ற விதமாக. அவ்விதம் தான் செய்தியை பரப்ப வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இங்குள்ள இந்த வாலிபர்கள், இன்னும் மற்றவர்கள் சகோ. ஜெ. டி. பார்னல் (J.T. Parnell) போலவும், சகோ. வில்லார்ட் (Willard) போலவும் வருவதை காண்கிறோம். வாலிபர்கள் அப்படியாக வரும்போது, எனக்கு அதிகமாக வயதாகும் போது நாளை என்று ஒன்று இருக்குமென்றால், அவர்கள் நாளைய மனிதனாய் இருப்பார்கள். இந்த வார்த்தையானது மரித்துப் போவதை நான் விரும்பவில்லை. அது மரிக்க முடியாது, அது ஜீவித்துக் கொண்டிருக்கும். அவ்விதம் அதைக் கொண்டு வர நாம் அதிக வாஞ்கையுள்ளவர்களாய் இருக்கிறோம் என்று நான் நம்பவில்லை. மரித்துப் போகும் என்று அவர்கள் கூறிய அந்த சிறு குழந்தையை, சகோதரி இன்று முழுவதும் சபையில் வைத்துக் கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். அது மிகவும் நல்லது. அதற்காக கர்த்தருக்கு நாம் நன்றி கூறுவோம். கர்த்தர் கிருபையும், மிக இரக்கமுள்ளவராய் இருக்கிறார். பாருங்கள், இங்கு என்ன உங்களுக்கு கூறப்படுகிறதோ, அதை அப்படியே விசுவாசியுங்கள். அது சரியாகி விடும். 6இப்பொழுது, நீங்கள் போதனையில் மகிழ்கிறீர்களா? நீங்கள் போதனையை விரும்புகிறீர்களா? அது நமக்கு நன்மையை செய்கிறது என்று நான் நினைக்கிறேன். வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதிலும், தரிசனங்களிலும், தெய்வீக சுகமளித்தலிலும் இருந்து நமக்கு சிறிது ஓய்வு தருகிறது. இன்று இரவு ஆராதனைக்கு பிறகு, நாம் மறுபடியும் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க கூடும். அதை எந்த நேரத்திலும் செய்ய விரும்புகிறோம். எந்த நேரத்திலும் யாருக்கு வேண்டுமானாலும் ஞானஸ்நானம் கொடுக்கலாம் என்பதைக் கூட செய்யவிருக்கிறோம். நான் வல்லமையின் பாதையில் நடப்பதை எத்தனைப் பேர் நினைவு கூறுகிறீர்கள். ஓ, நான் அநேக முறை வல்லமையின் பாதையில் நடந்திருக்கிறேன். வனாந்தரத்தின் வழியாய் ஒரு நாளைக்கு முப்பது மைல்கள் கூட நடக்கும்படியாகும். எனக்கு நடக்க 280 மைல் பாதை இருந்தது. நான் காடுகளிலும், பச்சையான புதர் போன்ற வளைவுகளிலும், என் சட்டையை கையில் எடுத்து கொண்டு, ஓ, மிகக் களைப்பாய் அதனூடாக நடந்து செல்வேன். யாராவது வயதான விவசாயியை சந்திக்கும் போது, மரத்தடியில் அமர்ந்து இயேசு கிறிஸ்து நாமத்தில் ஞானஸ்நானத்தை குறித்து பேசிக் கொண்டிருப்பேன். அவர், “நானும் அவ்விதமாய் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள விருப்பமாக இருக்கிறேன்” என்று கூறுவார். நான், “சிற்றோடை அவ்வளவு தூரம் இல்லையே” என்று கூறுவேன். 7அவர் கூறுவார்.... நான் அநேகரை அங்கு கொண்டு சென்று அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன் வரிசைக்குக் கொண்டு சென்று அவர்களை நிறுத்துவேன். அது உண்மை. அநேகமுறை, என் பணி உடைகளிலேயே மின்சாரக் கம்பத்திலிருந்து இறங்கி வந்து, சிலருக்கு ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறேன். நான் மின்சாரக் கம்பியில் பணிபுரிந்தவன் (lines man). அவ்வாறு கம்பத்தின் மேல் பணிபுரிந்து கொண்டே, என்னுடன் கூட பணிபுரிந்தவனிடம் கர்த்தரைக் குறித்து பேசியிருக்கிறேன். அவனும், ''சரி, பில்லி என்றாவது ஒரு நாள் சபைக்கு வந்து ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறேன்“ என்பான். நான் அவனிடம், ''அதுவரைக்கும் ஏன் காக்க வேண்டும்? நாம் இப்பொழுது ஆற்றினருகில் இருக்கிறோமே, இங்கு நிறைய தண்ணீர் உள்ளதே'' என்பேன். அவர்களை அப்பொழுதே பிடித்துக்கொள்ள வேண்டும். அதுதான் சமயம். பிலிப்பு கூறினான்.... 8மந்திரி பிலிப்புவினிடம், ''இதோ தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன?'' என்று கேட்டான். எதுவுமில்லை. நீ ஆயத்தமாயிருந்தால், அதுதான் தக்க சமயம். அங்கு ஏதாவதொன்றை நுழைக்க பிசாசுக்குத் தருணம் அளிக்காதே. இன்று செய்யக்கூடிய செயலை நாளை தள்ளிப் போடாதே. நாளை என்பது உனக்கு வராமலேயே இருக்கலாம். ஒரு முறை நான் அப்படி செய்து, அதன் விளைவாக ஒரு பாடம் கற்றேன். ஒரு பிரத்தியேக நாளன்று செய்ய வேண்டிய செயலை அடுத்த நாளுக்குத் தள்ளிப் போட்டேன். ஆனால், அடுத்த நாள் அதிக தாமதமாகிவிட்டது. 9உண்மையாக இவ்வளவு நேரம் உங்களைப் பிடித்து வைக்க நான் விரும்பவில்லை. ஆனால், எனக்கு நல்லுணர்வு அதிகம் ஏற்படும் காரணத்தால், என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் மிக்க மகிழ்ச்சி கொள்ளும் போது என்னையே மறந்து விடுகின்றேன். எனக்கு நல்லுணர்வு ஏற்பட்டுள்ளது. தேவனுடைய வசனத்தை நாம் அணுகும் முன்னர் சற்று நேரம் தலை வணங்குவோம். எங்கள் பரலோகப் பிதாவே, நீர் ஜீவனுள்ள தேவன். நீர் என்றென்றும் ஜீவிக்கிறவராயிருக்கிறீர். இன்று அஸ்தமித்த அதே சூரியன் அஸ்தமிப்பதை தானியேல் கண்டான். எரேமியாவும் அது அஸ்தமிப்பதைக் கண்டான். இதே உலகில் அவர்களும் வாழ்ந்தனர். நீர் இன்றும் மாறாத தேவனாயிருக்கிறீர். இன்று அநேக விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஒரு மனிதனுக்கு மூளையில் கட்டி (tumor) வந்துள்ளது. ஒரு சகோதரி கூட, தனக்கும் அப்படி இருக்குமோ என்று பயப்படுகின்றாள். ஆண்டவரே, நீர் ஒருவர் மாத்திரமே அதை சுகப்படுத்த முடியும், என்னும் எங்கள் நம்பிக்கையாயிருக்கிறீர். அந்தக் கட்டி புற்று நோயாகிவிட்டது. வேறொன்றும் அதை நிறுத்த முடியாது. இது மருத்துவரின் கரங்களுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. ஆனால், இன்றிரவு எங்கள் சிறிய கவணுடன் நாங்கள் அந்த ஆட்டைப் பின் தொடர்ந்து, அதை பிதாவின் மந்தைக்கு மறுபடியும் கொண்டு வர முயல்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் ஜெபத்தை அனுப்பி, அந்த புற்றுநோய் கட்டியைக் கொன்று, அவர்களைப் பாதுகாப்பாக மந்தையில் கொண்டு வருகிறோம். 10தேவனே, இன்றிரவு எங்கள் அருமை ஜனாதிபதி. ட்வைட் ஐசன் ஹவரை நினைவு கூருகிறோம். ஆண்டவரே, அவர் தேசத்தை வழி நடத்தி வந்து, யுத்தத்திலிருந்து எங்களை காத்து வந்துள்ளார். கூடுமானால் கொரியா யுத்தத்தை நிறுத்தி விடுவதாக அவர் வாக்களித்துள்ளார். போர் புரியும் இராணுவ வீரர்களின் தாய்மார்களிடம், அவர்களுடைய பிள்ளைகளைத் திரும்பக் கொண்டு வருவதாக அவர் வாக்களித்துள்ளார் அவர், ''என்னால் அதை செய்ய முடியாது. நான் முயற்சி செய்யலாம், ஆனால் தேவன் மாத்திரமே அதை செய்ய வேண்டியவராயிருக்கிறார்'' என்று கூறினார். ஆண்டவரே, நீர் அவருடன் கூட இருந்தீர், இப்பொழுது எல்லாம் ஒழுங்காகிவிட்டது. அவர்கள் ஏன் அதை முதலிலே உணரவில்லை? தேவனே, அவருக்கு உதவி செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறேன். ஆண்டவரே, அந்த தீரமான ஆத்துமாவை ஆசீர்வதிப்பீராக, அடுத்ததாக வரவேண்டிய தலைவரை எங்களுக்குத் தேர்ந்தெடுத்து தர வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். ஆண்டவரே, உமது முன் குறித்த சித்தம் நிறைவேறுவதாக. இந்த தேசிய விவகாரங்களைத் தவிர, இன்றிரவு நாங்கள் விரும்புவது, என்றென்றும் முடிவிராத ராஜ்யத்தை நிறுவவிருக்கும் அந்த மகத்தானவரும் மகிமையுள்ளவருமான உமது குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவையே, அப்பொழுது போராயுதங்களை ஒரிடத்தில் வைத்துவிடுவார்கள். இனி ஒருபோதும் யுத்தமே இராது. அவர்கள் திராட்சைத் தோட்டங்களை நாட்டி அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள். அவர்கள் வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருப்பார்கள். பின்பு எவ்வித தொல்லையும் இராது. நாங்கள் வார்த்தையை அணுகும் இந்நேரத்தில் எங்களை ஆசிர்வதிப்பீராக. பிதாவே, இந்த வேத வாக்கியத்தை ஆதாரமாகக் கொண்டு நான் வார்த்தையை அணுகும் காரணத்தை நீர் அறிந்திருக்கிறீர். நான் அவ்விதம் செய்ய வேண்டுமென்று நீர் விரும்புகிறீர் என்று நான் உணருகிறேன். அது உம்முடைய திவ்விய சித்தமாயுள்ளது. அது உம்முடைய ஒழுங்கை அனுசரித்துள்ளது. ஜனங்கள் தங்கள் ஸ்தானத்தைக் கண்டு கொண்டவர்களாய் யுத்தத்திற்கு ஆயத்தமாக வேண்டுமென்பதே இன்றைக்குரிய ஒழுங்காயுள்ளது. சற்று முன்பு எங்கள் சகோதரன், ''ஆண்டவரே, இவ்வளவு காலமாக எங்களுக்கு யுத்த பயிற்சி அளித்து வந்தீர்'' என்று ஜெபம் செய்தார். இப்பொழுது பிதாவே, எங்கள் பதவியை (rank) எங்களுக்குத் தாரும். எங்களை யுத்தகளத்தில் நிறுத்தி, நாங்கள் செய்ய வேண்டியது எதுவோ அதை செய்து, பிதாவுக்கடுத்தவைகளை நிறைவேற்ற அருள்புரியும். உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 11இன்று பகல் ஒரு அருமையான பகலாக அமைந்திருந்தது. நான் லூயிவில் பட்டினத்திலுள்ள ஒரு பிரபல மருத்துவருடைய நர்ஸுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் தேவனுடைய மகிமையான செயல்களைக் குறித்து கேள்விப்பட்டிருந்தனர். அவளுடைய தந்தை ஒரு மருத்துவர். அவள் என் அறைக்கு வந்து, பகல் முழுவதும் என்னுடன் இருந்தாள், மிகவும் அருமையானவள். அவள் மிகவும் உறுதியான பிரஸ்பிடேரியன். தொடக்கத்தில் சற்று கடினமாக இருந்தது. ஆனால், அவள் கன்னங்களில் நீர் வழிய அவ்விடம் விட்டு சென்றாள். ஓ, தேவன் அவருடையவர்களை எல்லாவிடங்களிலும் வைத்துள்ளார். மருத்துவர்களின் அலுவலகங்களில் நர்ஸுகளாக. நார்டன் மருத்துவ சாலையில், பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று சாட்சி கொடுத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறாயா?'' என்று நான் கேட்காதநர்ஸ் ஒருவர் கூட இல்லை. நான் தொடர்பு கொண்ட எந்த மருத்துவரிடமும் இதைக் கேட்கத் தவறியதில்லை. பாருங்கள்? அவர்களுக்கு இதைக் குறித்து எடுத்துக் கூறுங்கள். சகோதரனே, உனக்கு இன்னும் அதிக சமயமில்லை. சத்தியத்தை ஏற்றுகொள்ளுதல் என்பது ஒரு கடினமான செயலாக உனக்குத் தென்படலாம். ஆனால் உன் கடைசிமூச்சு ஒடுங்கி, கரையைக் கடந்து மறுபக்கம் செல்லும் வரை காத்திரு. அப்படி செய்திருந்தால் நலமாயிருக்குமே என்று அப்பொழுது வருத்தப்படுவாய். ஆம். ஐயா. அந்நேரம் வரைக்கும் காத்திருக்க வேண்டாம். இப்பொழுதே அதை செய்வோம். இதுவே சமயம். அவர்கள் இணங்காமல் சற்று கோபப்படலாம். ஆனால், அவர்கள் வேண்டுமென்று அப்படி செய்யவில்லை. அவர்கள் உங்கள் மேல் கோபப்படும் போது, அவர்கள் வேண்டுமென்று அப்படி செய்யவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதோ ஒன்று கற்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏதோ ஒன்று கற்பிக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் இறுகப் பிடித்துள்ளனர். அவர்கள் நிலையை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அவர்களுடன் கோபங்கொள்ள வேண்டாம். யாருடனும் கோபங்கொள்ள வேண்டாம். அவர்களிடம் அன்புகூர்ந்து அவர்களுக்காக ஜெபியுங்கள். 12சரி, நாம் 9ம் வசனம் வரை வந்தோம் என்று நினைக்கிறேன். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அது, 3ம் அதிகாரத்திற்கு அதிக தூரம் உள்ளது. இல்லையா, மனிதர்களே? ஓ, அது எனக்கு கற்பாறையிலுள்ள தேனைப் போன்று மதுரமாயுள்ளது, சற்று பின்னணியைப் பெற (back ground) நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறோம். சகோ. நெவில், நேரம் கடந்து செல்வதை நான் காணத்தவறினால், என்னை சற்று இழுத்து ஞாபகப்படுத்துங்கள். நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க விரும்புகிறேன், எல்லோருமே இன்றிரவு (வரிசையில் வர வேண்டுமென்று விரும்புகிறோம். பீட அழைப்பு கொடுக்க நான் விரும்புகிறேன். இத்துடன் முடித்துக் கொள்ளலாம். அப்பொழுது, தான் மீதியுள்ள வேத வாக்கியங்களைப் படிக்க முடியும். இதன் நோக்கம் என்னவெனில், கிறிஸ்துவுக்குள் உங்கள் ஸ்தானத்தைக் கண்டு கொள்ளுதலாம். நீங்கள் எதேச்சையாக இதற்குள் வரவில்லை; அல்லது உங்கள் தகுதியின் காரணமாக வரவில்லை. தேவனே இதை உங்களுக்கு அருளினார், நீங்கள் மிகவும் நல்லவர்களாக இருந்த காரணத்தால், ஒரிரவு நீங்கள் சபைக்குச் சென்று, அங்கு ஒரு சகோதரன் உங்களை பீடத்தினிடத்தில் வழி நடத்தினார் என்பதில்லை. உலகத் தோற்றத்துக்கு முன்பே தேவன் உங்களை நித்திய ஜீவனுக்கென்று முன் குறித்திருந்தார். அந்த நாளில் அங்கு நீங்கள் சென்றபோது... இருபத்து நான்கு மூப்பர்கள் தங்கள் கிரீடங்களை கழற்றி வைத்து, முகங்குப்புற விழுந்து பணிந்து எல்லா துதியையும் ஆட்டுக் குட்டியானவருக்கே செலுத்தினர் என்பதில் வியப்பொன்றுமில்லை. யாருக்கும் ஒன்றும் சொல்வதற்கில்லை. எந்த போதகருக்கும், எந்த மூப்பருக்கும் ஒன்றும் சொல்வதற்கில்லை. எல்லா துதியையும் அவர்கள் ஆட்டுக் குட்டியானவருக்கே செலுத்தினர். அந்த நாளில் தேவன் எல்லாவற்றையும் அவருக்குள் கூட்டி சேர்ப்பார். ஓ, அவர்கள் சிலுவையிலறைந்தவர் யார் என்பதை மாத்திரம் நாம் கண்டு கொண்டால். இப்போது.... 13சற்று பின்னணியைப் பெற நாம், 8ம் வசனத்திலிருந்து தொடங்குவோம்: அந்த கிருபையை அவர் சகல ஞானத்தோடும், புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்; தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.... ''அவருடைய சித்தத்தின் இரகசியம்.'' இந்த பொருளில் நாம் எவ்வளவாக நிலை நின்று பேசினோம்! இன்று காலை எத்தனை பேர் வந்திருந்தீர்கள்; பார்க்கலாம்? ''அவருடைய சித்தத்தின் இரகசியம்'' என்னும் பொருளின் பேரில் நாம் எவ்வளவாக நிலை நின்றோம்? அது ஒரு சிறு காரியமல்ல, அது ஒரு இரகசியம். தேவனுடைய சித்தம் ஒரு இரகசியம் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், அவளுக்கான; அவனுக்கான தேவனுடைய சித்தத்தை தேடி கண்டுபிடிக்க வேண்டும், தேவனுடைய இரகசியம். அதை நாம் எப்படி கண்டுபிடிப்பது? பவுலுக்கு அது வெளிப்படுத்தப்பட்டது. அவன் எந்த மனிதனிடமும், மாமிசத்தோடும், இரத்தத்தோடும், யோசனை பண்ணவில்லை என்று கூறுகிறான். அவன் எந்த வேதாகமப் பள்ளிக்கும் செல்லவில்லை, அதனுடன் அவன் எந்த தொடர்பும் கொள்ளவில்லை. இயேசு கிறிஸ்துவே அதை அவனுக்கு வெளிப்படுத்தினார். அவன், தமஸ்குவுக்குப் போகும் வழியில், அக்கினி ஸ்தம்ப வடிவில் அவர் ஒளியாக அவனை சந்தித்தார். அந்த அக்கினி ஸ்தம்பம் அவனை அழைத்தது. அவன், அரபு தேசத்திற்கு சென்று மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான். சகோ. ஈகன், அது முக்கியமான காலம் என்று புரிந்து கொண்டீர்கள் அல்லவா? மூன்றாண்டு காலமாக பவுல் அரபு தேசத்தில் ஒரு சிறு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்கியிருந்து. இங்குமங்குமாக நடந்து, பழைய புத்தகச் சுருள்களை படித்தான். அவர்களிடம் புதியபுத்தகச் சுருள்கள் கிடையாது. பவுல் தான் அநேகமாக எல்லா புதிய புத்தகச் சுருள்களை எழுதினான். அந்த பழைய புத்தகச் சுருள்களிலிருந்து, தேவன் எவ்வாறு தொடக்கத்தில் நம்மை நித்திய ஜீவனுக்கென்று முன் குறித்தார் என்றும், அவர் இயேசுவையனுப்பி அந்த பலியின் மூலம் ஜீவ விருட்சத்திற்குரிய உரிமையை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் பவுல் அறிந்து கொண்டான். எவர்களை அவர் முன் குறித்தாரோ, அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அவர் அழைத்தாரோ, அவர்களை ஏற்கனவே நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை ஏற்கனவே மகிமைப்படுத்தியுமிருக்கிறார். தேவன் உலகத் தோற்றத்துக்கு முன்பே நம்மை சுவிகாரப்புத்திரராக முன் குறித்து விட்டார். இப்பொழுது சர்வ சிருஷ்டியும் ஏகமாய் தவித்து பிரசவ வேதனைப்பட்டு, தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது பவுலுக்கு அங்கு மிகவும் அருமையான தருணம் உண்டாயிருந்ததென்று நினைக்கிறேன். அவனுடன் கூட நானும் இருந்திருக்க விருப்பப்படுகிறேன். உங்களுக்கும் விருப்பம் உண்டு அல்லவா? 14''இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்'' என்று பவுல் கூறுகின்றான். நீங்கள் பரிசுத்த ஆவியை எப்பொழுதாகிலும் பெற்றுக் கொண்டு, வேதத்தை ஆராய்ந்து பார்த்து, அது எப்படியிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். இன்றைய பாடத்தைக் குறித்து ஆராய இன்று பகல் எனக்கு முப்பது நிமிடங்கள் இருந்தது. இல்லை, அதில் பாதி, அதாவது பதினைந்து நிமிடங்கள். நான் வேதாகமத்தை திருப்பிக் கொண்டே வந்தேன். அப்பொழுது, ''இந்த இரகசியம் எவ்வளவு இரகசியமாக இருந்து வந்துள்ளது'' என்று எண்ணினேன். வேதாகமம் என்னை பழைய ஏற்பாட்டிற்கு கொண்டு சென்று, மீண்டும் புதிய ஏற்பாட்டிற்கு கொண்டு வந்தது அவருடைய வருகையின் இரகசியம், அவருடைய சித்தத்தின் இரகசியம், நாம் ஒருமித்து வீற்றிருப்பதன் இரகசியம், இவையனைத்தும் ஒன்றாக இணைந்துள்ளது. இவைகளை வேதாகமப் பள்ளிகளில் கற்பித்துக் கொடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். அது, ஒரு இரகசியம். வேத சாஸ்திரத்தின் மூலமோ, கல்வியின் மூலமோ, இவைகளை நீங்கள் அறிந்து கொள்ள இயலாது. இது உலகத்தோற்றத்துக்கு முன்பே மறைக்கப்பட்ட இரகசியமாக இருந்து வந்து, தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. 15தற்போதைய காலத்தைத் தவிர வேறெந்த காலத்திலாவது தேவனுடைய புத்திரர் வெளிப்பட முடியும் என்பதை என் சகோதரனே, எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். சிருஷ்டி அனைத்தையும் விடுதலையாக்கும் நேரம், சரித்திரத்தில் வேறெந்த காலத்தில் உண்டாயிருந்தது? தேவனுடைய புத்திரர் வெளிப்படும் காலத்திற்காக சிருஷ்டியானது தவித்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏன்? இயேசுவின் மரணத்தின் மூலம் பாவநிவாரணம் உண்டாவதற்கு முன்பு: பரிசுத்த ஆவி ஊற்றப்படுவதற்கு முன்பு: பழைய ஏற்பாட்டின் காலம் தொடங்கி இதுவரைக்கும் தேவனுடைய புத்திரர் வெளிப்பட்டிருக்க முடியாது. இந்த நேரத்திற்காக, அது காத்திருக்க வேண்டியதாயிருந்தது. இப்பொழுதோ எல்லா காரியங்களும் கொண்டு வரப்பட்டு, தலைக்கல்லை நோக்கி வடிக்கப்பட்டு, தேவனுடைய புத்திரர் வெளிப்படுதலை அது கொண்டு வந்து, தேவ ஆவியானவர் இந்த மனிதர்களுக்குள் பரிபூரணமாக வந்து, கிறிஸ்துவின் ஊழியத்தை போலவே அவர்களுடைய ஊழியமும் இருந்து, அவரையும் அவருடைய சபையையும் ஒன்றாக இணைக்கின்றது. 16கூர்நுனிக் கோபுரத்தின் வரலாற்றை எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்? ஒரு ஸ்திரீ மாத்திரம் கையுயர்த்தினாள் என்று நினைக்கிறேன். சரி. தேவன் மூன்று வேதாகமங்களை எழுதிவைத்தார். அவைகளில் ஒன்று வானராசிகள். அதுதான் அளிக்கப்பட்ட முதலாம் வேதாகமம். மனிதன் மேலே நோக்கிப் பார்த்து தேவன் பரலோகத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியம். நீங்கள் வானராசிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டே வாருங்கள். நீங்கள் எப்பொழுதாவது அதைக் குறித்து படித்ததுண்டா? அது, ஒவ்வொரு காலத்தையும் குறிப்பிடுகின்றது, மகர ராசி காலத்தையும் கூட, அது முதலில் கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கின்றது. வானராசிகளின் முதல் ராசி எது? கன்னிராசி. அதன் கடைசி ராசி எது? சிம்ம ராசி. அவை, முறையே கிறிஸ்துவின் வருகையையும் இரண்டாம் வருகையையும் சித்தரிக்கின்றன. எல்லாமே வானராசிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. அடுத்த வேதாகமம் கல்லில் எழுதிவைக்கப்பட்டது. அது, ''கூர்நுனிக் கோபுரம் என்றழைக்கப்படுகிறது. தேவன் கூர்நுனிக் கோபுரத்தில் எழுதி வைத்தார். அவைகளை நீங்கள் படித்து, பழைய சரித்திரங்களையும், யுத்தங்களையும் ஆராயலாம். ஜலப்பிரளய அழிவுக்கு முன்பு எவ்வாறு கட்டப்பட்டன என்று. 17மூன்றாவதாக அவர் வேதாகமத்தை காகிதத்தில் எழுதி வைத்தார். வரவிருந்த புத்திகூர்மை பொருந்திய உலகிற்காக இது எழுதிவைக்கப்பட்டது. தேவன் காலங்கள் தோறும் அசைந்து வந்து, இப்பொழுது நாம் சிம்மத்தின் காலத்தில் இருக்கிறோம். கூர்நுனிக் கோபுரம் தலைக்கல்லால் பொருத்தப்பட வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். நாம் வெளிப்படுத்தின விசேஷத்தின் கடைசி அதிகாரத்தில் இருக்கிறோம். நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் இருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறதாக விஞ்ஞானம் அறிவிக்கிறது. ஓ, நாம் எங்கு வந்துள்ளோம் என்பதை எண்ணிப் பாருங்கள். கவனியுங்கள், இப்பொழுது நாம் கூர்நுனிக் கோபுரத்தை எடுத்துக் கொள்வோம். அது எளிது. அது முக்கோண வடிவில் அமைந்துள்ளது. சபையின் ஆரம்ப காலத்தில், லூத்தரின் சீர்திருத்த காலத்திற்கு பின்பும், ஒரு மனிதன் தன்னைக் கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்வானானால், அது அவனுடைய ஜீவனுக்கும், மரணத்திற்கும் இடையேயுள்ள பிரச்சினையாக இருந்தது. அவன் தன்னைக் கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொண்டால், அவர்கள் அவனைக் கொன்று போட்டனர். எனவே, அவர்கள் துன்புறுத்தலின் வழியாக... ஒவ்வொரு காலத்திலும் கிறிஸ்தவர்களுக்கு துன்புறுத்தல் நேர்ந்தது. ''கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.'' லூத்தரின்காலத்தில், ''லூத்தரன்'' என்று அழைத்துக் கொள்வது மிகவும் பயங்கரமானது. அவர்கள் மூடபக்தி வைராக்கியம் கொண்டவர்கள் என்று கருதப்பட்டு, அவர்களுக்கு மரண தண்டனையும் கூட விதிக்கப்பட்டது. அநேகமுறை லூத்தரன்கள் கழுமரங்களில் (stakes) எரிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். 18அதன் பின்பு சபை குறுகிக்கொண்டே வந்தது - கூர்நுனிக் கோபுரத்தைப் போன்று. அது கிருபையின் வேறொரு படியை அடைந்தது. அதுதான், ''பரிசுத்தமாக்கப்படுதல்'' வெஸ்லியின் காலம். வெஸ்லி ஆங்கிலிகன் சபையை எதிர்த்து, ''பரிசுத்தமாக்கப்படுதல் என்பதைக் குறித்து போதித்தார். அவர்களும் சிறுபான்மையோராக இருந்தனர். அவர்களும் மூடபக்தி வைராக்கியம் கொண்ட குழு என்று அழைக்கப்பட்டனர். இங்குள்ளவர்களில் எத்தனை பேர் முன்பு மெதோடிஸ்டுகளாக இருந்து, மெலோடிஸ்டு சபையுடன் தொடர்பு கொண்டிருந்தீர்கள்?பாதிபேர். மெதோடிஸ்டு சபை ஒரு காலத்தில் அநேகமாக பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்ததென்று உங்களுக்குத் தெரியுமா? நான் மெதோடிஸ்டு சபைகளுக்கு சென்றிருக்கிறேன். அங்குள்ளவர்கள் தரையில் விழுவதையும், பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வருவதைத் தடுக்க, அவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து விசிறியால் வீசுவதையும் நான் கண்டிருக்கிறேன். கென்டக்கியின் மலைகளில் மெதோடிஸ்டுகள் இருந்தனர். அவர்கள் இவ்விதம் செய்தனர் என்பது உண்மை. நீங்கள் இப்பொழுது அந்த சபையில் அங்கத்தினர்களாக சேர்ந்து கொள்கிறீர்கள். ஆனால், முன் காலத்தில் இருந்த மெதோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும் பீடத்தினருகில் சென்று, ஒருவரையொருவர் முதுகில் அடித்து, ஏதோ ஒன்றை பெற்றுக் கொண்டனர். அதன் பின்பு, அவர்கள் சற்று வித்தியாசமானவர்களாக விளங்கினர். ஆனால், இக்காலத்திலோ நீங்கள் புத்தகத்தில் உங்கள் பெயரை எழுதிக் கொண்டு, ''நான் மெதோடிஸ்டு'' என்று உங்களை அழைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் மேல் சற்று தண்ணீர் தெளிக்கப்படுகின்றது. அவ்வளவுதான், அதன் பின்பு நீங்கள் சென்று, குட்டை கால்சட்டை அணிந்து, அழகுபடுத்தும் சாதனங்களை உபயோகித்து. குதிரை பந்தயத்துக்கு சென்று பந்தயம் கட்டி, சூதாடி, இவையனைத்தையும் செய்து, அதே சமயத்தில் உங்களை நல்ல மெதோடிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்கிறீர்கள். அவர்களல்ல மெதோடிஸ்டுகள். அவர்கள் சபையை சேர்ந்து கொள்பவர்கள். பாப்டிஸ்டுகளும் அப்படித்தான். பிரஸ்பிடேரியன்களும் அப்படித்தான் இருக்கின்றனர். 19''தேவனுக்குப் பேர பிள்ளைகள் கிடையாது'' என்று டேவிட் ட்யூபிளஸிஸ் கூறினார். தேவனுக்குப் பேர பிள்ளைகள் எக்காலத்தும் இருந்ததில்லை. அவருக்கு மகன்கள் உள்ளனர். ஆனால், பேர பிள்ளைகள் கிடையாது. அது உண்மை. மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தெகொஸ்தே போன்ற சபைகளைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய பெற்றோர் அதில் அங்கத்தினர்களாக இருந்த காரணத்தால் அவர்களும் அங்கத்தினராயுள்ளனர். அப்படியானால் நீங்கள் பேர பிள்ளைகளாகி விடுகின்றீர்கள். உங்கள் பெற்றோர் மகன்கள், நீங்கள் பேர பிள்ளைகள், பாருங்கள்? தேவனுக்கு அவ்விதம் எதுவும் கிடையாது. சபையானது அப்படிப்பட்ட அநேகரைக் கொண்டுள்ளது. ஆனால்... தேவனுக்கு அப்படிப்பட்டவர்கள் கிடையாது. 20இதை கவனியுங்கள். அது குறுகிக்கொண்டே வந்து சபை சிறுபான்மையோராகி, பெந்தெகொஸ்தேயினரின் காலம் வருகின்றது. அது, அநேகரைப் புறம்பாக்கியது. அது என்ன செய்தது? மெலோடிஸ்டுகளையும், லூத்தரன்களையும் பின்னால் விட்டுவிட்டது. இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் பெந்தெகொஸ்தே காலத்தையும் விட்டு நகர்ந்து சென்றுவிட்டார். பெந்தெகொஸ்தேயினர் என்ன செய்தனர்? அவர்கள் ஸ்தாபனங்கள் உண்டாக்கிக் கொண்டு, ''நாங்கள் அசெம்பிளிஸ் ஆப்காட்,'' ''நாங்கள் ஒருத்துவக்காரர், நாங்கள் இருத்துவக்காரர்.'' நாங்கள், தேவ சபையினர். எங்களைச் சேராவிட்டால். உங்கள் பெயர் எங்கள் புத்தகத்தில் இராவிட்டால், நீங்கள் பரலோகம் செல்ல மாட்டீர்கள், என்றெல்லாம் அர்த்தமற்ற காரியங்களைப் பேசுகின்றனர். நீங்கள் பாப்டிஸ்டு, மெதோடிஸ்டு, பிரஸ்பிடேரியன் யாராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவன் உங்கள் பெயரை ஜீவபுஸ்தகத்தில் எழுதினால் மாத்திரமே, உங்கள் பெயர் ஜீவபுஸ்தகத்தில் காணப்படும். நீங்கள் நித்திய ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்டிருந்தால் தேவன் எப்படியாவது, எந்த விதத்திலாவது, உங்களை அழைப்பார். அவர் நிச்சயம் அப்படி செய்வார். ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும், என்னிடத்தில் வரும்.'' நீ, எந்த சபையை சேர்ந்தவன் என்பதற்கும் இதற்கும் யாதொரு தொடர்புமில்லை. எந்த ஸ்தாபனமும், உனக்கு ஒன்றையும் செய்ய முடியாது. நீ தேவனுடன் செல்வதற்கு ஒருக்கால் அவை அதிக தடையாயிருக்கலாம். அதை தவிர அவை வேறொன்றையும் செய்ய முடியாது. அவை உங்களை ஒரு கூட்ட விசுவாசிகளோடும், அவ்விசுவாசிகளோடும் ஒன்றாக இணைக்கின்றன. அத்தகைய இணைப்பை நீங்கள் எங்கு சென்றாலும் காண்கிறீர்கள். பரலோகத்திலும் அவ்வித இணைப்பு காணப்பட்டது. அது சரிதான். ஆனால், நீங்களோ உங்கள் ஸ்தாபனங்களை நோக்கியிருக்கிறீர்கள். இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் ஒருவர் மாத்திரமே நோக்கப்பட வேண்டியவராயிருக்கிறார். 21நாம் இப்படியே தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டு போனால்... எத்தனை பேர்... கூர்நுனி கோபுரத்தைக் குறித்து படித்துள்ளதாக... இந்த ஸ்திரீ கையுயர்த்தினாள் என்று நினைக்கிறேன். கூர்நுனிக்கோபுரம் தலைக்கல்லால் பொருத்தப்படவில்லையென்று உங்களுக்குத் தெரியுமா? அதில் தலைக்கல் இருந்ததா? அதன் மேல் தலைக்கல் வைக்கப்படவேயில்லை. அவர்களால் அதைகண்டு பிடிக்க முடியவில்லை. அதற்கு என்ன, நேர்ந்ததென்று அவர்களுக்கு தெரியாது. ஏன்? அதன் உச்சியில் தலைக்கல் ஏன் வைக்கப்படவில்லை? ஏனெனில், அவர் (இயேசு) வந்தபோது புறக்கணிக்கப்பட்டார். அவர் புறக்கணிக்கப்பட்ட கல். அந்த தலைக்கல்லைச் சுற்றிலும் பொருத்தப்பட வேண்டிய கற்கள் தலைக் கல்லைப் போலவே இருந்து எல்லாவிடங்களிலும் மிக அழகாக பொருந்துகின்றன. கூர்நுனிக் கோபுரம் மிகவும் பரிபூரணமாக அமைந்து அந்த கற்களின் இடையில் ஒரு சவரகன் கத்தியும் (Razor Blade) கூட எங்கேயும் நுழைய முடியாது. அவ்வளவு அழகான கொத்து வேலை (Masonry). அவைகளில் சில கற்கள் நூற்றுக்கணக்கான டன்கள் எடையுள்ளன. ஆயினும் அவை ஒன்றுக்கொன்று மிகவும் பரிபூரணமாக பொருந்துகின்றன. 22அப்படித்தான் தேவன் தமது சபையை அமைத்து வருகிறார் நாம் ஒரே இருதயத்துடன், ஒரே மனதுடன் இசைவாக இணைகிறோம். சிலர், ''முன் காலத்திலிருந்த லூத்தரன்கள் ஒன்றுமில்லை'' எனலாம். அதை நம்பாதீர்கள். முன்காலத்து பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் போன்ற மற்றவர்களைப் போலவே லூத்தரன்களும், உயிர்த்தெழுதலின் போது உயிர்த்தெழுவார்கள். தேவனுடைய பிள்ளைகள் அனைவருமே உயிர்த்தெழுதலில் பங்கு கொள்வார்கள். ஜனங்கள் இன்று, ''ஓ, எழுப்புதல் ஒன்று பரவி கோடிக்கணக்கான பெந்தெகொஸ்தேயினரை இரட்சிக்கும். அவர்கள் எல்லோரும் எடுத்துக் கொள்ளப்படுதலில் பங்கு கொள்வார்கள்.'' என்கின்றனர். நீங்கள் கூறுவது தவறு. எடுத்துக் கொள்ளப்படுகளில் ஆயிரக்கணக்கானவர் பங்குக்கொள்வர் என்பது உண்மையே. ஆனால், ஆராயிரம் ஆண்டு காலத்தில் இரட்சிக்கப்பட்டவர்களை அது கொண்டதாயிருக்கும். அவரவர் காலத்தில் அவரவரிடம் வந்த வெளிச்சத்தில் மனிதர் நடந்து பாவங்களைக் கடந்தனர். அவர்களிடம் வெளிச்சம் வந்தபோது, அவர்கள் அதை நிராகரித்த போது இருளில் விடப்பட்டனர். அவர்கள் நடந்து சென்ற போதோ.... 23இப்பொழுது, கவனியுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மிக அருகாமையில் உள்ளபடியால், இப்பொழுதுள்ள ஆவியானவர். நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம். இப்பொழுது, நாம் தலைக்கல் வரப்போகும் காலத்தில் இருக்கிறோம். சபையானது கிறிஸ்துவைப் போல் பரிபூரணமாக இருந்து, கிறிஸ்துவும் சபையும் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும். அதே ஆவி கிறிஸ்துவின் ஆவி உங்களில் வாசமாயிருந்தால், அது நீங்கள் கிறிஸ்துவின் வாழ்க்கையை வாழும்படி செய்து, கிறிஸ்துவின் கிரியைகளை நடப்பிக்கும்படி செய்யும். என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இயேசு அவ்வாறு கூறினார். பாருங்கள்? நமக்கு ஒரு ஊழியம் வரப்போகின்றது. அது கிறிஸ்துவின் ஜீவியத்தைப் போலவே பரிபூரணமாய் அமைந்திருக்கும். அந்த ஊழியம் எதை அடையாளம் காண்பிக்கிறது? கர்த்தருடைய வருகையை. இன்று உலகின் நிலையைப் பாருங்கள். க்ரூசேவ் என்ன சொல்லுகிறார் என்பதைக் கவனியுங்கள். உலக முழுவதிலும் தற்பொழுது ஏற்பட்டுள்ள போராட்டங்களைப் பாருங்கள். எந்த நேரத்திலும் இவ்வுலகம் ஒரு நொடிப்பொழுதில் தவிடு பொடியாகி விடக்கூடும். அது உண்மை. அது மிகவும் அருகாமையிலுள்ளது. செய்திதாளைப் படிக்கும் அல்லது வானொலியைக் கேட்டும் எந்த புத்திசாலியும், அது மிக அருகாமையிலுள்ளதென்று அறிவான். ஆனால், அது நிகழ்வதற்கு முன்பு கிறிஸ்து சபைக்காக வருவார். அப்படியானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை எவ்வளவு சமீபமாயுள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஒருக்கால் இன்றிரவு கூட்டம் முடிவதற்கு முன்பும் கூட அது நிகழலாம். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். அது முற்றிலும் உண்மை. 24சபை முன்னேறிக் கொண்டே வந்து, இந்நிலையை அடைந்துள்ளதை கவனித்துக் கொண்டே வாருங்கள். சரித்திரம் படிக்கும் சரித்திரக்காரர்களே, இதை உங்கள் மனதில் கிரகித்துக் கொள்ளுங்கள். கத்தோலிக்க மார்க்கத்திலிருந்து வெளிவந்து ''நீதிமானாக்கப்படுதல்'' என்பதன் கீழ் புதிதாக வந்த லூத்தரன் சபை நகர்ந்து செல்வதை கவனியுங்கள். பின்பு, ''பரிசுத்தமாக்கப்படுதல்'' என்பதன் கீழ் வெஸ்லி சற்று அருகில் வருவதை கவனியுங்கள். இது வேத வாக்கியங்களுடன் பொருந்துகின்றது. அடுத்தபடியாக வந்தது பெந்தெகொஸ்தே காலம். இந்த காலத்தில் ஆவிக்குரிய வரங்கள், திரும்பவும் அளிக்கப்பட்டன. இப்பொழுது, தலைக்கல் வரைக்கும் உள்ள காலத்தை கவனியுங்கள். நான் கூறுவது புரிகின்றதா? கர்த்தருடைய வருகை, அவர் வெளிப்படுகின்றார். தேவன் எல்லா சிருஷ்டிகளிலிருந்தும், சபையானது தான் பொருத்தப்பட வேண்டிய ஸ்தானத்தைக் கண்டுகொள்ள காத்துக் கொண்டிருக்கிறார். 25தொல்லை என்னவெனில், நான் சந்தித்த அனைவருமே. நான் அயல் நாடு செல்ல எத்தனித்திருந்தேன்... அயல் நாடு செல்ல வேண்டிய அனைவருமே, மிஷனரிமார்கள், மற்றுமுள்ளவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமென்று உங்களுக்குத் தெரியும். நான் மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட சமயத்தில், கூழ் போன்ற ஒன்றை அவர்கள் எனக்குக் குடிக்கக் கொடுத்து விட்டு, என்னை அறைக்கு வெளியே கொண்டு வந்தனர். நான் அன்றைக்கு வெளியே அமர்ந்திருந்தேன். கூழ் போன்ற அந்த சாதனம் என் வயிற்றை விட்டு வெளிவருமா என்று அவர்கள் பார்க்க வேண்டும். நான் சுற்றும் முற்றும் பார்த்த போது, அங்கு ஒரு ஸ்திரீயைக் கண்டேன். நான் வரிசையில் லுள்ள ஒவ்வொரு மனிதனையும் கடந்து அவளை அடைந்தேன். அவள் மரணத்தருவாயில் இருப்பது போல் எனக்குத் தோன்றினது. நான் அவளருகில் சென்று, ''என்னை மன்னியுங்கள், அம்மாளே'' என்றேன். அவள், எப்படியிருக்கிறீர்கள்?'' என்று கேட்டாள். ஓ, அவள் மிகவும் வியாதிப்பட்டிருந்தாள். ''உங்களுக்கு என்ன கோளாறு?'' என்று வினவினேன். அவள், ''என் மகளைக் காண நான் டூசானுக்கு சென்றிருந்த போது வியாதிப்பட்டேன். எனக்கு என்ன கோளாறு என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை'' என்றாள். நான், ''உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன், நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பவன். நீங்கள் கிறிஸ்தவளா? அந்நேரம் வருமானால் நீங்கள் செல்ல ஆயத்தமா?'' என்று கேட்டேன். அதற்கு அவள், நான் இன்ன, இன்ன சபையை சார்ந்தவள் என்று கூறினாள். ''நான் அதைக் கேட்கவில்லை. நீங்கள் தேவனுடைய ஆவியால் நிரம்பின் கிறிஸ்தவளா? அவர் உங்களை அழைத்தால், நீங்கள் செல்ல ஆயத்தமா என்று தான் கேட்கிறேன்'' என்றேன். நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்று அவள் அறியாமலிருந்தாள். பாருங்கள், உலகம் எத்தகைய பரிதாபகரமான நிலையில் உள்ளதென்று! 26''தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.'' இப்பொழுது, நான் படித்த ஒன்றை உங்களுக்குப் படித்துக் காண்பிக்க விரும்புகிறேன். இப்பொழுது நாம், ''அவருடைய சித்தத்தின் இரகசியம்'' என்பதற்கு வேதாகமத்தைத் திருப்புவோம். ஒரு நிமிடம் எபிரெயர் நிருபத்திற்கு திருப்புவோம். எபிரெயர்; 7ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு நல்லுணர்வு அளிக்கப்போகும் ஒன்றை இப்பொழுது படித்து காண்பிக்கப் போகிறேன். அதை நினைத்துப் பார்க்கும் போது, நாம் உன்னதங்களில் வீற்றிருக்கும் நல்லுணர்வு நமக்குண்டாகும். எபிரெயர்; 7ம் அதிகாரம்: இந்த மெல்கிசேதேக்கு (கவனியுங்கள்) சாலேமின் ராஜாவும் உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்... 27இந்த இரகசியம் என்ன? இது தான் இரகசியம். இதை கவனியுங்கள். அவருடைய இரகசியத்தை அறிவிக்கும் இந்த மனிதன் - இந்த மெல்கிசேதேக்கு - யார்? நீங்கள் எபிரெயர்; 7ம் அதிகாரத்திற்கு திருப்பிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், (நீங்கள் திருப்பும் வரை உங்கள் ஒவ்வொரு வருக்காகவும் காத்திருக்கிறேன்.) பவுல் பேசுகின்றான் - கலாத்தியர் நிருபத்தை எழுதிய அதே மனிதன். இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்! ராஜாக்களை முறியடித்து வந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டு போய், அவனை ஆசிர்வதித்தான். இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும்! பின்பு சாலேமின் ராஜா என்பதற்கு (யார் இந்த மனிதன்?) ''சமாதானத்தின் ராஜா'' என்றும் அர்த்தமாம். இவன் தகப்பனும், தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவுயுடையவனாயிராமல்.... 28இந்த மனிதன் யார்? யார் இவர்? இவருக்கு தகப்பனும் இல்லை, தாயும் இல்லை. இவருக்கு துவக்கமும் இல்லை இவர் மரிக்கப் போகும் தருணமும் இல்லை. ராஜாக்களை முறியடித்து வந்த ஆபிரகாமை இவர் எதிர்கொண்டு போய் சந்தித்தார். ஆபிரகாம் என்ன செய்தான்? தான் இழந்து போன தன் சகோதரனாகிய லோத்தை மீட்டுவர அவன் சென்றிருந்தான். அவன் ராஜாக்களைக் கொன்று போட்டான். பத்து அல்லது பதினைந்து ராஜாக்களையும், அவர்களுடைய ராஜ்யங்களையும் என்று நினைக்கிறேன். ஆபிரகாம் தன் வேலைக்காரக்கு ஆயுதம் தரிப்பித்து, இராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து, ராஜாக்களை முறியடித்தார்கள். மெல்கிசேதேக்கு எப்பொழுது வருகிறார் என்று பாருங்கள்? இராக்காலத்திலே. ஓ, சகோதரனே, நாம் இருளில் இப்பொழுது கிரியை செய்து வருகிறோம். நமக்கிருக்கும் ஒரே ஒளி சுவிசேஷ ஒளி மாத்திரமே. யுத்தம் முடிந்த பிறகு ஆபிரகாம் தன்னை பிரித்துக் கொண்டு லோத்தை மீட்டு திரும்பி வந்தான். அவன் திரும்பி வரும் வழியில்.... அந்த வரலாற்றை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள, சற்று ஆதியாகமம் 14ம் அதிகாரத்துக்கு செல்வோமா. அது, ஆதியாகமம்; 14ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். ஆம், நாம் ஆதியாகமம் 14:18லிருந்து தொடங்குவோம்.... மெல்கிசேதேக்கு... அதாவது ஆபிரகாம் ராஜாக்களை முறியடித்து, லோத்தையும் அவனுடன் சிறைபட்டு சென்ற மற்றெல்லா ஜனங்களையும் மீட்டு திரும்பி வரும் வழியில் எல்லாரையும். 29எல்லாம். தாவீதைப் போல... தாவீது என்ன செய்தான்? அவன் ஒரு கவணை எடுத்து சென்று, சிங்கத்தின் வாயிலிருந்து ஆட்டுக்குட்டியை மீட்டான். ஒரு கவணுடன் ஆட்டுக்குட்டியை மீட்கச் செல்வதைக் குறித்து சற்று யோசித்து பாருங்கள். இவ்வுலகில் யார் அவ்விதம் செல்வார்கள்? இங்குள்ளவர்கள் யார் அவ்விதம் செய்வீர்கள்? கைகளையுயர்த்துங்கள். நீங்கள் தவறு என்று கூற முற்படுகிறேன். நான் கையுயர்த்தவில்லை என்பதை கவனித்தீர்களா? நான் ஒரு துப்பாக்கியை வைத்துக் கொண்டு கூட அதை தொடர்ந்து செல்லமாட்டேன். ஆனால், தாவீதோ ஒரு கவணுடன் அதை பின் தொடர்ந்தான். கவண் என்பது ஒரு சிறிய தோல் துண்டைக் கொண்டு செய்யப்பட்டது. அதில் இரண்டு கயிறுகள் கட்டியிக்கும். அதில் கல்லை வைத்து சுழற்றி எரிய வேண்டும். கோலியாத்து கர்வமான பேச்சுடன் வந்த போது, தாவீது. அவனை எதிர்த்து சென்றான். அவன், ''பரலோகத்தின் தேவன் சிங்கத்தின் வாயிலிருந்து ஆட்டை தப்புவிக்கும்படி செய்தார். கரடியின் கைக்கும் அவர் என்னைத் தப்புவித்தார்'' என்றான். அது கவண்கல் அல்ல, அதனுடன் சென்ற தேவனுடைய வல்லமையே என்று தாவீது உணர்ந்திருந்தான். ஆட்டுக்குட்டியை மீட்டது தேவனே. 30இன்றைக்கும் பிதாவின் ஆடுகளைப் போஷிக்கும் அநேக தாவீதுகளை தேவன் வைத்துள்ளார். ஆம், ஐயா. எப்பொழுதாவது ஒரு கட்டி தோன்றுகிறது, அல்லது புற்றுநோய் தோன்றுகிறது. மருத்துவர்கள் ஒன்றுமே செய்ய முடிவதில்லை. ஆனால், தாவீதை அது நிறுத்த முடியாது. அவன் கவண் கல்லுடன் அதை பின் தொடருவான். என் நாமத்தினாலே நீங்கள் எதை கேட்டாலும், அதை நான் செய்வேன், மருத்துவர்கள் ஏளனமாய் சிரிக்கலாம்: எல்லோருமே பரிகாசம் செய்யலாம். அதைக் குறித்து எனக்குக் கவலையில்லை. எப்படியாயினும் அவன் அதை பின்தொடர்ந்து, ஆட்டை மீட்டெடுத்து மந்தையில் கொண்டு சேர்ப்பான். ஆம், ஐயா! ''இது தேவனுடைய பிள்ளை. உன் கையை அவன்மேலிருந்து எடுத்துவிடு,'' அவன் சிங்கத்தை கீழே வீழ்த்துகிறான். அது, எழுந்து அவன் மேல் பாய்கிறது. அவன் அதன் தாடியைப் பிடித்து அதை கொன்று போடுகிறான், சிவந்த மேனியுள்ள ஒரு இளைஞன். ஒருக்கால் அவனுடைய எடை எண்பது அல்லது தொண்ணூறு பவுண்டு இருந்திருக்கும். 31இப்பொழுது கவனியுங்கள். சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு, அதாவது சமாதானத்தின் ராஜா. சாலேம் மலைக்கு அப்பால் உள்ளது - அதாவது எருசலேமின் ராஜா. அதுதான் அவர். எருசலேமின் ராஜா. எருசலேம் முன்பு சாலேம் என்று அழைக்கப்பட்டது. அதற்குஇ ''சமாதானம்'' என்று அர்த்தம். அது எருசலேம் என்று அழைக்கப்படுவதற்கு முன்பு சாலேம் என்று அழைக்கப்பட்டது. அவர் காலேமின் ராஜா,அவர் நீதியின் ராஜா. அவர் சமாதானத்தின் ராஜா - சாலேமின் ராஜா. அவருக்குத் தகப்பனும் இல்லை, தாயும் இல்லை. அவருக்கு வம்சவரலாறு இல்லை. யார் இவர்? அவரைக் கவனியுங்கள். யுத்தம் முடிந்தவுடன், வெற்றி பெற்றவுடன், அவர் என்ன செய்கிறார் என்பதைக் கவனியுங்கள். ஆதியாகமம்; 14ம் அதிகாரம்: அன்றியும் உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும், திராட்சரசமும் கொண்டு வந்து, அவனை ஆசீர்வதித்து: வானத்தையும், பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக. உன் சத்துருக்களை, உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். ஆதி;14:18-20. சற்று தொடர்ந்து வாசிப்போம்: சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான். அதற்கு ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சாட்டையாகிலும், பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று, [கவனியுங்கள், அதை அவன் எப்படியாக சுருக்கமாக கூறினான் என்று, ம்ம், அவன்தான் அவனுக்கு கொடுத்தான்.] வானத்தையும், பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன். வாலிபர் சாப்பிட்டது போக..... ஆதி;14:21-24. 32கவனியுங்கள். ராஜாக்களை முறியடித்து திரும்பி வந்து கொண்டிருக்கும் ஆபிரகாமை மெல்கிசேதேக்கு சந்தித்தவுடன்; தேவனைக் குறித்த இரகசியம் இப்பொழுது வெளிப்படுகிறது. அவர் யார்? யாருக்கும்... அவருடைய வம்சவரலாற்றை அவர்கள் கண்டு பிடிக்க முடியவில்லை. ஏனெனில், அவருக்குத் தகப்பனும் இல்லை. தாயும் இல்லை. அவருக்கு துவக்கத்தின் நேரமும் இல்லை, அவருக்கு மரிக்கும் நேரமும் இல்லை. அவர் யாராயிருப்பினும், அவர் இன்னமும் உயிரோடிருக்கிறார். அவருக்கு துவக்கம் இல்லை. அப்படியானால் அவர் ஏல், ஏலா, ஏலோகிம் — தனிமையில் வாழும் சர்வவல்லமையுள்ள தேவனைத் தவிர, வேறு யாராகவும் இருக்க முடியாது. இயேசுவுக்கு தகப்பன் உண்டு, தாயும் உண்டு. அவருக்கு துவக்கத்தின் நாள் ஒன்றிருந்தது. இவ்வுலகில் அவருடைய வாழ்க்கை முடிவு பெற்ற நாள் ஒன்றும் இருந்தது. ஆனால், இந்த மனிதனுக்கோ தகப்பனும் இல்லை, தாயும் இல்லை, ஆமென். தகப்பனும், தாயும் கிடையாது. இயேசுவுக்கு தகப்பனும், தாயும் இருந்தனர். இந்த மனிதனுக்கோ, தகப்பனும் இல்லை, தாயும் இல்லை. ஆமென். யுத்தம் முடிந்து ஆபிரகாம் தன் ஸ்தானத்தை வகித்தவுடன், அவர் என்ன செய்தார்? சபையானது தன் ஸ்தானத்தை வகித்தவுடன், நாம் சுவிகார புத்திரராகும்படி பரிசுத்த ஆவியானவரால் அழைக்கப்படுகின்றோம். ஒவ்வொரு மனிதனும், அவன் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் அவனை அழைத்தாரோ, அந்த ஸ்தானத்தை வகித்து, தன் வாழ்க்கை பாதை முடிவு பெறும் வரைக்கும் அதில் உறுதியாய் நின்று, இழந்து போனவர்களை நாடிச் செல்வானானால். 33முதலாவதாக பவுல் அதனின்று எல்லா பயத்தையும் நீக்கி, ''நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால், ஏதோ ஒருவித வேத சாஸ்திரத்தின் மூலம் உங்கள் மனதில் உணர்ச்சி கொள்ளாமலிருந்தால், நீங்கள் உண்மையாகவே ஆவியினால் பிறந்திருந்தால், தேவன் உங்களை உலகத் தோற்றத்துக்கு முன்பே முன்குறித்து, உங்கள் பெயரை ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதி வைத்துவிட்டார் என்று தெளிவாகிறது. இப்பொழுது நாம், கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் வீற்றிருக்கிறோம். நாம் பரிசுத்த ஜனங்களாக, பரிசுத்த ஜாதியாக, தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாக, அவருக்கு சொந்த ஜனங்களாக, ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாக, தேவனுக்கு ஆவிக்குரிய பலிகளை அதாவது அவருடைய நாமத்திற்கு உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலிகளை செலுத்துகிறோம்'' என்றான். ஜனங்கள் நமது கூட்டங்களுக்கு வந்து, ''இவர்கள் பைத்தியக்காரர்கள்'' என்கின்றனர். உண்மையாகவே நாம் அப்படித்தான் இருக்கிறோம். ஏனெனில், தேவனுடைய ஞானம் உலகப்பிரகாரமான மனிதனுக்கு மூடத்தனமாய் உள்ளது. அவ்வாறே மனிதனுடைய ஞானம் தேவனுடைய பார்வையில் மூடத்தனமாய் காணப்படுகிறது. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று முரணாய் அமைந்துள்ளன. 34ஆனால், உண்மையான ஆவியால் நிரம்பின சபையோ, தேவனுடைய முழு வல்லமையும் பெற்றதாய், உன்னதங்களில் ஒருமித்து வீற்றிருந்து, தேவனுக்கு ஆவிக்குரிய பலிகளை, ஸ்தோத்திரங்களை, ஏறெடுக்கும். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மத்தியில் அசைவாடி, பாவத்தைப் பகுத்தறிந்து. அவர்களிடையே காணப்படும் தவறுகளை வெளிப்படையாகக் கூறி, அவைகளை சீர்படுத்தி சமப்படுத்துவார். ஏன்? அந்த இரத்தம் தோய்ந்த பலி சதாகாலமும் தேவனுடைய சமூகத்தில் உள்ளது. இன்று காலை நான் சிந்தித்ததை நினைவு கூருங்கள், நீங்கள் இரத்தத்தினால் இரட்சிக்கப்படவில்லை; உங்கள் இரட்சிப்பு இரத்தத்தினால் காக்கப்படுகின்றது. நீங்கள் கிருபையினால் விசுவாசத்தின் மூலம் இரட்சிக்கப்பட்டீர்கள். தேவன் உங்களை முன்குறித்திருந்த காரணத்தால், அவர் உங்கள் இருதயத்தை தட்டினார். நீங்கள் மேல் நோக்கிப் பார்த்து அதை விசுவாசித்து ஏற்றுக்கொண்டீர்கள். அப்பொழுது, இரத்தம் உங்கள் பாவங்களுக்காக பாவ நிவாரணம் செய்தது. ''பாவி ஒருவன் பாவஞ் செய்தால், தேவன் அவனைக் குற்றஞ்சாட்டுவதில்லை,'' என்று நான் கூறியதை ஞாபகம் கொள்ளுங்கள். ஒரு பாவி ஆரம்பம் முதற்கொண்டே பாவியாக இருக்கிறான். ஆனால், ஒரு கிறிஸ்தவன் பாவஞ் செய்வானானால், தேவன் அவனை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்துகிறார். தேவன் அவனை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தினதால், கிறிஸ்து நமது ஆக்கினையை தம்மேல் ஏற்றுக்கொண்டார். எனவே, ''கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை'' நீங்கள் தவறு ஏதாகிலும் செய்ய நேர்ந்தால், அது வேண்டுமென்று இல்லை. நீங்கள் வேண்டுமென்று பாவம் செய்வதில்லை. வேண்டுமென்று பாவம் செய்பவன், வேண்டுமென்று அப்படி செய்து, அந்த சரீரத்திற்குள் இன்னும் வராதவனாயிருக்கிறான். ஆனால், அந்த சரீரத்திற்குள் ஒருவன் வந்துவிட்டால், அவன் மரித்தவனாகி விடுகிறான். அவனுடைய ஜீவன் கிறிஸ்துவின் மூலமாய் தேவனுக்குள் மறைந்திருந்து, அது பரிசுத்த ஆவியால் முத்தரிக்கப்படுகிறது. அவன் ஆழமாக அதற்குள் மறைந்திருப்பதால், பிசாசு அவனைக் கண்டு பிடிக்கவே முடியாது. பிசாசு அவனுக்குள் வரவேண்டுமானால் அவன் அந்த சரீரத்திலிருந்து வெளிவர வேண்டும். நீங்களோ மரித்தவர்களாயிருக்கிறீர்கள். 35மரித்துப் போன ஒருவனிடம் அவன் மாய்மாலக்காரன் என்று சொல்லிப் பாருங்கள். என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். ''ஏய் மாய்மாலக்காரனே'' என்று சொல்லி அவனை உதைத்துப் பாருங்கள். அவனால் ஒரு வார்த்தையும் கூட பதிலுரைக்க முடியாது. அவன் பிணமாக அப்படியே படுத்துக்கிடப்பான். அது போன்று, கிறிஸ்துவுக்குள் மரித்த ஒரு மனிதனை நீங்கள் மாய்மாலக்காரன் என்றோ அல்லது வேறெதாகிலும் அழைத்தால், அவன் கோபப்படமாட்டான். அவன் மெள்ள நழுவி உங்களுக்காக ஜெபம் செய்வான். அது உண்மை. ஆனால், சிலர் இன்னும் மரிக்காமல் உயிருடன் இருக்கின்றனர். மரித்தவர்களை நாம் அடக்கம் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். எனவே, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களை நாம் தண்ணீரில் அடக்கம் செய்கிறோம். சில சமயங்களில் உயிருள்ள அநேகரையும் கூட குரோதம், விரோதம் கொண்டவர்களை, நாம் அடக்கம் செய்து விடுகிறோம். சபையில் அப்படிப்பட்டவர்கள் அநேகர் உள்ளனர். அவர்களை நாம் பிரிக்க முடியாது. தேவன் அவர்களைப் பிரிப்பார். அவருடைய ஜனங்கள் யாரென்று அவருக்கு தெரியும். அவருடைய ஆடுகளை அவர் அறிந்திருக்கிறார். ஒவ்வொருவருடைய சத்தத்தையும் அவர் அறிவார். அவருடைய பிள்ளைகளை அவர் அறிந்திருக்கிறார். யாரை அழைக்க வேண்டுமென்று அவருக்குத் தெரியும். யாருக்கு இவைகளை அளித்திருக்கிறார் என்றும், யார் மூலமாய் அவர் தம்மை வெளிப்படுத்த வேண்டுமென்றும் அவருக்குத் தெரியும். தேவனுடைய பிள்ளைகள் செய்ய வேண்டிய காரியங்களில், தேவன் அவர்களுக்கு நம்பிக்கையூட்ட முடியும். அவர்கள் அதை கிரமமாக செய்வார்கள் என்று அவர் உறுதியாக அறிந்திருக்கிறார். 36தேவன் அப்படி செய்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? ஒரு நாள் சாத்தான் யோபுவைக் குறித்து கர்த்தரிடம், ''உமக்கு ஒரு தாசன் இருக்கிறானே'' என்றான். கர்த்தர், ''அவனைப் போல் பூமியில் ஒருவனும் இல்லை. அவன் உத்தமன்'' என்றார். அவன் பேரில் அவ்வளவு உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அப்பொழுது சாத்தான், “ஓ, அவனுக்கு எல்லாமே எளிதாக கிடைத்துள்ளது. என் கையில் அவனை சிறிது காலம் ஒப்படையும், உமது முகத்துக்கு நேராக உம்மை தூஷிக்கச் செய்வேன்'' என்றான். கர்த்தர், ''இதோ அவன் உன்கையிலிருக்கிறான். அவனுடைய உயிரை மாத்திரம் எடுத்துவிடாதே'' என்றார். யோபு அவரை நிந்திப்பதற்கு பதிலாக... அவன் என்ன செய்தான்? அவனுடைய பிள்ளைகள் மரித்த போதும், பிசாசு பொல்லாங்கான காரியங்களைச் செய்த போதும், அவன் தேவனை நிந்தித்தானா? யோபு எந்த கேள்வியும் கேட்கவில்லை. அவன் முகங்குப்புற விழுந்து அவரை வணங்கி, அல்லேலூயா! ''கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்'' என்றான். பார்த்தீர்களா? கர்த்தர் யோபின் பேரில் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் உங்களை எந்த அளவுக்கு நம்ப முடியுமென்று தேவன் அறிந்திருக்கிறார். என்னை எந்த அளவுக்கு நம்பலாம் என்று அவர் அறிந்திருக்கிறார். நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது, தமது பிள்ளையை ஸ்தானத்தில் பொருத்துவதைக் குறித்து. 37வேதத்திலே, யுத்தம் முடிந்த பின்பு, எல்லாம் முடிந்த பின்பு, அடுத்தபடியாக நாம் என்ன செய்ய வேண்டும்? யுத்தம் முடிந்த பின்பு நாம் என்ன செய்ய வேண்டும்? உங்களுக்குத் தெரியுமா? நாம் மெல்கிசேதேக்கை சந்திக்கிறோம். நாம் வேகமாக மத்; 16:16க்கு வேதாகமத்தை திருப்பி, அது சரியா இல்லையா என்று பார்ப்போம். பரி. மத்தேயு; 16ம் அதிகாரம், 16ம் வசனம்... இல்லை, அது தவறான பாகம். 26:26. அவர் 16:16ல் சீமோன் பேதுருவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். மன்னியுங்கள், அந்த பாகத்தை குறிப்பிட எண்ணவில்லை. 26:26, கடைசி இராப்போஜனம், அதை தான் நான் குறிப்பிட எண்ணினேன். மத்தேயு; 26ம் அதிகாரம், 26ம் வசனம். நாம் கடைசி இராப்போஜன பாகத்தை அடைந்து விட்டோம். அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள். இது பாவ மன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. [தவறான செயல்கள் புரியும் கிறிஸ்தவர்களுக்காக.] சரி, இப்பொழுது 29ம் வசனத்தைக் கேளுங்கள். இது முதல், இந்தத் திராட்சப்பழ ரசத்தை நவமானதாய் உங்களோடே கூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். என்ன? ஆபிரகாம் தன் ஸ்தானத்தைப் பெற்றுக்கொண்ட பின்பு மெல்கிசேதேக்கு புரிந்த அதே செயல். ஆபிரகாம் தன் ஆட்களை ஒழுங்காக நிறுத்தி போரில் வென்று திரும்பி வந்தான். அப்பொழுது மெல்கிசேதேக்கு அப்பத்துடனும் திராட்ச் ரசத்துடனும் அவனுக்கு எதிர்கொண்டு போனார். போர் முடிந்த பின்பு நாமும் அந்த புதிய உலகத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் கூட கலியாண விருந்தைப் புசிப்போம். ஓ, கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக! சரி. 38இப்பொழுது எபேசியர்; 10ம் வசனத்திற்கு வருவோம். தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். காலங்கள் நிறைவேறும் போது... அதை நாம் இதுவரை பார்த்தோம். எபேசியர்; 1ம் அதிகாரம் 9ம் வசனம், காலங்கள் நிறைவேறும் போது... காலங்களின் நிறைவேறுதல் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறது? எல்லா காலங்களும் நிறைவேறுதல் யாவும் ஓய்ந்துபோகும் காலம். மரணம் ஓய்ந்து போகும் காலம். வியாதி ஓய்ந்து போகும் காலம், எல்லா தாறுமாறான காரியங்களும் ஓய்ந்து போகும் காலம். பிசாசு தாறுமாறாக்கியது போன்ற அனைத்தும் ஓய்ந்து போகும் காலம். அப்பொழுது, காலம் என்பதே முடிவுபெறும். கவனியுங்கள். காலங்கள் நிறைவேறும் போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும், பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டுமென்று. ''சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கட்டப்பட வேண்டும்.'' இன்று காலை நான் கூறியது போன்று, நாம் கண்டுபிடிக்கும் இச்சிறு பொற்கட்டிகளை (nuggets) நாம் ஆதியாகமத்தில் மெருகேற்றலாம், யாத்திராகமத்தில் மெருகேற்றலாம், லேவியராகமத்தில் மெருகேற்றலாம். அப்படியே தொடர்ச்சியாக வெளிப்படுத்தின விசேஷத்திற்கு வருவோமானால், அவையாவும் இயேசுவில் முடிவு பெறும். நீங்கள் யோசேப்பை எடுத்துக் கொள்ளுங்கள், ஆபிரகாமை எடுத்துக் கொள்ளுங்கள், ஈசாக்கை எடுத்துக் கொள்ளுங்கள், யாக்கோபை எடுத்துக் கொள்ளுங்கள், தாவீதை எடுத்துக் கொள்ளுங்கள், இந்தப் பொற்கட்டிகளில் எதையாவது எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தேவனுடைய மனிதர்கள். அவர்கள் ஒவ்வொருவரிலும் இயேசுகிறிஸ்து காணப்பட்டாரா என்பதை அறிந்து கொள்ளுங்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் சகலவற்றையும் ஒன்று கூட்டுவதற்காக.'' 39இப்பொழுது நாம் 12ம் வசனத்தைப் பார்ப்போம்: கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம்.... ஓ, சுதந்தரம். நீங்கள் சுதந்தரிப்பதற்காக யாராகிலும் ஒருவர் உங்களுக்கு ஏதாவதை வைத்துவிட்டுப் போக வேண்டும். அது சரியா? சுதந்தரம். நமக்கு என்ன சுதந்தரம் உள்ளது? எனக்கு என்ன சுதந்தரம் உள்ளது? எனக்கு ஒன்றுமேயில்லை. ஆனால், தேவன் உலகத்தோற்றத்துக்கு முன்பே ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் என் பெயரை எழுதின போது, எனக்கு ஒரு சுதந்தரத்தை வைத்துவிட்டார். ஓ, நீங்கள், சகோதரனே, சற்றுபொறும், இயேசு உமக்காக, மரித்த போது அப்படி செய்தார் எனலாம். இல்லை, இல்லவே இல்லை, அந்த சுதந்தரத்தை எனக்காக கிரயத்துக்கு கொள்வதற்காகவே இயேசு வந்தார். அந்த வசனத்தை முழுவதுமாக படியுங்கள். தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன் குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம். 40உலக தோற்றத்துக்கு முன்பே தேவன், நாம் இந்த பாடத்தை படிப்படியாக படித்துக் கொண்டு வந்த விதமாக. தேவன் தனிமையில் வாழ்ந்தார் என்றும், அவருக்குள் அன்பு இருந்தது. என்றும் நாம் பார்த்தோம். அவருக்குள் தேவன் என்னும் தன்மை இருந்தது, ஆனால், அவரை சேவிப்பதற்கு அப்பொழுது ஒன்றுமேயில்லை. அவருக்குள் பிதா என்னும் தன்மை இருந்தது... அவர் அப்பொழுது தனிமையில் வாழ்ந்தார். அவருக்குள் இரட்சகர் என்னும் தன்மை இருந்தது. ஆனால், அப்பொழுது யாருமே இழக்கப்படவில்லை. அவருக்குள் சுகமளிப்பவர் என்னும் தன்மை இருந்தது இவையனைத்தும் அவருடைய தன்மைகளாம். ஆனால், அப்பொழுது எதுவுமேயில்லை. ஆனால், தம்முடைய சித்தத்தின் ஆலோசனை இவைகளை உண்டாக்கி, கிறிஸ்து இயேசு என்னும் ஒரே மனிதனுக்குள் எல்லாவற்றையும் மீண்டும் ஒன்று கூட்ட வேண்டுமென்று அவர் தீர்மானித்தார். ஓ, நான் இதைக்காணும் போது, அது இரகசியமாயிருப்பதில் வியப்பொன்றுமில்லை. 41கவனியுங்கள்.... கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி நாங்கள் முன் குறிக்கப்பட்டோம். நான், ஏதாவதொன்றிற்கு ஏற்ற சுதந்தரவாளியாயிருப் பேனானால் தேவன் என் இருதயத்தை தட்டி, ''வில்லியம் பிரான்ஹாமே, நான் நீண்ட காலத்திற்கு முன்பே, உலகத்தோற்றத்துக்கு முன்பே, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க உன்னை அழைத்தேன்'' என்பாரானால், எனக்கு ஒரு சுதந்தரமுண்டு. நித்திய ஜீவன் என்னும் சுதந்தரம் தேவன், இயேசுவை அனுப்பி அந்த சுதந்தரம் எனக்கு தத்ரூபமாகும்படி செய்தார். அதை சுதந்தரமாகப் பெற நான் செய்ய வேண்டியது ஒன்றுமேயில்லை. அது சட்டப்பூர்வமானது (Valid). நான் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. ஆனால், காலங்கள் நிறைவேறின போது, தேவன் தாம் நியமித்திருந்த காலத்தில், உலகத் தோற்றத்துக்கு முன்பாக அடிக்கப்பட்ட இயேசு என்னும் ஆட்டுக்குட்டியை அனுப்பினார். என் சுதந்தரத்தை நான் பெற்றுக்கொள்ள அவருடைய இரத்தம் சிந்தப்பட்டது. நான் என்னவாயிருக்க? அந்த சுதந்தரம் என்ன? புத்திரத்துவம். நான் தேவனுடைய புத்திரனாக. 42இது ஒருக்கால் உங்கள் மூச்சை திணறச் செய்யும். தேவனுடைய புத்திரர்களாக ஆன மனிதர்கள் சிறிய (amateur) தேவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? எத்தனை பேருக்கு அது தெரியும்? இயேசு அவ்வாறு கூறியுள்ளார் என்று எத்தனை பேர் அறிவீர்கள்?'' தேவர்களாயிருக்கிறீர்கள் என்று உங்கள் நியாயப்பிரமாணம் உரைக்கவில்லையா? நீங்கள் அவர்களை தேவர்கள் என்று அழைத்திருக்க... என்று இயேசு வேதாகமத்தில் கூறியுள்ளார். யோவான் ஆதியாகமம் 2ல், அவர்கள் தேவர்கள் என்று கர்த்தர் கூறினார், ஏனெனில், உலகத்தின் மேல் அவர்கள் முழு ஆதிக்கமும் பெற்றிருந்தனர். எல்லாவற்றின் மேலும் அவர்களுக்கு ஆதிக்கத்தை கர்த்தர் அளித்திருந்தார். ஆனால், ஆதாமோ தன் தேவத்துவத்தை - தன் புத்திரத்துவத்தை - தன் ஆதிக்கத்தை இழந்து போனான். சாத்தான் அந்த ஆதிக்கத்தை பறித்துக் கொண்டான். ஆனால், மகிமை, நாம் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் வந்து மீண்டும் அந்த ஆதிக்கத்தைப் பெற்றுக் கொள்வார்கள். நாம் காலங்கள் நிறைவேறுவதற்காக காத்திருக்கிறோம். அப்பொழுது, கூர்நுனிக் கோபுரம் உச்சியையடைந்து, தேவனுடைய புத்திரர் அனைவருமே வெளிப்பட்டு தேவனுடைய வல்லமை அப்பொழுது நடந்து சென்று (அல்லேலூயா) சாத்தான் பெற்றுள்ள ஆதிக்கம் அனைத்தையும் அவனிடமிருந்து கைப்பற்றப்படும். ஆம், ஐயா. அது இப்பொழுது அவனுக்கு சொந்தமாயுள்ளது. 43இயேசு தேவனிடமிருந்து புறப்பட்டுச் சென்ற வார்த்தை (logos) அது உண்மை. அவர் தான் தேவனுடைய குமாரன். பின்பு அவர் மனிதனை சிறிய தேவனாக உண்டாக்கினார். ''அவர் தேவ வசனத்தைப் பெற்றுக்கொண்ட தீர்க்கதரிசிகளை தேவர்கள் என்று அவர்கள் சொல்லியிருக்க...'' என்றார். தேவனே அவர்களைத் தேவர்கள் என்று அழைத்திருக்கிறார். அவர் மோசேயிடம், ''உன்னை நான் தேவனாக்கியிருக்கிறேன். ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்'' என்றார். ஆமென். வ்யூ! நான் பக்தியுள்ள பைத்தியக்காரனாக காணப்படுகிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், நான் பைத்தியக்காரன் அல்ல. ஓ, உங்கள் கண்கள் திறக்கப்பட்டால். இவைகளை நீங்கள் காணலாம். சரி. அவர் மனிதனை ஒரு தேவனாகப் படைத்தார். அவன் தன் ஆதிக்கத்திற்கு தேவனாயிருந்தான். அவனுடைய ஆதிக்கம் ஒரு கடல் தொடங்கி மறு கடல் வரைக்கும், ஒரு கடற்கரையிலிருந்து மறு கடற்கரை வரைக்கும் பரவியிருந்தது, அவனுக்கு அதன் மேல் ஆதிக்கம் இருந்தது. இயேசு பாவமில்லாத தேவனாக இவ்வுலகில் வந்தபோது அதை நிரூபித்தார். காற்று பலமாக அடித்தபோது அவர் அமைதியாயிரு'' என்று அதை அதட்டினார். ஆமென். அவர் மரத்தைப் பார்த்து, இனிமேல் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிப்பதில்லை'' என்று சபித்தார். சிறிய தேவர்களே, நீங்கள் மலையைப் பார்த்து சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி உங்கள் இருதயங்களில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், நீங்கள் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்றார் அவர். 44நீங்கள் ஆதியாகமத்திற்கு, தொடக்கத்திற்கு, மூல காரியத்திற்கு செல்லுங்கள். அது என்ன? இப்பொழுது உலகமும், இயற்கையும் தவித்து அழுது கொண்டிருக்கிறது. எல்லாமே அசைந்து கொண்டிருக்கிறது. எதற்காக? தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்காக. அப்பொழுது உண்மையான புத்திரர் மறுபடியும் பிறந்த புத்திரர், ஆவியினால் நிறைந்த புத்திரர் உரைப்பார்கள். அவர்களுடைய வார்த்தை ஆதரிக்கப்பட்டு, நிரூபிக்கப்படும். ''அந்த எல்லைக்கு இப்பொழுது நாம் வந்துள்ளோம், என்று நம்புகிறேன். இந்த மலையைப் பார்த்து சொல். அது அப்படியே ஆகும்.'' ''சகோதரனே, இன்னின்ன காரியம் நடைபெற வேண்டுமென்று விரும்புகிறேன். நான் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன்'' என்று யாராகிலும் கூறினால். ''கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அதை உனக்குத் தருகிறேன்'' ஆமென். அங்கு தேவனுடைய புத்திரர் வெளிப்படுதல் உறுதியாகும். ''ஓ, சகோதரனே, என் பயிர்கள் தீய்ந்துவிட்டன. மழையே இல்லை.'' ''கர்த்தரின் நாமத்தில் மழையை அனுப்புகிறேன். உன் பயிர்களை ஆசீர்வதிக்கிறேன்.'' ஓ, இயற்கை அனைத்தும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்காக தவித்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேவன் தொடக்கத்தில் அவ்வாறு நியமித்திருந்தார். அவர் மனிதனுக்கு ஆதிக்கத்தைக் கொடுத்திருந்தார். 45அவர் இயேசுவுக்கு அதை அருளினார். இயேசுவும் தமது நாமத்தில் அதை தந்தருளி, ''நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக் கொள்வதெதுவோ, அதை நான் உங்களுக்குக் கொடுப்பேன்'' என்னும் உறுதியளித்தார். ஓ, சகோதரன். பாமர்! தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. சபை அதன் ஸ்தானத்தை பெற்றுக் கொள்ளுதல். நான் ஏற்கனவே கூறினபடி, எபேசியர் நிருபம் யோசுவாவின் புத்தகத்துடன் இணைகின்றது, யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை அவர்களுக்குரிய இடத்தில் வைத்தான். அவன் எப்பிராயீமை ஓரிடத்தில் வைத்த பின்பு, அவர்கள் மனாசேவுக்கு அளிக்கப்பட்ட தேசத்தில் குடிபுகுந்து, மனாசே கோபமுண்டு சண்டையிட்டால், அவர்கள் எப்படி ஒற்றுமையுடன் இருக்க முடியும்? ''நான் பாப்டிஸ்டு, நான் மெதோடிஸ்டு, நான் பெந்தெகொஸ்தேயினன், நான் ஒருத்துவக்காரன், நான் இருத்துவக்காரன், நான் இன்னான்'' என்று கூறிக்கொண்டால்! அதைக் குறித்து நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள்? அமரிக்கையாயிருங்கள். தேவன் மாத்திரமே தமது சபையை - தேவனுடைய குமாரரையும் குமாரத்திகளையும் - ஸ்தானங்களில் வைப்பவர். தேவனே! அதைக் காண நான் உயிர் வாழ்வேனாக என்பதே என் விண்ணப்பம். சகோதரனே, அதை என் கைகளால் தொட்டு உணரக்கூடிய அளவுக்கு அது அருகாமையில் உள்ளது. அது இங்கேயேயுள்ளது. அதை காண நான் ஆவலாயுள்ளேன். வீதியில் நடந்து சென்று, நான் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாயிருந்த ஒருவன் படுத்துக்கிடப்பதைக் கண்டு, ''வெள்ளியும், பொன்னும் என்னிடத்திலில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எழுந்து நட'' என்று கட்டளையிட்டு அவனை சுகப்படுத்தும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். ஒ, தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்காக காத்திருத்தல். அல்லேலூயா, தேவன் அப்பொழுது தம்மை வெளிப்படுத்துவார். அப்பொழுது அது வியாதியை நிறுத்தும், புற்றுநோயை நிறுத்தும், எல்லா வியாதிகளையும் நிறுத்தும். 46புற்றுநோய் பயங்கரமானது என்னும் கருத்தைக் கொண்டிருக்கிறீர்களா? ஒரு நாள் வரப்போகிறது. அப்பொழுது மனிதரின் மாமிசம் அழுகி, அவர்கள் மரிப்பதற்கு முன்பே பருந்துகள் அவர்களுடைய மாமிசத்தைத் தின்னத் தொடங்கும் என்று வேதம் கூறுகின்றது. அதனுடன் புற்றுநோயை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, புற்றுநோய் சாதாரண பல்வலியைப் போன்றது. ஆனால், தேவனுடைய முத்திரையைத் தரித்திருப்பவர்களை அந்த பயங்கரமான வியாதி தொடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பயங்கரமான வாதைகள் ஜனங்களைத் தாக்குவதற்கு முன்பே நாம் உள்ளே நுழைந்து, தேவனுடைய ராஜ்யத்தில் நமது ஸ்தானத்தில் பொருத்தப்பட வேண்டும் என்று ஆவல் கொண்டிருக்கிறோம். ஓ, எவ்வளவு அருமையாயுள்ளது! காலங்கள், காலங்கள் நிறைவேறுதல், சுதந்தரம். நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம். 47நமது சுதந்தரம் நமக்கு எப்படி அளிக்கப்பட்டது? எதன் மூலமாக? முன் குறிக்கப்படுதலின் மூலம். முன்குறித்தல் என்பது ''முன்னறிதல்.'' உங்களைப் போதகராக அவர் நம்பலாம் என்று அவருக்கு எப்படித் தெரியும். தமது முன்னறிவின் மூலம். ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம். அது உண்மை. முன்குறித்தல். உனக்குள் என்ன இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். நீ இவ்வுலகில் தோன்றும் முன்பே உனக்குள் என்ன இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். அது தான் முடிவற்ற தேவன் நாமெல்லாரும் முடிவுள்ளவர்கள். நமது எண்ணங்களும் முடிவுள்ளவைகள். 48எனக்கு அது நேர்ந்தது முதற்கொண்டு, அது எனக்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாயுள்ளது (சகோ. பிரன்ஹாம் தான் கண்ட தரிசனத்தைக் குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்) அதைக் குறித்து நான் நினைக்கும் போது, அங்கு மகிழ்ச்சிகரமான நேரங்களில் நான் நின்றுகொண்டு, ''நாளை என்பது இங்கில்லை'' என்று நினைத்து பார்த்த போது அங்கு நேற்று என்பது கிடையாது, வியாதி என்பதில்லை, துயரம் என்பதில்லை, அங்கு சிறிது மகிழ்ச்சி என்பது கிடையாது. எல்லாமே மகிழ்ச்சி தான். ஓ, என்ன அங்கு நான் நின்று கொண்டு, ''அது என்ன?'' என்று வியந்த போது. ஒரு சத்தம் என்னிடம், ''இதுதான் பரிபூரண அன்பு. நீ நேசித்த அனைத்தும், உன்னை நேசித்த அனைத்தும் இப்பொழுது உன்னுடன் இங்குள்ளன'' என்றது. ''எங்களை உங்கள் ஊழியத்தில் கிடைத்த பரிசுகளாக கர்த்தராகிய இயேசுவினிடம் சமர்ப்பிப்பீர்கள். அங்கு அழகான பெண்களைக் கண்டேன். அவர்கள் என்னைப் பிடித்துக் கொண்டு, என் விலை மதிக்க முடியாத அன்பு சகோதரனே'' என்று கூச்சலிடுவதை கண்டேன். அந்த மனிதர்களும், கழுத்தில் இதுவரைக்கும் தலைமயிர் கொண்டவர்களாய், ஓடி வந்து என்னைப் பிடித்துக் கொண்டு, ''என் அன்பு சகோதரனே'' என்றனர். நான், ''இதன் அர்த்தம் என்ன?'' என்று வியந்தேன். அவரோ, ''இவர்கள் உன் ஜனங்கள்'' என்றார். நான், ''என் ஜனங்களா? பிரான்ஹாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இத்தனை பேர் இருக்க முடியாதே, இவர்கள் லட்சக் கணக்கில் அல்லவா இருக்கின்றனர்?'' என்றேன். அவர் இவர்கள் உன் மூலம் இரட்சிக்கப்பட்டவர்கள்'' என்றார். அல்லேலூயா. இவர்கள் உன் மூலம் இரட்சிக்கப்பட்டவர்கள். அவர்கள் தான் இங்குள்ளனர். அங்கு நின்று கொண்டிருக்கும் அந்த பெண்ணை பார்த்தாயா? என்று கேட்டார். நான் வாழ்க்கையிலே கண்டிராத சிறந்த அழகுள்ள பெண், ''நீ அவளை தேவனிடத்தில் வழி நடத்தின போது, அவள் தொண்ணூறு வயது கடந்திருந்தாள். அவள் என் அன்பு சகோதரனே'' என்று கூச்சலிடுவதில் வியப்பொன்றுமில்லை, அவள் இனி ஒருபோதும் வயோதிப பருவத்தை அடைவதில்லை அவள் அதை கடந்துவிட்டாள், இப்பொழுது அவள் வாலிப பருவத்தின் மிளிரைப் பெற்றிருக்கிறாள். அவள் தான் அங்கு நின்று கொண்டிருக்கிறாள். அவள் குளிர்ந்த தண்ணீரை குடிக்கமாட்டாள்; அவளுக்கு அது அவசியமில்லை. அவள் படுத்து உறங்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவள்களைப் படைவதில்லை, இங்கு நாளை அல்லது நேற்று என்று ஒன்றுமேயில்லை. ''நாம் இப்பொழுது நித்தியத்தில் இருக்கின்றோம். ஒரு மகிமையான நாளில் தேவனுடைய குமாரன் வருவார். அப்பொழுது அவர்களுக்கு நீ பிரசங்கித்த வார்தையைக் கொண்டு நியாந்தீர்க்கப்படுவாய்'' என்றார், ஓ சகோதரனே! நான், ''பவுல் தன்னுடைய குழுவையும் கொண்டு வர வேண்டுமா? என்று கேட்டேன். ''ஆம். ஐயா'' என்று விடையளித்தார். நான், ''பவுல் பிரசங்கித்ததையே நானும் பிரசங்கித்தேன், அதனின்று நான் சிறிதளவும் பிக்கவில்லை. நான் சபை கோட்பாடுகள் ஒன்றையும் அதில் சேர்க்கவில்லை. அதிலே நான் உறுதியாய் நின்றேன் என்றேன். அப்பொழுது அவர்களனைவரும் ஒருமித்து, ''அதை நாங்கள் அறிவோம், அந்த உறுதியை நாங்கள் அதிகம் கொண்டிருக்கிறோம்'' என்று சத்தமிட்டனர். அவர்கள், நீர் எங்களை அவரிடம் சமர்ப்பிப்பீர். ''அதன் பின்பு நாங்கள் பூமிக்குச் சென்று சதாகாலமும் வாழ்வோம்'' என்றனர். ஓ, என்னே. 49அதைக் கேட்ட பின்பு, நான் திரும்பிச் செல்ல எத்தனித்தேன். நான் பார்த்த போது, கட்டிலின் மேல் என் பிணம் கிடப்பதைக் கண்டேன். ''ஓ, அந்த சரீரத்துக்குள் நான் மறுபடியும் போக வேண்டுமா? என்று நினைத்தேன். அப்பொழுது ஒரு சத்தம், ''தொடர்ந்து செல் தொடர்ந்து செல்'' என்று கூறிக் கொண்டேயிருந்தது. நான், ''ஆண்டவரே, எப்பொழுதுமே நான் தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கை கொண்டவன். நான் தொடர்ந்து விசுவாசிப்பேன். ஆத்துமாக்களை இரட்சிக்க நான் பாடுபடுவேன். எனக்குதவி செய்யும். நான் அநேகரை அங்கு கொண்டு சேர்ப்பேன்... நான் நீண்ட நாட்கள் வாழ உதவி புரியும். அப்பொழுது இன்னும் பத்து லட்சம் பேரை பரலோகத்தில் சேர்ப்பேன். அதுவரைக்கும் நான் பூமியில் தங்கியிருக்கட்டும் என்றேன். 50உங்கள் நிறம் என்னவாயிருந்தாலும், நீங்கள் எந்த கோட்பாடுகளைப் பின்பற்றினாலும் நீங்கள் எந்த தேசத்தை சேர்ந்தவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அங்கு சென்ற பின்பு எல்லோரும் சமமே. அந்த பாகுபாடுகள் அனைத்தும் அங்கு எடுக்கப்படுகின்றன. ஓ, அந்த பெண்கள் மிகவும் அழகாயிருந்தனர். அவர்களுடைய ஆடைகள் கீழ்வரைக்கும் தொங்கிக் கொண்டிருந்தது. அவர்களுடைய கூந்தல் நீளமாய் வளர்ந்திருந்தது. அவர்கள் காலணிகள் அணியவில்லை. ஆண்களுக்கு கழுத்து சுற்றிலும் தலைமயிர் வளர்ந்திருந்தது. அது சிவப்பு, கறுப்பு போன்ற வெவ்வேறு நிறமுடையதாயிருந்தது. அவர்கள் தங்கள் கைகளை என்மேல் போட்ட போது, அதை நான் தொட்டுப் பார்க்க முடிந்தது. தேவனே இதற்கு சாட்சி, திறக்கப்பட்ட இந்த புனித வேதாகமத்தை சாட்சியாக வைத்து கூறுகிறேன். என் கைகளினால் என் முகத்தைத் தொடும்போது, அதை எவ்வாறு என்னால் உணர முடிகின்றதோ. அது போன்று அவர்களுடைய கைகள் என் மேல்பட்ட போது, என்னால் உணர முடிந்தது. அவர்கள் என் தோள் மீது கை போட்டனர். பெண்கள் அவ்விதம் போட்ட போது, பூமியில் ஒருவகை உணர்ச்சி நேரிடுவது போன்று அங்கு நேரவில்லை. நீ எவ்வளவு பரிசுத்தமாயிருந்தாலும் சரி, போதகராயிருந்தாலும், குருவானவராயிருந்தாலும் சரி, ஒரு பெண் ஒரு ஆணின் தோளின் மேல்கைகளைப் போடும்போது, அவன் ஸ்பரிச உணர்ச்சியற்றவனாய் இருக்க முடியாது. அது முற்றிலும் உண்மை. ஆனால் சகோதரனே, நீ இங்கிருந்து கடந்து அக்கரைக்குச் செல்லும் போது, அத்தகைய உணர்ச்சி ஏற்படுவதில்லை. ஓ, என்னே அது அப்படித்தான்... அப்படிப்பட்ட உணர்ச்சி ஏற்படவே முடியாது. எல்லாம் அங்கு அன்பாக உள்ளது. சகோதரனே, சகோதரியே, அங்கு எல்லாமே தத்ரூபமாய் உள்ளது, அங்கு மரணமில்லை, துக்கமில்லை, பொறாமையில்லை, எதுவுமே இல்லை. இவை ஒன்றுமே அங்கு நுழைய முடியாது. எல்லாமே பரிபூரணமாய் அமைந்துள்ளது. அதற்காகவே நான் முயன்று கொண்டிருக்கிறேன். அதற்காகவே என்னை நான் பொருத்திக் கொள்கிறேன். 51நான், ''ஆண்டவரே, இதற்காகவே நான் சபைக்கு வந்திருக்கிறேன். சபையை ஒழுங்குபடுத்த நான் முயன்று வருகிறேன்'' என்றேன். சகோதரனே, சகோதரியே, உங்களிடம் இதை கூற முற்படுகிறேன். அங்கு ஒன்று மாத்திரமே பிரவேசிக்க முடியும். அது தான் பரிபூரண அன்பு. நீங்கள் பிரான்ஹாம் கூடாரத்திற்கோ, மெதோடிஸ்டு சபைக்கோ, பாப்டிஸ்டு சபைக்கோ, உத்தமமாய் இருந்து வருகிறீர்கள் என்பதனால் அல்ல. நீங்கள் அப்படி உத்தமமாய் இருக்க வேண்டும். ஆனால் நண்பனே... நீ அந்நிய பாஷை பேசி, ஆவியில் நடனமாடி, பிசாசுகளை துரத்தி, விசுவாசத்தினால் மலைகளை தள்ளுண்டு போகும்படி செய்தாய் என்பதனால் அல்ல அவையெல்லாம் நல்லது தான். ஆனால், பூரண... அன்பு இல்லாவிடில், அங்குதான் பூரண... (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி.) 52நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள், அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம். (நாம் எதை சுதந்தரிக்கிறாம்? நித்திய ஜீவனை). எப்படி? எல்லோருக்கும் புரிகின்றதா? நீங்கள் தேவனை நோக்கி கூப்பிட்டீர்களா? இல்லை, தேவன் உங்களை அழைத்தார். எந்த மனிதனும் தேவனைத் தேடவில்லை; தேவன் மனிதனைத் தேடினார். ''என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்'' என்றார் இயேசு (யோவான்:6:44). தேவனை விட்டு அகன்று ஓடுவதே மனிதனின் தன்மையாயுள்ளது. ஆனால், நீங்கள் இப்பொழுது சொல்லுகின்றீர்கள்... உங்களிடம் பிரசங்கம் செய்வதற்கு இது தான் தொல்லை தருகின்றது. நீங்கள் இதுவரை இருந்த அதே நிலையில் இருக்க வேண்டாம். இப்பொழுதே மாறுங்கள்! ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று நான் கூறுவதற்கு செவி கொடுங்கள். நான் என்னை தீர்க்கதரிசியென்று அழைத்துக் கொள்ளவில்லை. நான் இல்லை. நீங்கள் தான் என்னை தீர்க்கதரிசியென்று அழைக்கின்றீர்கள். உலகமும் அவ்வாறு நம்புகிறது - உலகிலுள்ள கோடிக்கணக்கான ஜனங்கள். நான் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ (ஒலி நாடாக்களின் மூலமாக) ஒரு கோடி ஜனங்களிடம் பேசியிருக்கிறேன். நான் ஆயிரக்கணக்கான தரிசனங்களையும், அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்டிருக்கிறேன். அவைகளில் ஒன்றாகிலும் தவறியதில்லை. அது உண்மை. அவர் என்னிடம் முன்னறிவித்த காரியங்கள், அவர் கூறியவாரே நிகழத் தவறியதில்லை. அது உண்மை. நான் தீர்க்கதரிசியென்று உரிமை பாராட்டவில்லை. ஆனால், நான் கூறுவதற்கு செவி கொடுங்கள். 53கர்த்தர் உரைக்கிறதாவது: உங்களை அந்த இடத்திற்கு கொண்டு செல்ல பூரண அன்பால் மாத்திரமே முடியும். அங்கு அது மாத்திரமே இருந்தது. நீங்கள் மத சம்பந்தமான செயல்கள் எவ்வளவு புரிந்திருந்தாலும், எவ்வளவு நல்ல காரியங்கள் செய்திருந்தாலும், வேறெவைகளைச் செய்திருந்தாலும், அந்நாளில் அவையொன்றும் கணக்கில் வராது. அதற்கு பூரண அன்பு மாத்திரமே அவசியம். எனவே, நீங்கள் எவைகளைச் செய்தாலும், அவைகளை ஒருபுறம், ஒதுக்கிவைத்துவிட்டு, உங்களை வெறுப்பவர்களை நேசிக்கும் அளவுக்கு, தேவனுடைய அன்பினால் நிறைவீர்களாக! இன்று காலை நான் உங்களிடம் கூறியது போன்று, எனது முழு அமைப்பும் கிருபையின் மேல் சார்ந்துள்ளது. அநேகர், ''நீ என் முதுகை சொறி, நான் உன் முதுகை சொறிவேன். நீ எனக்கு ஏதாவதொன்றை செய், அப்பொழுது நான் உனக்கு பிரதியுபகாரம் செய்வேன்'' என்கின்றனர். ஆனால், கிருபை என்பது அதுவல்ல. ''உன் முதுகு அரித்தால், நீ என் முதுகை சொறிந்தாலும் சொறியாவிட்டாலும், நான் உன் முதுகை சொறிவேன்'' என்பதே கிருபை. நீ என் முகத்தில் அறைந்து, என் முதுகு அரிக்கிறது, சொறிந்து தா'' என்பாயானால், நான் சொறிந்து கொடுப்பேன். பாருங்கள்?அதுதான். ஏதாவதொன்றைச் செய்யுங்கள். நான் கிரியைகளில் நம்பிக்கை வைப்பதில்லை. ஆனால், கிரியைகள் அன்பை பிரதிபலிக்கின்றன என்று நான் விசுவாசிக்கிறேன். கிருபை அங்கு காணப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதே கிரியைகள். என் மனைவிக்கு நான் உண்மையாயிராவிடில், எங்கே அவள் என்னை விவாகரத்து செய்து விடுவாளோ என்னும் பயம் காரணமாக நான் அவளுக்கு உண்மையாயிருக்கவில்லை. அவளை நான் நேசிப்பதனால், அவளுக்கு உண்மையாயிருக்கிறேன். 54நான் பிரசங்கம் செய்யாவிட்டால், எங்கே நான் நரகத்திற்கு போய் விடுவேனோ என்னும் பயம் காரணமாக நான் பிரசங்கம் செய்வதில்லை. அவரை நேசிப்பதனால், நான் பிரசங்கம் செய்கிறேன். நிச்சயமாக இல்லையென்றால், நான் புயல் உருவான கடலைக் கடந்து, ஆபத்துகளில் சிக்கிய விமானங்களில் செல்வேன் என்று நினைக்கின்றீர்களா? எத்தனையோ முறை மின்னல், நான் சென்ற விமானத்தை தாக்கி, அது ஆபத்தான நிலையில் இருந்திருக்கிறது. எந்த நிமிடத்திலும் எதுவும் நேரிடும் என்னும் நிலைமை. பயணிகள், ''மரியாளே வாழ்க'' என்னும் தங்கள் ஜெபத்தை உச்சரிக்க ஆரம்பித்து விட்டனர். பாதுகாப்பு பட்டையை (safety belt) கட்டிக்கொள்ளும்படி விமானி கூறிவிட்டு, ''இன்னும் பதினைந்து நிமிடங்களுக்கு மாத்திரமே பெட்ரோல் இருக்கும். நாம் எங்கிருக்கிறோம் என்று தெரியவில்லை'' என்று கூறியிருக்கிறான். இவையெல்லாம் நான் விளையாட்டிற்காக செய்தேன் என்று நினைக்கிறீர்களா? ஜெர்மானிய தேசத்தின் காடுகளிலே, ஜெர்மானிய இராணுவ வீரரின் பாதுகாப்புடன் நான் கூட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டேன். பரிசுத்த ஆவியானவர் அற்புதங்களை நிகழ்த்தும் வரைக்கும் இப்படி நடந்து வந்தது. ஒரு மைல் தொலைவிலுருந்து என்னைச் சுட்டுக் கொல்வதற்காக, தொலை நோக்கி (Telescope) பொருந்திய துப்பாக்கியுடன் கம்யூனிஸ்டுகள் காத்துக் கொண்டிருந்தனர். இவையெல்லாம் விளையாட்டிற்காக நான் செய்தேன் என்று நினைக்கிறீர்களா? எனக்குள் இருந்த அன்பு அவ்வாறு செய்யத் தூண்டியது. அந்த மானிடருக்காகவும் கிறிஸ்து மரித்தாரே! பவுல், எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்'' என்றான். ஏதோ ஒன்று - அன்பு - நம்மை நெருக்கி ஏவுகின்றது. அது முற்றிலும் உண்மை. 55நான் பணத்திற்காக சுவிசேஷத்தை பிரசங்கித்திருந்தால், இன்று இருபதாயிரம் டாலர்கள் கடனாளியாகி இருந்திருக்க மாட்டேன். இல்லை, ஐயா. அப்படியிருந்தால், எனக்கு கொடுக்கப்பட்ட லட்சக்கணக்கான டாலர்களில் ஒரு பாகத்தை நான் எடுத்து வைத்திருப்பேன். ஒரு மனிதன் வேவு பார்க்கும் அதிகாரி ஒருவரிடம் பதினைந்து லட்சம் டாலர்கள் பெறுமானமுள்ள காசோலை ஒன்றை எனக்குக் கொடுத்தனுப்பினான். நான், ''அதை கொண்டு சென்றுவிடு'' என்றேன். பணத்திற்காக அல்ல. பணம் முக்கியமல்ல. நான் பணத்திற்காக சுவிசேஷத்தை பிரசங்கிப்பது கிடையாது. அன்பின் காரணமாகவே நான் அதை செய்கிறேன். நான் செய்ய விரும்புவது என்னவெனில், எனது கடைசி மூச்சு ஒடுங்கும் போது, அது ஒருக்கால் இன்னும் ஐந்து நிமிடங்களில் நிகழலாம், இன்னும் இரண்டு மணி நேரத்தில் நிகழலாம். அல்லது ஐம்பது ஆண்டுகள் கழித்து நிகழலாம். எனக்குத் தெரியாது. ஆனால் அப்படி நிகழ்ந்து அங்கு நான் செல்லும் போது, வாலிப மிளிருடன், ''என் அன்பு சகோதரனே, நான் இங்கு வந்துவிட்டேன்'' என்று கூறும் சத்தத்தைக் கேட்க விரும்புகிறேன். வித்தியாசமுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதற்காக வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை. உங்களை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்பதற்காகவே அப்படி செய்கிறேன். உங்கள் சபையல்ல; உங்கள் ஸ்தாபனமல்ல, நீங்கள் கிறிஸ்துவுக்குள் பிறப்பதே முக்கியம் வாய்ந்தது. ஓ, என்னே. வ்யூ! 56தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன் குறிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்திரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம். கவனியுங்கள், இன்னும் சில நிமிடங்களில் நாம் முடிக்கப் போகின்றோம். நாம் முடிப்பதற்கு முன்பு, கூர்ந்து கவனியுங்கள். மேலும் கிறிஸ்துவின் மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள்... அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு. இதை இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், உங்கள் சுவிசேஷ ஆடையை உடுத்திக் கொண்டு, உங்கள் செவிகளைத் திறந்து, கூர்ந்து கவனியுங்கள். நான் இப்பொழுது 13ம் வசனத்திற்கு வந்திருக்கிறேன். நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைச் கேட்டு விசுவாசிகளான போது (விசுவாசம் எதைக் கேட்பதனால் வரும்? ''தேவனுடைய வார்த்தையை'' என்று சபையோர் விடையளிக்கின்றனர் - ஆசி.) வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள்.'' சத்தியம் என்பது என்ன? தேவனுடைய வசனம். அது சரியா? வேத வாக்கியங்களை குறித்துக் கொள்பவர்களே, யோவான்;17:17ல் இயேசு, ''உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும், உம்முடைய வசனமே சத்தியம்'' என்று கூறியுள்ளார். 57உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு. அவன் எந்த இரட்சிப்பைக் குறித்து அவர்களிடம் சொல்லுகிறான்? உலகத் தோற்றத்துக்கு முன்பே சுவிகாரப் புத்திரராக முன்குறிக்கப்படுதல் (அது சரியா?). நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்படுதல். நீங்கள் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியால் நிறையப்பட்ட பின்பு நித்திய ஜீவனுக்குள் வரும் போது, நீங்கள் புத்திரராகி விடுகின்றீர்கள். நீங்கள் அவருடைய ராஜ்யத்துக்காகவும், அவருடைய மகிமைக்காகவும், கிரியை செய்ய வேண்டுமென்று கருதி, தேவன் உங்களை உங்கள் ஸ்தானத்தில் பொருத்த விரும்புகிறார். அது தான் சுவிசேஷம். நீங்கள் முதலில், ''நீங்கள் மனந்திரும்பி உங்கள் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்னும் தேவனுடைய வசனத்தைக் கேட்கிறீர்கள். உங்கள் பாவங்கள் அனைத்தையும் போக்க, நீங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைக் கூப்பிட்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி செல்கின்றீர்கள். அந்த வாக்குத்தத்தம், பாதையில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பயணிக்கும் உரியது. இன்று நீ பாவியாக உன் வீட்டை விட்டு புறப்பட்டு, ''நான் பிரான்ஹாம் கூடாரத்திற்கு சென்று வருகிறேன்'' என்று கூறியிருப்பாயானால், தேவன் இன்றிரவு உனக்கு ஒரு தருணம் அளிக்கின்றார். உனக்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கும் இடையே ஒன்று மாத்திரம் உள்ளது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் எது? பரிசுத்த ஆவி. யோசுவாவுக்கும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கும் இடையே என்ன இருந்தது? யோர்தான். அது முற்றிலும் சரி. 58கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாயிருந்த மோசே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் வரைக்கும் இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தி சென்றான். ஆனால், அவன் அவர்களை அதற்குள் கொண்டு செல்லவில்லை. ஆனால், யோசுவாவோ அவர்களை அதற்குள் கொண்டு சென்று, தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அது போன்று, இயேசு கிரயத்தை செலுத்தி நம்மை பரிசுத்த ஆவி வரைக்கும் வழி நடத்தினார். ஆனால், தேவனோ பரிசுத்த ஆவியை இவ்வுலகிற்கு அனுப்பி, ஒவ்வொரு மனிதனையும் அவருடைய பிரசன்னத்தினால் நிரப்பி, சபையை அதன் ஸ்தானத்தில் பொருத்தி ஒழுங்குபடுத்தினார். நான் கூறுவது புரிகின்றதா? எவ்வாறு சுவிசேஷத்தின் அழைப்பிற்கு தேவன் கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மெல்லாரையும் முன்குறித்தார் என்று. கலாத்தியர்;1:8ல் பவுல், வானத்திலிருந்து வருகிற ஒரு தூதன் வேறெதாவதை பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்“ என்று கூறியுள்ளான். சத்தியம், சுவிசேஷம். இந்த வசனத்தை நாம் படிக்கும் போது கூர்ந்து கவனிக்கவும். நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு விசுவாசிகளான போது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள். 59கவனியுங்கள், கடைசி நாட்களில் இரு சாரார் இருப்பார்கள் என்று வேதம் உரைக்கின்றது. ஒருசாரார் தேவனுடைய முத்திரையைப் பெற்றிருப்பார்கள். மற்ற சாரார் மிருகத்தின் முத்திரையைத் தரித்திருப்பார்கள். எத்தனை பேருக்கு, அது தெரியும்? சரி, தேவனுடைய முத்திரை பரிசுத்த ஆவி என்றால், பரிசுத்த ஆவி பெறாமலிருப்பதே மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்ளுதலாம். இவ்விரு ஆவிகளும் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் இருந்து, கூடுமானால் அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். ஆனால், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ வஞ்சிக்கப்பட முடியாது. ஏனெனில், அவர்கள் நித்திய ஜீவனுக்கென்று தெரிந்து கொள்ளப்பட்டுள்ளனர். பாருங்கள்? சபை அவ்விதமாய் போய்க் கொண்டிருக்கிறது [தெளிவற்ற சொல்] 60பத்து கன்னிகைகள் ஆண்டவரைச் சந்திக்க புறப்பட்டு சென்றனர் என்று நாமறிவோம். அவர்கள் எல்லோருமே பரிசுத்தமாக்கப்பட்டவர்கள். அவர்களில் ஐந்து பேர் தாமதமானவர்கள். அவர்களுடைய தீவட்டிகள் அணைந்து போக அவர்கள் அனுமதித்தனர். மற்ற ஐந்து பேருக்கு தங்களுடைய தீவட்டிகளில் எண்ணெய் இருந்தது. ''இதோ மணவாளன் வருகிறார்'' என்னும் சத்தம் எழுந்தபோது, தங்கள் தீவட்டிகளில் எண்ணெய் இருந்த ஐந்து பேர் கலியாண விருந்துக்குள் பிரவேசித்தனர். மற்ற ஐந்து பேரோ கைவிடப்பட்டனர். அங்கு அழுகையும், பற்கடிப்பும் இருந்தது. எனவே, ஆயத்தமாயிருங்கள். எந்த நேரத்தில் ஆண்டவர் வருவார் என்று உங்களுக்குத் தெரியாது. எண்ணெய் வேதத்தில் எதற்கு ஒப்பிடப்படுகிறது? பரிசுத்த ஆவிக்கு. 61ஏழாம் நாளே தேவனுடைய முத்திரை என்று கூறும் ஏழாம் நாள் ஆசரிப்பு சகோதரரே, அதை நிருபிக்க வேத வாக்கியங்களைக் காண்பியுங்கள் பார்க்கலாம். பரிசுத்த ஆவியே தேவனுடைய முத்திரையென்று வேதம் கூறுகின்றது? இதை கவனியுங்கள், 13ம் வசனத்தைக் கவனியுங்கள். ...விசுவாசிகளான போது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை, போடப்பட்டீர்கள். இப்பொழுது, எபேசியர் 4:30க்கு திருப்புங்கள். அந்த வசனம் தான் என்று நினைக்கிறேன். எபேசியர் 4ம் அதிகாரம் 30ம் வசனம் தானா என்று பாருங்கள்? ஆம், அதுதான். 4:30. அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். 62எவ்வளவு காலம்? நீங்கள் உண்மையான பரிசுத்த ஆவியைப் பெற்ற பின்பு அது எவ்வளவு காலம் நீடிக்கிறது? அடுத்த எழுப்புதல் வரைக்குமா, அல்லது உங்கள் பாட்டி உங்களிடம் வாக்குவாதம் செய்யும் வரைக்குமா, அல்லது எஜமான் உங்களிடம் கூச்சலிடும் வரைக்குமா? இல்லை, நீங்கள் மீட்கப்படும் நாள் வரை! அல்லேலுயா! நீங்கள் மரித்து, அந்த தேசத்தில் பிரவேசித்து உங்கள் அன்பார்ந்தவர்களுடன் நீங்கள் இருக்கும் போதும், பரிசுத்த ஆவியால் நிறையப்பட்டிருக்கிறீர்கள். அது தான் வேதவாக்கியம்! இப்பொழுது உள்ளது போல் அப்பொழுதும் இருக்கின்றீர்கள். ஆனால், உங்களுக்கு வேறொரு... நீங்கள் வேறொரு சரீரத்துக்குள் பிரவேசிக்கிறீர்கள். உங்கள் வீட்டை நீங்கள் மாற்றிக் கொள்கிறீர்கள். இந்த வீடு பழமையாகிவிடுகிறது. அதை பழுது பார்க்க உங்களால் முடியவில்லை. உத்திரங்கள் செல்லரித்துவிட்டன. எனவே நீங்கள் பழையதைக் கலைந்து போட்டு, அது அழுகும்படி விட்டுவிட்டு, புதியதொன்றிற்குள் பிரவேசிக்கின்றீர்கள். அது சரியா? ''பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும், வேறொன்று நமக்காக காத்திருக்கிறது.'' 63அதைக் குறித்து அன்று நான் கூறினது நினைவிருக்கிறதா? ஒரு குழந்தை அதன் தாயின் கர்ப்பத்தில் உருவாகும் போது, அதன் சிறு தசைகள் உதைத்து குதிக்கின்றது. ஆனால், அந்த தாய் குழந்தையை பிரசவித்து, அதை இவ்வுலகிற்கு கொண்டு வந்தவுடனே, அந்த இயற்கை சரீரத்துக்குள் நுழைந்து கொள்ள ஆவிக்குரிய சரீரம் ஒன்று காத்திருக்கிறது. மருத்துவர் அதற்கு இப்படி ஒரு அடி கொடுக்கிறார், (சகோ. பிரன்ஹாம் தமது கைகளை சேர்ந்து தட்டுகிறார் - ஆசி), அல்லது அதை குலுக்கிறார். அப்பொழுது குழந்தை ''வ்யா,வ்யா,வ்யா'' என்று அழுகிறது. உடனே அது தான் தாயின் மார்பகத்தில் தன் தலையை மேலும் கீழும் அசைத்து, ''உம்,உம்'' என்று பால் குடிக்க முயல்கிறது. அப்பொழுது, பால் சுரப்பிகள் பாலைக் கொண்டு வருகின்றன. அவ்வாறே கன்று குட்டியும், அதன் தாய் அதனை ஈன்றவுடன் சில நிமிடங்களில் அது எழுந்து நிற்கிறது. அது என்ன செய்கிறது? அதன் தாயினருகில் சென்று, தன் சிறு தலையை இங்குமங்கும் அசைத்து, தன் பாலைப் பெறுகின்றது. அல்லேலூயா! ஆம், ஐயா. இந்த மாமிச சரீரம் இவ்வுலகிற்கு வந்தவுடனே, அதற்காக ஒரு ஆவிக்குரிய சரீரம் காத்திருக்கிறது. அவ்வாறே இந்த மாமிச் சரீரம் இங்குவிழுந்து போனவுடன், அல்லேலூயா, அங்கு வேறொரு சரீரம் காத்துக் கொண்டிருக்கிறது. நாம் ஒன்றிலிருந்து வேறொன்றுக்குள் பிரவேசிக்கிறோம். நம் இருப்பிடத்தை நாம் மாற்றிக் கொள்கிறோம். சாவுக்கேதுவான இது சாவாமையை - ஆவிக்குரியதை தரித்துக்கொள்ள வேண்டும். அழிவுள்ள இது அழியாமையைத் தரித்துக்கொள்ள வேண்டும், இந்த சுருங்கிப்போன, கூன் விழுந்த சரீரம் அதன் தோற்றத்தை மாற்றிக் கொள்வதில்லை. நான் என்ன கூறுகிறேன் என்றால், அது அங்கு செல்லும் போது, நீங்கள் அதே ஆவியைப் பெற்றிருப்பீர்கள். 64ஒன்றை உங்களிடம் கூறப்போகிறேன். அது முரணாக உங்களுக்குத் தென்படலாம். ஆனால், அது வேதத்தில் உள்ளது. அதை தெளிவுபடுத்த ஒன்றை நான் உங்களிடம் கூறப்போகிறேன், இதை கவனியுங்கள். ராஜாவாகிய சவுல் - அக்காலத்திலிருந்த மிகப்பெரிய ஸ்தாபன போதகர், அவர்களெல்லாரைக் காட்டிலும் உயரமானவன். மற்றவர்கள் அவனைக் கண்டு பயந்தனர். இயற்கைக்கு மேம்பட்ட செயல்களை அவர்கள் ஒன்றும் அறியாமலிருந்தனர். அந்த ஆட்டுக்குட்டியை சிங்கத்தின் வாயிலிருந்து தப்புவிக்க, கோலியாத்தைக் கொல்ல தாவீது வர வேண்டியதாயிருந்தது. இந்த சவுலைக் கவனியுங்கள். அவன் தேவனை விட்டு அதிக தூரம் சென்று, உருளும் பரிசுத்தர் போதகரான தாவீதை பகைக்கத் தொடங்கினான். அவன் சார்பிலிருந்து கொண்டு அவனுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக அவனுக்கு விரோதமாய் சவுல் எழும்பினான். அதுதான் சரியான சித்திரம். அவனுக்கு விரோதமாய் எழும்பினான். 65தாவீது கோலியாத்தைக் கொல்லுதல் என்பதின் பேரில் பிரசங்கிக்க நான் முதன் முறையாக பயணம் மேற்கொண்ட போது, இங்குள்ளவர் எத்தனை பேர் இருந்தீர்கள்? நான் புறப்பட்டுச் சென்ற போது? அநேகர், சில பழங்காலத்தவர். நான் மறுபடியும் புறப்பட்டுச் செல்ல எத்தனித்துள்ளேன். கடந்த ஞாயிறன்று என்ன நேர்ந்தது பார்த்தீர்களா? அது வேறொரு கட்டத்திற்குள் நகர்ந்து கொண்டிருக்கிறது தாவீதின் இரண்டாம் மாபெரும் கூட்டம் (campaign). அவனுடைய ஊழியத்தின் இரண்டாம் கட்டம். அது முற்றிலும் உண்மை அப்பொழுது தான் அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிறான். இப்பொழுது ஊழியம் ஒரு மேலான கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை கவனியுங்கள். அது போன்று தான் தாவீதும். இதை கவனியுங்கள். தாவீது சிங்கத்தைக் கொல்லவும், கரடியைக் கொல்லவும், பின்பு பெலிஸ்தியனைக் கொல்லவும் தேவன் உதவி புரிந்தார். ஒரு முறை தேவன் பொல்லாத ஆவி சவுலின் மேல் வரும்படி செய்தார். எதற்காக? தாவீதைப் பகைப்பதற்காக நான் நம்புகிறேன்... 66இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது. இந்த ஒலி நாடாக்களைக் கேட்கும் என் சகோதரரே, நான் கூறுவதை நீங்கள் ஆமோதிக்காவிட்டால், என்னை மன்னித்துவிடுங்கள். உங்களை எப்படியும் நான் பரலோகத்தில் சந்திக்கப் போகிறேன். நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாயிருந்தால், உங்களை எப்படியும் அங்கு சந்திப்பேன். ஆனால், இதை நான் கூற விரும்புகிறேன், அதற்கான காரணத்தை. தன்னிடமில்லாத ஒன்று தாவீதிடம் இருப்பதை சவுல் கண்ட போது, என்ன நேர்ந்தது? சிவந்த மேனியுள்ள ஒரு இளைஞன் அங்கு வருகிறான். ''வேதம் அவனை சிவந்த மேனியுள்ளவன்'' என்றழைக்கிறது. அவன் அழகுள்ளவனல்ல, ஒருவகை சிவந்த மேனியுள்ளவன். அவன் சவுலினிடம் வந்த போது, சவுல் தன்னுடைய ஆயுதங்களை அவனுக்குத் தரிப்பித்தான். அந்த கேடயம் அவனுடைய பாதங்கள் வரை வழுக்கி விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன். ''இதை கழற்றி விடுங்கள்'' என்று தாவீது கூறிவிட்டான். சரி, அவனுக்கு டாக்டர் பட்டம் அளிக்கலாம் என்று சவுல்தீர் மானித்தான். ஆனால் தாவீதோ, ''இதைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. ஏனெனில் இதை நான் இதுவரை உபயோகித்து நிரூபித்ததில்லை. எனக்கு தெரிந்ததெல்லாம், நான் இதுவரை உபயோகித்து வந்ததே, அது எனக்குப் போதும்'' என்று சொல்லிவிட்டான். ஆம், ஐயா. அவன் கவணை எடுத்துக் கொண்டான். 67அன்றிருந்த சபைகள், ''சவுல் கொன்றது ஆயிரம். தாவீது கொன்றது பதினாயிரம்'' என்று பாடின காரணத்தால், சவுலுக்கு கோபமூண்டது. அதன் விளைவாக சவுல் பொறாமை கொண்டான். ''அந்த இயேசுவின் நாமம் போதனை அதில் ஒன்றுமில்லை'' என்றான் அப்படித்தான். ஆனால், தேவன் என்ன செய்தார்? அவுன் மேல் அசுத்த ஆவியை அனுப்பினார். அது தான் நேர்ந்தது, தாவீதைப் பகைக்க, சவுல் தாவீதை முகாந்தரமின்றி பகைத்தான். எத்தனையோ முறை தாவீது சவுலின் கழுத்தையிருக்கி அவனைக் கொன்றிருக்க தருணம் உண்டாயிருந்தது. ஆனால், அவனோ அப்படி செய்யவில்லை. அவன் ஒன்றுமே கூறவில்லை. அப்படி செய்ய அவனுக்குத் தருணம் கிடைத்தது. ஒரு இரவு சவுல் உறங்கிக் கொண்டிருந்த போது, தாவீது அவனை அணுகி, அவன் அங்கியின் ஓரத்தை வெட்டி திரும்பி வந்து, சவுலிடம், ''இதை பார்தீர்களா?'' என்றான். ஆம், ஐயா. அவனைக் கொன்றுபோட தாவீதுக்கு எத்தனையோ முறை தருணம் கிடைத்தது. அவனோ, அப்படி செய்யவில்லை. அவன் விரும்பியிருந்தால், அவன் சவுலின் சபையை உடைத்தெறிந்து, அவர்களைப் பிரித்து, தனக்கென்று ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அவனோ அப்படி செய்யாமல், சவுல் தன் வழியில் செல்ல விட்டுக் கொடுத்தான். கர்த்தர் போராடட்டும் என்று அவன் நினைத்தான். ஆம், ஐயா. 68அவன் அப்படி சென்று, அவனுடைய மாபெரும் கூட்டம் முடிவடைந்தது. சவுலின் மேல் அசுத்த ஆவி இறங்கினது. அவன் தேவனிடத்தில் எந்த மாறுத்தரமும் பெற முடியவில்லை. கர்த்தருடைய ஆவி அவனை விட்டு சென்றது. அந்த வயோதிப சாமுவேல், அவர்கள் புறக்கணித்த அந்த மனிதன்; அவர்களுக்கு அவன் ஒருவன் மாத்திரமே தேவனுடைய சத்தமாக இருந்து வந்தான். அவர்கள் உலகப்பிரகாரமான வழியில் செல்ல எத்தனித்த போது, அவன் தான் அவர்களுக்கு ஆலோசனை கூறினான். சபையானது உலகப்பிரகாரமாக இருக்க வேண்டுமென்று ஏன் விரும்புகிறது? ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியின் அனுபவமுடைய பெந்தெகொஸ்தேயினரும் மெதோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பிரஸ்பிடேரியன்களும் உலகப் பிரகாரமாக இருக்க வேண்டுமென்று ஏன் விரும்புகின்றனர்? எனக்குத் தெரியவில்லை, என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள், ''சற்றுபொழுது போக்குக்கு சீட்டு ஆடினால் என்ன தவறு? என்றெல்லாம் கேட்கின்றனர். அது பாவம். அத்தகைய விளையாட்டுகளை உங்கள் வீட்டில் வைத்திருக்க கூடாது. ''ஒரு சிறு கோப்பைபீர் (beer) அருந்தினால் தவறொன்றுமில்லை. நானும் என் மனைவியும், இன்று பகல் சிறிதுமது அருந்தினோம் என்கின்றனர். முதலாவது என்ன நேரிடும் தெரியுமா? உங்கள் பிள்ளைகளும் சில கோப்பை மது அருந்தத் தொடங்குவார்கள். நிச்சயமாக. 69பெண்களாகிய நீங்கள், பிசாசு உங்களை... அதை தான் அவன் ஆதியில் செய்தான். சகோதரிகளே, அவன் உங்களை இலக்காக வைத்திருக்கிறான். அவன் அதை. அவனால் என்ன செய்ய முடியும் என்று அவன் அறிந்திருக்கிறான். ஒரு ஆணைக் காட்டிலும் ஒரு பெண்ணை அவன் ஆயிரக்கணக்கான முறைவேகமாக வஞ்சிக்க முடியும். அது பெண்களாகிய உங்களைப் புண்படுத்துகிறது என்றறிவேன். ஆனால், அதுவே உண்மை. அதைதான் அவன் ஏதேன் தோட்டத்தில் செய்தான். அவனால் செய்ய முடியும்... ஏவாள் உத்தமமாகவும் உண்மையாகவும் இருந்தாள். ஆயினும் அவள் வஞ்சிக்கப்பட்டாள். ஆதாம் வஞ்சிக்கப்படவில்லையென்று வேதம் கூறுகின்றது. ஆனால், அவளோ வஞ்சிக்கப்பட்டாள். எனவே, பிசாசால் அவளை வஞ்சிக்க முடியும். இருப்பினும், போதகர்கள் பெண் பிரசங்கிகளை அபிஷேகித்து சபையில் போதகர்களாக நியமிக்கின்றனர். ஆனால், வேதமோ ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் முடிய அதை கண்டிக்கின்றது. நீங்களோ, ''அதில் தவறொன்றுமில்லை. அது சரியே. அவர்களில் பெரிய பெரிய பிரசங்கிமார்கள் இருக்கின்றனரே'' என்கின்றீர்கள். 70ஒருமுறை நான் பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, ஒரு பெண் அந்நியபாஷை பேசத் தொடங்கிவிட்டாள் நான் தொடர்ந்து பிரசங்கம் செய்தேன். ஒரு நாள் கூட்டம் முடிந்து நாங்கள் வெளியே சென்றபோது, ஒரு பெண் என் மகனிடம், “நாளை இரவு உன் தந்தை, மேடைக்கு வந்து பிரசங்கம் செய்யும் போது, நான் ஒரு செய்தியை அளிக்கப் போகிறேன் என்றாளாம். அவன், செய்தியா? ''நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?'' என்று கேட்டான். அன்றிரவு, நான் பீட அழைப்பைக் கொடுத்துக் கொண்டிருந்த போது, அவள் தலை மயிரை இறுக்க கட்டிக்கொண்டு, காலுரைகளை இழுத்துவிட்டு, குதித்தெழுந்து வந்து, மேலும் கீழும் குதித்து, அந்நியபாஷை பேசி தீர்க்கதரிசனம் உரைக்கத் தொடங்கினாள். நான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பீட அழைப்பை தொடர்ந்து கொடுத்தேன். அதை நான் மதிக்கவேயில்லை. ஏனெனில், அது சரியல்ல. அப்படி செய்யக்கூடாது என்று வேதம் உரைத்திருக்கிறது தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறது தேவன் மேடையின் மீது பேசிக் கொண்டிருக்கும் போது, அவரைப் பேச அனுமதியுங்கள். ''அங்கே உட்கார்ந்திருக்கிற ஒருவனுக்கு ஏதாகிலும் வெளிப்பட்டால், மற்றவர்கள் முடிக்கும் வரைக்கும் அமைதியாயிருக்கக்கடவன்'' என்று பவுல் கூறியுள்ளான். அது உண்மை. நான் வெளியே சென்றபோது ஒரு பெரிய கூட்டம் என்னிடம் வந்து, ''நீங்கள் இன்றிரவு பரிசுத்த ஆவியை விசனப்படுத்திவிட்டீர்கள்'' என்றனர். ''அப்படி நான் என்ன செய்தேன்?“ என்று கேட்டேன். ''அல்லேலூயா! அந்த பெண் அந்த செய்தியை அளித்த போது!'' என்றனர். அதற்கு நான், ''நான் பிரசங்கம் செய்து கொண்டிருந்தேன், அந்த பெண் அல்லவா ஒழுங்கு தவறிவிட்டாள்?'' என்றேன். அவர்களோ, அது நேரடியாக சிங்காசனத்திலிருந்து வந்தது. நீங்கள் பிரசங்கித்ததைக் காட்டிலும் அது புதிதானது (Fresh) என்றனர். 71உங்கள் கனத்திற்காக இதை நான் கூறுகிறேன். அது மூளைக்கோளாறு, அல்லது அவமரியாதை, அல்லது தேவனை அறிந்து கொள்ளாததனால் ஏற்பட்ட தவறான போதகத்துக்கு எடுத்துக் காட்டாயுள்ளது. அது முற்றிலும் உண்மை. தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார் என்று இவர்கள் அறியவில்லை. வேதாகமத்தில் என்ன எழுதியுள்ளது என்று இவர்கள் அறியாமலிருக்கின்றனர். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம், மேலும் கீழும் குதித்து, அந்நிய பாஷை பேசி, ''நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டேன். அல்லேலூயா!'' என்று கூறுவதே. ஆப்பிரிக்காவில் ஐயாயிரத்துக்கும் அதிகமான மந்திரவாதிகள், தங்கள் முகங்களில் இரத்தத்தை பூசிக்கொண்டு மண்டை ஓட்டிலிருந்து இரத்தத்தைக் குடித்து, பிசாசை நோக்கி கூப்பிட்டு, மேலும் கீழும் குதித்து, அந்நிய பாஷை பேசுவதை நான் கண்டிருக்கிறேன். 72அந்நிய பாஷை பேசுதல் தேவனுடைய வரமாயிருப்பினும், அது பரிசுத்த ஆவியின் பிழையற்ற நிரூபணமாகி (infallible proof) விடமுடியாது. அதை இப்பொழுது கூற விரும்புகிறேன். பரிசுத்த ஆவியினால் ஊக்குவிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் அனைவரும் அந்நியபாஷை பேசுகின்றனர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். சில சமயங்களில் ஒருவன் தேவனால் அதிகமாக ஊக்குவிக்கப்படும் போது அவன் அந்நிய பாஷை பேசுகிறான் என்பதை நான் விசுவாசிக்கிறேன். ஆனால், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கு அதுவே அடையாளம் என்று நான் விசுவாசிப்பதில்லை. ஆம் ஐயா. சில நேரங்களில் தேவன் பேரில் விசுவாசம் கொண்ட ஒருவன், ஐம்பது போதகர்கள் ஜெபம் செய்த பின்பும் புற்றுநோய் குணமாகாத ஒரு குழந்தையின் மேல் கைகளை வைக்கிறான். அப்பொழுது அந்த குழந்தை குணமாகிவிடுகிறது. ஏனெனில், அதன் தாய் அந்த குழந்தைக்காக விசுவாசம் கொண்டிருந்தாள். அவள் கிறிஸ்துவின் சரீரத்தின் ஒரு அங்கத்தினளாயிருக்கிறாள். எனவே தேவன், அதை அவளுக்கு அருளினார். ஆம், ஐயா. அப்படி நடப்பதை நான் கண்டிருக்கிறேன். அது உண்மையென்று எனக்குத் தெரியும். அது என்ன? நாம் கிரியை செய்வதற்காக, சபையானது ஒழுங்கிற்குள் கொண்டு வரப்படுதல். 73நாம் தொடருவதற்கு முன்பு, இவ்வசனத்தின் எஞ்சியுள்ள பாகத்தை படிப்போம். ...கேட்டு விசுவாசிகளான போது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள். ''முத்திரை'' - முத்திரை என்பது என்ன? முத்திரை எதைக் குறிக்கிறது? முதலாவதாக, ஒரு வேலை முடிந்துவிட்டதென்று முத்திரை காண்பிக்கிறது. இரண்டாவதாக, அதற்கு முதலாளி யாரென்பதையும் முத்திரை காண்பிக்கிறது. மூன்றாவதாக, அது பாதுகாப்பைக் குறிக்கிறது. நாம் ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நானும் என் தந்தையும் முன்பு பென்சில்வேனியா ரயில் மார்க்க நிர்வாகத்தில் பணிக்கு அமர்ந்திருந்தோம். அப்பொழுது நாங்கள் ரயில் பெட்டிகளில், தின்பண்டங்கள் அடைக்கப்பட்ட தகர டப்பிகளை (Tin cans) நிரப்புவது வழக்கம். சிலர் கீழே நின்று கொண்டிருப்பார்கள். சிலர் மேலே நிற்பார்கள். சிலர் அங்கு நிற்பார்கள். இவ்வாறு நாங்கள் நிரப்புவோம். ஆனால், அந்த பெட்டிக்கு முத்திரை வைப்பதற்கு முன்பாக ஆய்வாளர் (Inspector) அங்கு வந்து, இதை தள்ளிப்பார்ப்பார்; அதை குலுக்கிப் பார்ப்பார் இதை வெளியே எடுத்துவிடுங்கள். அது சேருவதற்கு முன்பு உடைந்துவிடும். மறுபடியும் எல்லாவற்றையும் நிரப்புங்கள். நீங்கள் சரியாக நிரப்பவில்லை'' என்று சொல்லிவிட்டு போய்விடுவார். அப்படியானால், அந்த பெட்டியை ஆய்வுக்கு பின் அவர் நிராகரித்து விட்டார் என்று அர்த்தம். 74அவ்வாறே பரிசுத்த ஆவியும் நமது ஆய்வாளராக இருக்கிறார். அவர் உங்களை சிறிது குலுக்கி பார்க்கிறார். நீங்களும் குலுங்குகிறீர்கள். ''நீ தேவனுடைய வார்த்தை அனைத்தையும் விசுவாசிக்கிறாயா?'' ''நான் இயேசுவின் நாமத்தை விசுவாசிப்பதில்லை.'' ''உடனே ஆய்வாளர் அதை நிராகரிக்கிறார். ஏனெனில், நீ குலுங்குகிறாய்.'' ''தெய்வீக சுகமளித்தல் போன்றவைகளை நான் விசுவாசிப்பதில்லை. ''அப்படியானால், நீ இன்னமும் குலுங்குகிறாய் உடனே ஆய்வாளர்.'' ''அதை எடுத்துப் போடுங்கள்'' என்கிறார். ''இயேசு கிறிஸ்து, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று விசுவாசிக்கிறாயா?'' ''ஒருவிதம் விசுவாசிக்கிறேன்.'' நீ இன்னமும் குலுங்குகிறாய். ''அதை வெளியே எடுத்துவிடும். அது இன்னும் தயாராகவில்லை'' என்கிறார் ஆய்வாளர். ஆம், ஐயா. சகோதரனே, நீ இவை எல்லாவற்றிற்கும் ''ஆமென்'' என்று சொல்ல முடியுமானால், நீ தயாராகிவிட்டாய். நீ பரிசுத்த, ஆவியைப் பெற்றுக் கொண்டாயா?'' ''ஆமென்.'' ''எல்லாம் முடிந்துவிட்டதா?'' ''ஆமென்.'' “அப்பொழுது ஆய்வாளர் என்ன செய்கிறார்? ஓ, எல்லாம் சரியாக, பிடிப்பாக (tight) அடுக்கப்பட்டுவிட்டது. அது சுவிசேஷம் நிறைந்ததாயிருக்கிறது என்று சொல்கிறார். ஓ, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் நன்றாயுள்ளது. எல்லாமே பரிபூரணமாயுள்ளது. ''நான் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறேன், ஆமென்! ஆமென்! ஆமென்!'' ''தேவன் இப்பொழுதும் சுகமளிக்கிறார் என்று விசுவாசிக்கிறாயா?'' ''ஆமென்.'' ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று விசுவாசிக்கிறாயா?'' ''ஆமென்.'' பரிசுத்த ஆவி எப்பொழுதும் போல தத்ரூபமாயுள்ளது என்று விசுவாசிக்கிறாயா?'' ''ஆமென்.'' ''பவுலின் மீது விழுந்த அதே ஆவி நம் மீதும் விழுகிறது என்று விசுவாசிக்கிறாயா?'' ''ஆமென்.'' அவர்கள் மீது தங்கியிருந்த போது, அது செய்த அதே கிரியைகளை நம் மீதும் தங்கியிருந்து செய்கிறது என்று விசுவாசிக்கிறாயா'' ''ஆமென்.'' ''ஓ, ஓ, இப்பொழுது பிடிப்பாகிவிட்டது. நாம் கதவை இப்பொழுது அடைத்துவிடலாம்'' என்கிறார். ஆய்வாளர். 75அப்படி சொல்லி ஆய்வாளர் கதவை அடைத்த பின்பு, அவர் என்ன செய்கிறார்? அவர் அதன் மேல் முத்திரை போடுகின்றார். அவர் ஒரு கொரடாவை எடுத்து அதை நன்றாக முறுக்கி, அதன் மேல் முத்திரை போடுகின்றார். அந்த முத்திரையை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் உடைக்கக் கூடாது. அந்த வண்டி சேரவேண்டிய இடம் போஸ்டன் என்றால், அங்கு அடையும் வரைக்கும் அந்த முத்திரை உடைக்கப்படக் கூடாது. அப்படி செய்வது சட்ட விரோதமானது. அந்த இடத்தை அது அடைந்தவுடனே, அந்த முத்திரையை உடைக்க யாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதோ, அவர் மாத்திரமே அந்த முத்திரையை உடைக்க வேண்டும். அது உண்மை. அது இன்னின்ன நிர்வாகத்திற்கு சொந்தமானது அது ''முத்திரிக்கப்பட்டுள்ளது'' என்று எழுதப்பட்டுள்ளது. அந்த வண்டியில் பொருட்கள் சரியாக அடுக்கப்பட்டுவிட்டது. அது புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாயுள்ளது என்னும் உறுதிக்கு தான் அது அடையாளமாயுள்ளது. நீங்கள் முத்திரிக்கப்பட வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். அப்படி நீங்கள் முத்தரிக்கப்பட்டவுடன். 76ஒரு கிறிஸ்தவன் சுவிசேஷத்தினால் சரியாக அடுக்கப்பட்டு, தேவனுடைய நன்மையினால் நிறைக்கப்பட்டு, அது அவனுக்குள் காணப்படும் போது, அவன் திறந்த மனதுடன் தேவனுக்காக பணிபுரிய ஆயத்தமாகி, தன் ஸ்தானத்தில் பொருத்தப்பட அனுமதித்து, பரிசுத்த ஆவி அவனிடம் செய்யக்கூறும் அனைத்தையும் அவன் செய்ய முற்படுவான். அவன் மரணத்தினின்று ஜீவனுக்குள் பிரவேசித்து, உலகத்தின் காரியங்கள் அனைத்தினின்றும் வேறு பிரிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டு, அவனிடத்தில் வரும் வெளிச்சத்தின் பாதையில் நடந்து செல்வான். அவன் ஆயத்தமாகிவிட்டான், அப்பொழுது தேவன் கதவுகளை அடைத்து, உலகத்திலிருந்து அவனை வேறுபிரித்து, உலக காரியங்களை உதைத்தெறிந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியினால் அவனை முத்திரிக்கிறார். அல்லேலூயா! எவ்வளவு காலமாக? அவன் சேரவேண்டிய இடத்தை அடையும் வரைக்கும். நீங்கள் மறுபடியுமாக அவனை தண்டவாளத்திலிருந்து இறக்கி, முத்திரையை உடைத்து, உள்ளே எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது கிடையாது உள்ளே எல்லாம் சரியாயுள்ளது என்னும் உறுதியுடன் அதை அப்படியே விட்டுவிடுகின்றீர்கள். ஏனெனில், ஆய்வாளர் அதை ஏற்கனவே பரிசோதித்து விட்டார். நீங்கள் எவ்வளவு காலமாக முத்தரிக்கப்பட்டிருக்கிறீர்கள்? மீட்கப்படும் நாள் வரைக்கும் அவ்வளவு காலமாக நீங்கள் முத்தரிக்கப்பட்டிருக்கிறீர்கள். ''சரி, சகோ. பிரன்ஹாமே, நாம் மரித்த பின்பும் அதை பெற்றிருக்கிறோம் என்றா கூறுகின்றீர்கள்?'' என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் சதாகாலமும் அதை பெற்றிருக்கின்றீர்கள். ஜீவன் எங்கே தொடங்குகின்றது? பீடத்தில், அங்கே நீங்கள் ஒரு சிறு நிழலைக் காண்கிறீர்கள். அதுதான் பரிசுத்த ஆவி என்னும் முத்திரை... பின்பு, நான் அன்று கூறியது போன்று, அது நிழல்களின் நிழலாகிவிடுகிறது. நீங்கள் மரிக்கும் போது, இந்நிழல்களின் வழியாக கடந்து நீர்த்துளிகளிடம் வருகிறீர்கள். அங்கிருந்து நீங்கள் தண்ணீர் மெல்ல சொட்டிக் கொண்டிருக்கும் ஊற்றண்டை வருகிறீர்கள். அங்கிருந்து நீங்கள் அருவியையடைந்து அருவியிலிருந்து ஆற்றையடைந்து. ஆற்றிலிருந்து தேவனுடைய அன்பு என்னும் கடலை அடைகின்றீர்கள். அப்பொழுதெல்லாம் நீங்கள் அதே நபராக இருக்கின்றீர்கள். 77பின்வாங்கிப் போன சவுல் ராஜாவை எடுத்துக்கொள்வோம். அவன் தேவனை சரிவர அடைய முடியவில்லை. ஆயினும் அவன் இழக்கப்படவில்லை. நிச்சயமாக. அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் தேவனை விட்டு அகன்று சென்றான், ஆகையால் தான் சகோதரரே, ''நீங்கள் இழக்கப்பட முடியாது'' என்று கூறுகிறேன். சவுல் தேவனுடைய சித்தத்திற்கு அப்பால் சென்றான். அதன் காரணமாக அவன் தேவனுடன் வேறுபாடு கொண்டவனாயிருந்தான். இதை நான் கூறியிருக்கக் கூடாது. சரி நான் மகிழ்ச்சி நிறைந்த சபையோரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். முதலாவதாக, அவன் ஊரீம், தும்மீம் இடத்திற்கு சென்றான். ஊரீம், தும்மீம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது தான் ஆரோன் அணிந்திருந்த ஏபோத் - மார்க்கவசம். தேவன் எல்லா காலங்களிலும் இயற்கைக்கு மேம்பட்ட தேவனாயிருந்து, இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் பதிலளித்து வந்துள்ளார். ஒரு தீர்க்கதரிசி, தீர்க்கதரிசனம் உரைக்கும் போது ஊரீம், தும்மீமின் மூலம் அந்த வெளிச்சம் பிரகாசிக்காவிட்டால், அவன் உரைத்த தீர்க்கதரிசனம் தவறு என்பது புலனாகும். ஒரு சொப்பனக்காரன் தன் சொப்பனத்தைக் கூறும்போது ஊரீம், தும்மீமின் வெளிச்சம் பிரகாசிக்காவிட்டால், அது எவ்வளவு நல்லதாக தென்பட்டாலும், அது தவறு. 78அவ்வாறே நீங்கள் எத்தனை டாக்டர் பட்டங்களை பெற்றிருந்தாலும், எவ்வளவு பெரிய ஸ்தாபனத்தை சேர்ந்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை. சகோதரனே, நீ உரைக்கும் தீர்க்கதரிசனம் அல்லது பிரசங்கிக்கும் போதகம் தேவனுடைய வார்த்தையின்படி அமைந்திராவிடில், நீ கூறுவது தவறு... இந்த வேதாகமம் தான் ஊரீம், தும்மீம். உலகத் தோற்றத்துக்கு முன்பு முன்குறித்தல், என்பது கிடையாது என்று நீ சொல்வாயானால், இதில் வெளிச்சம் பிரகாசிக்காது. ஏனெனில், வேதம் அதைக் குறித்து போதிக்கின்றது. ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டுமென்று நீ கூறினால், இதில் வெளிச்சம் பிரகாசிக்காது. ஏனெனில் வேதத்தில் யாருமே அம்முறையில் ஞானஸ்நானம் பெறவில்லை; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மாத்திரமே ஞானஸ்நானம் பெற்றுள்ளனர். இதில் வெளிச்சம் பிரகாசிக்கவில்லையென்றால், எங்கோ தவறுள்ளது என்று அர்த்தம். 79ஊரில் தும்மீம் சவுலுக்கு பதிலளிக்கவில்லை. அவன் சொப்பனமும் காணவில்லை. அவன் தேவனை விட்டு அதிக தூரம் சென்றுவிட்ட காரணத்தால் அவனுக்கு சொப்பனமும் கூட கிடைக்கவில்லை. ஆகவே, அவன் என்ன செய்தான் தெரியுமா? அவன் மந்திரவாதியிடம் சென்றான். பிசாசின் கையாளான அந்த சூனியக்காரி. அவன் அவளை அணுகி, ''எனக்காக அஞ்சனம் பார்க்க முடியுமா?'' என்று கேட்டான். அவளோ, ''அஞ்சனம் பார்க்கிறவர்களை சவுல் கொன்று போடுவதாக கூறியுள்ளாரே'' என்றாள். அவன் உன்னை நான் காப்பாற்றுவேன்'' என்றான். அவன் வேஷம் மாறி சென்றிருந்தான். அவன், எனக்காக மரித்தோரின் உலகத்திலிருந்து ஒருவரை எழும்பி வரப்பண்ணு'' என்றான். இதை கவனியுங்கள். தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் ஆவியை எழும்பி வரப்பண்ணு'' என்றான். அவள் அப்படி செய்தபோது முகங்குப்புற விழுந்து தேவர்கள் ஏறி வருகிறதைக் காண்கிறேன்'' என்கிறாள். பாருங்கள், அவள் அஞ்ஞானி. எனவே, ''தேவர்கள்'' என்கிறாள். இரண்டு அல்லது மூன்று பேர். ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைப் போன்று.'' அவள், ''தேவர்கள் ஏறிவருகிறதைக் காண்கிறேன்'' என்கிறாள். சவுல், ''அவருடைய ரூபத்தை விவரி. காண்பதற்கு அவர் எப்படி இருக்கிறார்?'' என்று கேட்டான். அவள், அவர் மெலிந்து காணப்படுகிறார். அவர் சால்வையைப் போர்த்துக் கொண்டிருக்கிறார்'' என்றாள். சாமுவேல் மாறவேயில்லை. அவன், ''அதுதான் சாமுவேல், அவரை இந்த அறைக்கு கொண்டு வா, என் முன்னால் கொண்டு வா'' என்றான். கவனியுங்கள். சாமுவேல், சவுலுக்கு முன்பாக வந்த போது, ''நீ தேவனுக்கு சத்துருவாயிருக்கும் போது என்னை எழும்பி வரப் பண்ணினதென்ன?'' என்று கேட்டான். கவனியுங்கள். சாமுவேல் அந்த ரூபத்தில் இருந்தது மாத்திரமல்ல, தீர்க்கதரிசன ஆவியும் அவனிடம் அப்பொழுதும் இருந்தது. அது தவறென்று யாராகிலும் கூறுங்கள் பார்க்கலாம், அது உண்மை! அவன் அப்பொழுதும் தீர்க்கதரிசியாயிருந்தான். ''நாளை யுத்தம் உனக்கு எதிராக செல்லும். நீயும் உன் குமாரரும் நாளை யுத்தத்தில் கொல்லப்பட்டு, நாளை இந்நேரம் என்னோடிருப்பீர்கள்'' என்று அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான். அது சரிதானே அவன் அப்பொழுதும் தீர்க்கதரிசியாயிருந்தான். ''ஓ, அது ஒரு சூனியக்காரி'' என்று நீங்கள் கூறலாம். 80சரி, சூனியக்காரியல்லாத ஒருவரைக் குறித்து இப்பொழுது கூறப்போகிறேன். ஒரு சமயம் இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் கூட்டிக்கொண்டு மறுரூப மலையின் மேல் சென்றார். அச்சமயம் தேவன் தமது குமாரனை அவருடைய ஸ்தானத்தில் பொருத்தினார். அன்றிரவு நான் கூறினது போன்று, குமாரனை ஸ்தானத்தில் பொருத்துதல். அவர்கள் அங்கு சென்ற போது, மோசேயும், எலியாவும் அங்கு நிற்பதைக் கண்டனர். அவர்கள் இயேசுவுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் மிதந்து கொண்டிருக்கும் சிறு வெள்ளை மேகங்களாக காணப்படவில்லை; மனித உருவில் அவர்கள் காணப்பட்டு இயேசுவுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அதற்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு, எவருமே அறிந்திராத கல்லறையில் மோசே அடக்கம் பண்ணப்பட்டான். எலியா ரதத்தில் ஏறி வீடு சென்று, அப்பொழுது ஐந்நூறு ஆண்டுகளாகியிருந்தன. இயேசு கல்வாரிக்குச் செல்வதற்கு முன்பு, இவ்விருவரும் உயிருள்ளவர்களாக அங்கு நின்று கொண்டு அவருடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அல்லேலூயா! ''மீட்கப்படும் நாள்வரைக்கும் முத்திரை போடப்படுதல்.'' 81நான் துரிதமாக முடிக்கிறேன். ஏனெனில் தாமதமாகி விட்டது. பின்பு நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கலாம். இன்னும் ஐந்தே நிமிடங்கள் 14ம் வசனம் அதற்கு முன்னுரையாக 13ம் வசனத்தை படிப்போம். நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு விசுவாசிகளான போது... அவர்களுக்கு எப்படி இரட்சிப்பு கிடைத்தது என்பதை கவனிக்கவும். இவர்கள் எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள். நீங்கள் கொரிந்தியர்களை கவனித்தீர்களா? அவன் ஒவ்வொரு முறையும் அவர்களிடம், ''நான் உங்களிடத்தில் வரும் போது, ஒருவன் அந்நிய பாஷை பேசுகிறான். ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் தீரக்கதரிசனம் உரைக்கிறான்...'' என்றான். பாருங்கள், அவன் அவர்களுக்கு ஒன்றுமே கற்பித்துக் கொடுக்க முடியவில்லை. ஏனெனில் அவர்கள் இதை, அதை, மற்றதை மாத்திரமே விரும்பி வந்தனர். எபேசியர் மத்தியிலும் ஆவியின் வரங்கள் காணப்பட்டன. ஆனால் அவையாவும் ஒழுங்காக அமைந்திருந்தன. எபேசியருக்கு போதித்தது போன்று அவன் கொரிந்தியருக்கு போதிக்க முடியவில்லை. ஏனெனில், அப்படி போதிக்கப்படுவதற்கு அந்த சபை ஒழுங்கைப் பெற்றிருக்கவில்லை. ஆனால், எபேசியருக்கோ அவனால் சத்திய வசனத்தை தத்ரூபமாய் போதிக்க முடிந்தது நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு விசுவாசிகளான போது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்த ஒமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார் (earnest of our inheritance.) வ்யூ! 82பரிசுத்த ஆவி என்பது என்ன? நீங்கள் என்னைப் பொறுத்துக் கொண்டால், மற்ற வசனங்களையும் துரிதமாகப் படித்து முடிக்க விரும்புகிறேன். சகோ. மைக் அன்றிரவு நாம் எதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தோம்? அந்த இடத்தில் அவர்கள் அனைவரும் சந்தோஷமாயிருந்தனர். எல்லாமே அங்கு சமாதானமாக இருந்தது. அங்கு பூரண அன்பு காணப்பட்டது. ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு அடி எடுத்து வைக்கும் போது, அந்நிலைக்கு சற்று அருகில் வருகின்றீர்கள். ஆனால், அது இறங்கி பூமிக்கு வரும்போது, நீங்கள் நிழல்களின், நிழல்களின், நிழலை மாத்திரமே பெற்றிருக்கின்றீர்கள். பரிசுத்த ஆவியை நீங்கள் அந்த அளவிற்கு தான் பெற்றிருக்கின்றீர்கள். அது அன்பு. ஆனால் நீங்கள் ஏதோ ஒன்றிற்கு தாகமுள்ளவர்களாய் மாத்திரம் இருக்கிறீர்கள். ஓ, வயோதிபர் போன்றவர்கள்... நான் மீண்டும் வாலிப பருவத்தையடைந்து, பதினைந்து அல்லது இருபது வயது வாலிபனாக இருக்க எவ்வளவாக விரும்புகிறேன். அந்நிலையையடைய நான் எதை வேண்டுமானாலும் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறேன். ஆனால், அதனால் என்ன பயன்? நான் பதினைந்து வயதுள்ளவனாயிருந்தாலும், இன்றிரவு நான் மரிக்கக்கூடும். அது அவ்வளவு நிச்சயமற்றது. இன்றிரவு நீ பதினைந்து வயதுள்ளவனாயிருந்து, நீ வீடு திரும்பும் போது, உன் தாய் உயிரோடிருப்பாளா இல்லையா என்று உனக்கு எப்படித் தெரியும்? நீ நிச்சயம் வீடுதிரும்புவாய் என்று உனக்கு எப்படி தெரியும்? உனக்கு பன்னிரெண்டு வயதாகி, நீ ஆரோக்கியமுள்ளவனாயிருக்கலாம். இருப்பினும், நாளை நீ உயிரோடிருப்பாய் என்னும் நிச்சயம் உனக்குண்டா? ஒருக்கால் நீ விபத்தில் கொல்லப்படலாம், அல்லது திடீரென்று மரித்து தரையிலே விழலாம். என்ன வேண்டுமானாலும் உனக்கு நேரிடலாம். அவ்வளவு நிச்சயமற்றது. எதுவுமே இங்கு நிச்சயமில்லை. ஆனால், அதற்காக நீ வாஞ்சிக்கிறாய், அது என்ன? மேலே உள்ளவைதான் உன்னை அவ்விதம் வாஞ்சிக்கும்படி செய்கின்றன. 83அப்பொழுது நீ அதற்குள் வந்து நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்கிறாய். அப்பொழுது என்ன நேரிடுகிறது? அதுதான் அச்சாரம் (earnest). ஏதாவது ஒரு பொருளை வாங்கும் போது, நாம் முன்தொகை கொடுக்கிறோம் (earnest money). ஒரு கார் வாங்க நான் உங்களிடம் வருவதாக வைத்துக் கொள்வோம், ''இதன் விலை என்ன?'' என்று நான் கேட்பேன். நீங்கள், ''சகோ. பிரான்ஹாமே, இதன் விலை மூவாயிரம் டாலர்கள் என்கிறீர்கள். ''அதற்கு முன் தொகை எவ்வளவு கட்ட வேண்டும்?'' ''ஐந்நூறு டாலர்கள் போதும்.'' “சரி. இதோ ஐந்நூறு டாலர்கள். பாக்கி தொகையை இயன்றவரை சீக்கிரம் கொடுத்து விடுகிறேன். காரை யாருக்கும் கொடுக்காமல் வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் முன்தொகை செலுத்துதல். அதற்கு செலுத்தப்படும், ''அட்வான்ஸ்.'' ...வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைப் போடப்பட்டீர்கள் (பரிசுத்த ஆவியானவர் வாக்குத்தத்தம் செய்துள்ள அந்த முத்திரை என்ன?) அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார். 84அது என்ன? அதுதான் முன் தொகை செலுத்துதல். சகோதரனே, ஓ, ஓ, ஓ நாம் பெற்றுள்ள பரிசுத்த ஆவி முன்தொகையாயிருக்குமானால், நாமனைவரும் அங்கு அடையும் போது எப்படியிருக்கும்? இந்த முன் தொகையாகிய பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டே நாம் இவ்வளவாக அனுபவித்து சந்தோஷமாயிருக்கிறோம் என்றால்... நான் தொண்ணூறு வயதுள்ளவர்கள் பிரசங்கம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஒரு இரவு வயோதிபப் போதகர் ஒருவர் எழுந்து, இப்படி, இப்படி, நடந்து மேடைக்கு வந்தார். நான், ''இந்த வயோதிபரா பிரசங்கம் செய்யப் போகிறார்?'' என்று நினைத்தேன். அவர் கறுப்பு நிறத்தவர். பிரசங்கிமார்களின் நீண்ட கோட் ஒன்றை அவர் அணிந்திருந்தார். அவர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்றார். நான், ''இந்த வாலிப போதகர்களில் யாராகிலும் ஒருவரை அவர்கள் பிரசங்கிக்க விட்டிருக்கக் கூடாதா? இந்த வயோதிபர் என்ன பிரசங்கம் செய்யப் போகிறார்?'' என்று நினைத்துக் கொண்டேன். அந்த வயோதிபர், சகோதரரே, நாள் முழுவதும் சகோதரர்கள் பிரசங்கம் செய்வதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். இயேசு இவ்வுலகில் என்ன செய்தார் என்பதைக் குறித்தும் அவர் பரலோகத்தில் என்ன செய்தார் என்பதைக் குறித்தும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இன்றைய என் பொருளை யோபு 7:27லிருந்து தெரிந்து கொண்டிருக்கிறேன். உலகத் தோற்றத்துக்கு முன்பு விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்கள்'' என்றார். அவர் இவ்விதமாய் பிரசங்கித்துக் கொண்டே சென்று, ''உங்களுக்குத் தெரியுமா? பரலோகத்தில் இவ்வாறு நிகழ்ந்தது'' என்று கூறி, பரலோகத்தில் நிகழ்ந்தவைகளை தெளிவாக வர்ணித்து, இரண்டாம் வருகையின் போது காணப்படவிருக்கும் வானவில் வரை வந்தார். அச்சமயம் பரிசுத்த ஆவியானவர் அவரை நிரப்பினார். அந்த வயோதிபரை அவர்கள் கைபிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு சுமார் தொண்ணூற்றைந்து வயது இருக்கும். அவருக்கு கூன் விழுந்திருந்தது. அவருக்கு வழுக்கை விழுந்து தலையில் கொஞ்சம் மயிர் மாத்திரமே இருந்தது. ஆனால் அவர் மேடையிலேறி, ''ஹப்பி! அல்லேலூயா மகிமை!'' என்றெல்லாம் ஆர்ப்பரித்து, மேலும் கீழும் குதிக்கத் தொடங்கி விட்டார். ''நான் பிரசங்கம் செய்ய போதிய இடம் இங்கு இல்லை'' என்று அவர் கூறிவிட்டார். அவர் இப்படியாக மேலும் கீழும் முழு ஆர்வத்துடன் குதித்தார் அது அச்சாரம் (earnest) மாத்திரமே. ஓ! 85பரிசுத்த ஆவியானவர் என்ன செய்கிறார்? ஓ, இது மிகவும் நல்ல பாகம். அடுத்த அதிகாரத்தின் முதலாம் வசனத்தைப் படிக்கிறேன். படிக்கலாமா? உங்களுக்கு சம்மதம்தானா? அப்படியானால், ''ஆமென்'' என்று சொல்லுங்கள் (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி.) சரி, 2ம் அதிகாரம் முதலாம் வசனம் துரிதமாக கவனியுங்கள் அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.... ''அவர் உங்களை உயிர்ப்பித்தார் அந்த அச்சாரத்தைக் கொண்டே அவர் உங்களை உயிர்ப்பித்திருக்க, நீங்கள் முழுவதையும் பெறும் போது எப்படியிருக்கும்? ஓ, மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்ட பவுல், ''தேவன் தம்மில் அன்பு கூறுகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவும்மில்லை. அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை'' (I.கொரி;2:9) என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. தேவன் அதை அறிந்திருக்கிறார். நாம் சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷத்தைக் குறித்து இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறோம். வியூ! வியூ! ஒரு காலத்தில் அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும், மரித்தவர்களாயிருந்த உங்களை அவர் நிழல்களின், நிழல்களின் நிழல்மூலமாய் உயிர்ப்பித்திருக்க, நீங்கள் இந்த நிழல்களையெல்லாம் கடந்து, ஓடையையடைந்து, ஓடையிலிருந்து ஆற்றையடைந்து, ஆற்றிலிருந்து கடலை அடையும்போது எப்படியிருக்கும்? 86நீங்கள் மீட்கப்பட்டு, ஒரு புதிய சரீரத்தைப் பெற்று, வாலிபனாகவோ அல்லது வாலிபப் பெண்ணாகவோ மாறி, இனி ஒருபோதும் மரிக்க கூடாத நிலையையடையும் போது எப்படியிருக்கும்? நீங்கள் அப்பொழுது இவ்வுலகை கீழ் நோக்கிப் பார்த்து, ''நான் அங்கு திராட்சை பழங்களை தின்று குளிர்ந்த தண்ணீர் அருந்தி அனுபவித்தேன். ஆனால், அவை இங்கு எனக்கு அவசியமில்லை'' என்பீர்கள். இயேசு ஒரு நாளில் வரப்போகிறார். அப்பொழுது நான் வாழப்போகும் இந்த தேவதூதனின் சரீரம் - இந்த தியாபனி (theophany) சரீரம், ஒரு ஸ்திரீயின் கர்ப்பத்தின் வழியாகவராது. அது இன சேர்க்கையின் மூலம் தோன்றுவதில்லை. ஏனெனில், அவர் இனசேர்க்கையின்றி பிறந்தார். எனவே நானும் இனசேர்க்கையின்றி உயிரோடெழுவேன். என்றாவது ஒரு நாளில் அவர் பேசுவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிரோடெழுவார்கள். அச்சமயம் நான் முன்பு வாழ்ந்திருந்த சரீரம் மகிமையின் சரீரமாக உயிரோடெழுந்திருக்கும். அப்பொழுது நான், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் வரப்போகும் அந்த மகிமையின் காலங்கள் முழுவதும் மகிமையின் சரீரத்தில் நடப்பேன், பேசுவேன், வாழுவேன், வாழ்க்கையை அனுபவிப்பேன். அல்லேலூயா! சகோதரர்களே, பார்த்தீர்களா? அது தான் சுவிசேஷம். 87''ஆனபடியினாலே நான்....'' பவுல் அவனுக்கு ஏற்பட்ட உணர்ச்சியை இங்கு உரைக்கிறான். மற்ற வசனங்களை நான் படித்துவிடுகிறேன். பிறகு நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்போம். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக. ஆனபடியினாலே, கர்த்தராகிய இயேசுவின் மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும் பரிசுத்தவான்களெல்லார் மேலுமுள்ள உங்கள் அன்பையுங் குறித்து நான் கேள்விப்பட்டு (நீங்கள் உண்மையாகவே முன்குறித்தல், நித்திய ஜீவன் இரட்சிப்பு போன்றவைகளில் விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் கேள்விப்பட்டேன்.) இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம் பண்ணி என் ஜெபங்களில் உங்களை நினைத்து; நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும், தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருள வேண்டுமென்றும்; தம்மை நீங்கள் அறிந்து கொள்ளுதல்: ''...அவர் தம்மை எல்லா காலங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். நீங்கள் கிருபையிலிருந்து கிருபைக்கும், வல்லமையிலிருந்து வல்லமைக்கும், மகிமையிலிருந்து மகிமைக்கும், வளர வேண்டும். நீங்கள் பின்னடைய முடியாது. நீங்கள் மகிமையிலிருந்து மகிமைக்கு வளர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும். உங்களுக்காக நான் ஜெபித்துக் கொண்டிருப்பேன்.'' பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்று.... 88நீங்கள் குருடாயிருப்பதனால் அதை அறியவில்லை என்று வேதம் கூறுகின்றது. ஆனால் இங்கு பவுல், ''நீங்கள் ஆராயும்படிக்கு அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்'' என்கிறான். நீங்கள் இருதயத்தினால் அறிந்து கொள்கிறீர்கள். அதைக் குறித்து தான் பவுல் இங்கு குறிப்பிடுகின்றான். உங்கள் கண்களினால் நீங்கள் காண்கிறீர்கள், ஆனால் உங்கள் இருதயத்தினால் நீங்கள் அறிந்து கொள்கின்றீர்கள். அது உங்களுக்குத் தெரியும். சரி, ''மகிமையின் தேவன்...'' 18ம் வசனத்தைப் பார்ப்போம். தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும். தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே, விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் (வ்யூவல்லமை போய்விட்டது என்கின்றனர். வல்லமை இன்னும் வரவில்லை...) மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொள்ளுகிறேன். [அவருடைய மகத்துவமான வல்லமை கிரியை செய்வதை விசுவாசிக்கிற உங்கள் மேல் தேவன் தம்முடைய வல்லமையை ஊற்றுவாராக என்று வேண்டிக் கொள்ளுகிறேன். பாருங்கள்?] எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும் இம்மையில் மாத்திர மல்ல மறுமையிலும் பேர் பெற்றிருக்கும் எல்லா நாமத்துக் கும்மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக. அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, ஓ, ஓ, ஒ! இதை நான் இப்பொழுது தொடங்காமலிருப்பது நல்லது. இன்றிரவு மீதியுள்ள வசனங்களை தியானிக்கலாம். ...ஒவ்வொன்றும் அவருடைய நாமத்தில் பெயரிடப்பட்டுள்ளது, இந்த உலகத்தில் மட்டும் இல்லை, இனி வரப்போகும் உலகத்திலும் கூட.... 89எல்லா நாமம் என்றால் என்ன? ஒவ்வொரு நபருடைய நாமமும் யாருடைய நாமத்தை தரித்திருக்கும்? (சபையோர், ''இயேசு'' என்று விடையளிக்கின்றனர் - ஆசி.) பரலோகம் முழுவதும் இயேசு என்று பெயரிடப்பட்டிருக்கும். சபை முழுவதும் இயேசு என்று பெயரிடப்பட்டிருக்கும். ஏனெனில், தேவனுக்குள்ள நாமம் அது ஒன்றே. அவர் யேகோவாயீரே - தேவன் அளித்த பலி; யேகோவா ராஃபா - உன் பரிகாரியாகிய கர்த்தர்; யேகோவா மனாசே - ஆண்டவரின் கொடி; வெவ்வேறு யேகோவாக்கள். அவர் விடிவெள்ளி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறார், அவர் பிதா என்று அழைக்கப்படுகிறார். அவர் அல்பா என்று அழைக்கப்படுகிறார். ஓமேகா என்று அழைக்கப்படுகிறார். அவர் முந்தினவர் என்று அழைக்கப்படுகிறார், பிந்தினவர் என்று அழைக்கப்படுகிறார். அவர் அநேக பட்டப் பெயர்களினால் அழைக்கப்படுகிறார். ஆனால் அவருக்கு ஒரு நாமம் மாத்திரமேயிருந்தது. ''நீங்கள் உலகமெங்கும் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று மத்தேயு கூறினபோது, அந்த நாமத்தை தான் குறிப்பிட்டான். நாமங்களில் அல்ல. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்'' பிதா என்பது நாமமல்ல, குமாரன் என்பது நாமமல்ல. அவையாவும் ஒரு நாமத்திற்குரிய பட்டப்பெயர்கள். அவையாவும் ஒரே தேவனின் மூன்று தன்மைகளின் பெயர்கள். ஆனால் அவருடைய நாமம் என்ன? தேவதூதன், ''அவருக்கு என்னவென்று பெயரிடுவாயாக'' என்கிறான்? (சபையோர், ''இயேசு'' என்று பதிலளிக்கின்றனர் - ஆசி). “ஏனெனில், அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.'' அதன் காரணமாகத்தான் வேதத்தில் அவர்கள் அனைவரும் அந்த நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றனர். இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குப்பிறகு சுமார் இருநூறு; இருநூற்றைம்பது ஆண்டுகள் கழித்து பரி. அகஸ்டின் இங்கிலாந்து அரசனுக்கு அதே முறையில் - இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் - ஞானஸ்நானம் கொடுத்தான். சரி. 90எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும், பேர் பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக. எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி எல்லாவற்றையும், எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய, அவருடைய சரீரமான சபைக்கு, அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார். என் சரீரத்துக்கு எல்லாவற்றின் மேலும் அதிகாரம் இருக்குமானால், என் சரீரம் எதுவோ, அதுதான் நானும். அது சரியா? நான் தான் அது. ஏனெனில், அந்த சரீரத்தின் மூலமாகவே நீங்கள் என்னை அறிகிறீர்கள். அது சரியா? தேவன் தமது எல்லாவற்றையுமே இயேசுவுக்குள் ஊற்றினார். ஆகவே இயேசு தேவத்துவத்தின் பரிபூரணத்தை தமது சரீரத்தில் கொண்டிருந்தார். அது சரியா? அவ்வாறே இயேசு தமது எல்லாவற்றையுமே தமது சபைக்குள் ஊற்றினார். ''நான் என் பிதாவினிடத்துக்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். (யோவான்;14:12) எல்லாவற்றையும், எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய அவருடைய சரீரம். 91ஓ, நான் எவ்வளவாக அவரை நேசிக்கிறேன் எவ்வளவாக அவரை நேசிக்கிறேன்! அன்றொரு நாள் ஊழியத்திற்காக ஆப்பிரிக்காவுக்கு நான் மேற்கொண்ட பயணத்தைக் குறித்து எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். இதற்கு முன்பு அதை நான் படித்ததில்லை. உங்களில் எத்தனை பேர், ''ஒரு தீர்க்கதரிசி ஆப்பிரிக்காவுக்கு விஜயம் செய்தல் என்னும் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்கள்? அந்த புத்தகத்தில், ஒரு இந்திய பையனை நான் உற்று நோக்கும் ஒரு புகைப்படம் வெளியாயுள்ளது. எத்தனை பேர் அதை கண்டிருக்கிறீர்கள்? பதினைந்து ஆண்டுகளுக்கும், அதிகமாக வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் செய்து வரும் ஒரு சுவிசேஷகர், ''என் வாழ்க்கையில் ஒரு அற்புதம் நிகழ்வதை நான் கண்டதேயில்லை'' என்றார். அவர், ''ஜனங்கள் தலைவலி என்று வருவார்கள், வயிற்று வலி என்று வருவார்கள். அவர்கள் சுகமடைந்து செல்வதைக் கண்டிருக்கிறேன். ஆனால், அற்புதம் என்பது ஏதோ ஒன்றை சிருஷ்டிப்பதாகும்'' என்றார். அந்த ஊழியக்காரன் அங்கு நின்று கொண்டு அதை பார்த்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த இந்திய பையனுடைய கால்களில் ஒன்று இவ்வளவுதான் இருந்தது. அவனுடைய மற்ற கால் சாதாரண கால் - சாதாரண ஒருவனின் காலைப் போல். அவன் அணிந்திருந்த காலணியைக் கண்டீர்களா? அது பதினான்கு, பதினைந்து அங்குலம் உயரமாயிருந்தது? அதனடியில் ஒரு இரும்புத் தகடு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த காலணிக்கு இரண்டு நீளமான ஆதாரங்கள் இருந்தன. நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அவன் நடந்து வந்தான். அவனை அவர்கள் கூட்டத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அவனுக்கு இரண்டு கக்க தண்டங்கள் (crutches) இருந்தன. அவன் இரும்பு காலணியைக் கழற்றி கீழே வைத்தான். அவன் காலை நான் கண்ட போது, அது இவ்வளவு சிறியதாக இருந்தது. 92அவன் ஒரு முகமதியன். ஆப்பிரிக்காவில் வெளியாகும் செய்தித்தாள்களில் எழுதப்பட்டிருந்தவைகளை நான் சென்ற ஞாயிறன்று உங்களுக்கும் படித்துக் காண்பித்தது ஞாபகமிருக்கிறதா? அதை இப்பொழுது இங்கு வைத்திருக்கிறேன். அங்கு சென்று திரும்பி வந்த சகோ. ஸ்டிக்கர் என்னும் மிஷனரி சகோதரன் அதை எனக்கு அனுப்பியிருந்தார். அதில் சகோ. பில்லி கிரஹாமைக் குறித்த ஒரு கட்டுரை உள்ளது. ஒரு முகமதியன் அவரிடத்தில் அற்புதங்களைச் செய்ய சவால் விட்ட போது, அந்த சவாலை அவர் ஏற்கத் தயங்கினதாகவும், அவன் அவரைக் கடலில் தள்ளினதாகவும் அதில் எழுதப்பட்டிருந்தது. என்ன நேர்ந்தது? இனிமேல் இங்கு ஊழியம் செய்து பயனில்லை என்று சொல்லி மிஷனரிமார்கள் ஊழியத்தைவிட்டு திரும்பி வருகின்றனர். அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். நான் பில்லி கிரஹாமை நேசிக்கிறேன். அவர் அருமையான தேவனுடைய மனிதன் என்பது என் கருத்து. பில்லி கிரஹாம் சவால் விட்டவனிடத்தில் என்ன செய்திருக்க வேண்டுமென்றால், ''சற்று பொறும்... இந்த சுய நீதியுள்ள பாப்டிஸ்டுகள் அவரை அனுமதித்திருந்தால், அவர் அப்படி செய்திருப்பார் என்று நினைக்கிறேன். பில்லி கிரஹாம் தேவனுடைய மனிதன் என்று நம்புகிறேன். அவர் அவனிடம், ''சற்று பொறும்! நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் ஊழியன். நீ பழைய ஏற்பாட்டை விசுவாசிக்கிறாய். இயேசு ஒரு சாதாரண மனிதன் என்று கூறினாய் அல்லவா? அதன்பேரில் விவாதிக்க உனக்கு சவால் விடுகிறேன்'' என்று கூறியிருக்கலாம். பிசாசின் சவாலை ஏற்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இல்லை, ஐயா! ஆனால் நானாயிருந்தால் அவனுக்கு மறுசவால் விட்டு, ''சரி நாம் விவாதிக்கலாம். நான் வேதத்தில் டாக்டர் பட்டம் பெற்றவன் என்று சொல்லியிருப்பேன். பில்லி கிரஹாம் வேதத்தில் டாக்டர் பட்டம்பெற்ற மேதை. ''இதைக் குறித்து உனக்கு நான் சவால் விடுகிறேன். இயேசுவே கிறிஸ்து என்று உனக்கு நிரூபிப்பேன், ஆனால் தெய்வீக சுகமளித்தல் என்பதற்கு நான் வரும் போது, எனக்கு அந்த வரங்கள் கிடையாது; ஆனால் சில சகோதரர்களுக்கு அந்த வரங்கள் உண்டு. நீ வியாதிப்பட்டவர்களைக் கொண்டு வருவாயானால், அப்படிப்பட்ட வரங்களைக் கொண்டிருக்கும் யாராவது ஒருவரை - ஓரல் ராபர்ட்ஸ் போன்ற மகத்தான ஊழியம் பெற்றிருக்கும் ஒருவரை - நான் அழைத்து வருவேன், அப்பொழுது என்ன நிகழ்கிறதென்று பார். கிறிஸ்தவ மார்க்கம் என்பது நீ நினைப்பது போன்றல்ல'' என்று அவர் கூறியிருக்கலாம். 93ஆனால், அவரோ ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து சென்று விட்டதால் எல்லோருமே தாங்கள் கைவிடப்பட்டார்கள் என்னும் உணர்ச்சியைக் கொண்டிருக்கின்றனர். பிசாசின் சவாலை ஏற்பதில் எனக்கு நம்பிகை இல்லை. நான் அவன் முகத்தில் துப்பிவிட்டு அங்கிருந்து சென்றிருப்பேன். ஆனால் பில்லி. அந்த முகமதியனுக்கு, அவன் ஒரு சிறு செடி என்னும் உணர்வை உணர்த்தியிருக்கலாம். அவர், ஏசாயா;9:6ஐ எடுத்துக் கொண்டு ''நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் என்று எழுதியிருக்கிறதே! யாரைக் குறித்து அவர் அவ்விதம் கூறினார்? இந்த மனிதன் யார்? இந்த தீர்க்கதரிசி யார்? வரப்போகும் இந்த மேசியா, யார்? அவர் முகமதில் தம்மை வெளிப்படுத்தினார் என்று நிரூபி பார்க்கலாம்! ''நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் என்று எழுதியிருக்கிறதே. அது முகம்மதில் நிறைவேறிற்று என்று நிரூபிப் பார்க்கலாம்! ''என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என் கைகளையும் என் கால்களையும் உருவாக்குத்தினார்கள்'' என்று எழுதியிருக்கிறதே! உன் சொந்த வார்த்தையினால் என் வேதத்திலிருந்து அப்படிப்பட்டவைகளைக் காண்பி'' என்று அவனுக்கு சவால் விட்டிருக்கலாம். முகமதியன் அப்பொழுது தோல்வியடைந்திருப்பான். அவனுடைய ஸ்தானத்தை அவன் நன்கு புரிந்து கொண்டிருப்பான். அது உண்மை. 94அந்த செய்திதாள் அதனுடன் நின்றுவிடவில்லை. அதுதான் என் இருதயத்திற்கு மகிழ்ச்சியையளித்தது. அது ''பில்லி சவாலை ஏற்காமல் பின் வாங்கிப் போனதால், இது தவறென்று அந்த முகமதியன் எப்படி கூறமுடியும்? தென் ஆப்பிரிக்காவிலுள்ள டர்பனில் சங்கை, வில்லியம் பிரான்ஹாம் விவாதத்திற்கு அப்பாற்பட்ட அநேக அற்புதங்களை தெய்வீக வல்லமையினால் நிகழ்த்திக் காண்பித்தார். அப்பொழுது ஒரே நேரத்தில் பத்தாயிரம் முகமதியர்கள் முகங்குப்புற விழுந்து, தங்கள் வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார்களே! அந்த அடிப்படை முகமதியர்களுக்கு அது தெரியும்'' என்று எழுதியிருந்தது. ஒரு முறை ஒருவன் இயேசுவினிடம் வந்து, ''ரபீ'' என்றான். அவன் பரிசேயன் என்று உங்களுக்குத் தெரியும். அவன், ''நீர் தேவனிடமிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். அது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில், எந்த மனிதனும், தேவன் அவனோடு கூட இல்லாமற் போனால் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யமாட்டான். அது எங்களுக்கு நன்றாக விளங்குகின்றது, ஆயினும் அதை எங்களால் வெளிப்படையாய் அறிக்கை செய்ய முடியாது. அப்படி செய்தால் நாங்கள் சபையினின்று புறம்பாக்கப்படுவோம். எங்கள் கெளரவத்தை நாங்கள் இழக்க நேரிடும்'' என்றான். அவன் மறுபடியும் பிறக்க வேண்டுமென்று இயேசு அவனிடம் கூறத் தொடங்கினார். 95அந்த முகமதிய பையன் அங்கு நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை நீங்கள் காணலாம். புகைப்படக் கருவி பொய்யான ஒன்றை படம் எடுக்காது. அவன் இரும்பு காலணியை அணிந்து கொண்டு அங்கு நின்று கொண்டிருக்கிறான். அவனுடைய ஒரு கால் மற்ற காலை விட சுமார் பதினான்கு அங்குலம் குட்டையாக உள்ளது. நான் அவனிடம், ''உனக்கு ஆங்கிலம் தெரியுமா?'' என்று கேட்டேன். “இல்லை, ஐயா.'' அவனுக்கு ஆங்கிலம் தெரியாது. மொழி பெயர்ப்பாளர், ''அவனுக்கு ஆங்கிலம் தெரியாது'' என்றார். ''எவ்வளவு நாட்களாக இந்நிலையில் இருக்கிறாய்?'' என்று மொழி பெயர்ப்பாளர் அவனிடம் கேட்டார். ''பிறவியிலிருந்தே.'' ''உன்னால் அந்த காலை அசைக்க முடியுமா?'' ''இல்லை, ஐயா.'' ''நீ இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறாயா?“ ''நான் முகமதியன்'' என்றான் அவன். நான், ''நீ சுகமடைந்தால் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வாயா?'' என்று கேட்டேன். ''இயேசு கிறிஸ்து என்னை சுகப்படுத்தினால், அவரை ஏற்றுக்கொள்வேன்.'' “இந்த குட்டை கால் மற்ற காலைப் போல் சரியாகி விட்டால், அவரை ஏற்றுக்கொள்வாயா?'' ''நிச்சயம் ஏற்றுக்கொள்வேன்.'' 96''ஆண்டவரே, நீர் என்ன செய்யப் போகின்றீர்?'' என்பது அடுத்த காரியம். எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்கப் பட்டுவிட்டது. சகோதரன் மைக்... நான் அவருடைய சித்தத்தை அறிந்துக் கொள்ள வேண்டும். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்துக் கொள்ள ஒரு நிமிடம் காத்திருந்தேன். நான் பார்த்த போது, அந்த பையன் சுகமடைந்து சுவர்களினருகில் நடந்து செல்வதை தரிசனத்தில் கண்டேன். நான் உடனே, ''எத்தனை முகமதியர்கள் அவரை ஏற்றுக்கொள்வீர்கள்? இந்த முகமதிய பையனைப் பாருங்கள். மருத்துவர்களே, அவனைப் பரிசோதிக்க விரும்புகிறீர்களா? அதோ அவன் அங்கு நின்று கொண்டிருக்கிறான்'' என்றேன். அந்த தரிசனத்தைக் கண்ட பின்பு, நான் எந்த நிலையில் இருக்கிறேன் என்பதை அறிந்து கொண்டேன். பாருங்கள், அந்த உறுதி கிடைத்துவிடுகிறது. யாருமே அங்கில்லை. அவன் அங்கு நின்று கொண்டிருந்தான். நான், ''மகனே, இப்படி நடந்துவா'' என்றேன். அவர்கள் அவனைக் கொண்டு வந்தனர். (டா - லம்ப், டா - லம்ப் என்று கக்க தண்டங்களின் ஓசையும் காலணியின் ஓசையும் எழும்பினர். நான், ''இந்த கால் பன்னிரண்டு, பதினான்கு அங்குலம் குட்டையாக உள்ளது'' என்றேன். ''ஆம்.'' ஆனால், ''தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து அவனை சுகமாக்க முடியும். அப்படி அவர் சுகப்படுத்தினால் முகமதியர்களாகிய நீங்கள் அவரை விசுவாசித்து உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்களா?'' என்று கேட்டேன். அப்பொழுது ஆயிரக்கணக்கான கறுப்பு கைகள் உயர்த்தப்பட்டன ஆண்டவர் இப்பொழுது வருவார். நான், ''பரலோகப் பிதாவே, நீர் எப்பொழுதாவது எனக்கு பதிலளிக்க விரும்பினால், அதை இப்பொழுதே செய்யும். இது உமக்காகவும் உமது மகிமைக்காகவும் செய்யப்படுகிறது. இந்த பையனை சுகப்படுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்'' என்றேன். நான் அவ்வாறு ஜெபம் செய்தேன். நான், ''உன் காலணியை கழற்றிவிடு!'' என்றேன். மொழி பெயர்ப்பாளர் என்னை வேடிக்கையாகப் பார்த்தார். நான் மறுபடியும், ''உன் காலணியை கழற்றி விடு'' என்றேன். ஏனெனில், நான் அந்த தரிசனத்தைக் கண்டேன். ஆகையால் என்ன நடக்கப் போகிறதென்று எனக்குத் தெரியும். அவனும் காலணியை கழற்றினான். அவனுடைய இரு கால்களும் சாதாரண நிலையை யடைந்து, அவன் என்னை நோக்கி நடந்து வந்தான். ''நீ முன்னும், பின்னும் நடக்க விரும்புகிறாயா?'' என்று கேட்டேன். அவன் அழத் தொடங்கினான். அவன் அழுது கொண்டே முன்னும், பின்னும் நடந்தான். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவன் நடந்து கொண்டே, “ஓ, அல்லா, அல்லா!'' என்று கதறினான். நான், ''இயேசு இயேசு!'' என்றேன். அவன், ''ஓ, இயேசுவே, இயேசுவே!'' என்று கூற ஆரம்பித்தான். நான், ''ஏதாகிலும் கேள்விகள் உண்டா?'' என்று கேட்டேன். 97உங்களில் எத்தனை பேருக்கு ஜூலியஸ் ஸ்டாட்ஸ்கி லவ் (Julius Stadsklev) என்பவரைத் தெரியும்? நமது சபைக்கு வரும் ஸ்டாட்ஸ் கிலவ்வை. சற்று முன்பு தான் அவர் ஜெர்மனிக்கு சென்றார். அவர் என்னிடம், ''சகோ, பிரான்ஹாமே, ஒரு நிமிடம் பொறுங்கள். புகைப்படம் பிடிப்பவரைக் கொண்டு வந்து இப்பையனைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா?'' என்று கேட்டார். நான், ''சரி'' என்றேன். ''இங்கு நடந்து வா, உன் காலணியை இங்கு வை'' என்று சொல்லி, இரு கால்களும் நேராக, சாதாரணமாயுள்ள அந்த பையனின் புகைப்படம் ஒன்றை எடுத்தார். நான், ''முகமதியர்களாகிய உங்களில் இப்பொழுது எத்தனை பேர் முகமதை தீர்க்கதரிசியென்று நிராகரித்து, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்கள்?'' என்று கேட்டேன். அப்பொழுது பத்தாயிரம் கரங்கள் உயர்த்தப்பட்டன. அல்லேலூயா! 98அவர்கள் நம்மை, ''உருளும் பரிசுத்தர்கள்'' என்று கேலி செய்து, இந்த அற்புதங்களையெல்லாம் மறைக்கப் பார்கின்றனர். ஆனால் அதே சமயத்தில் தேவன் அசைவாடி, சபையை அதன் ஸ்தானத்தில் பொருத்தி, நாம் கேட்கிறதற்கும், நினைகிறதற்கும் அதிகமாக செய்து கொண்டு வருகிறார். அவர் எப்பொழுதும் உள்ளது போல், இன்றிரவும் தேவனாயிருக்கிறார். எனவே என் சிறு நண்பர்களே, இப்பொழுதே ஒன்றை நான் உங்களிடம் கூறட்டும். இத்தேசத்திலுள்ள என் அருமையான, விலைமதிக்க முடியாத ஜனங்களே! இந்த ஒலிநாடாவைக் கேட்கும் அயல் நாட்டவரே! நீங்கள் எங்கிருப்பினும் பயப்பட வேண்டாம். எல்லாமே சரியாக உள்ளது. நடக்கப்போகும் ஒவ்வொன்றையும் பிதாவாகிய தேவன் உலகத்தோற்றத்துக்கு முன்பே அறிந்திருக்கிறார். எல்லாமே சரியானபடி அமைந்துள்ளது. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? உங்கள் இருதயங்களை நேர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். 99இதை ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் வாலிபரானாலும், வயோதிபரானாலும், இந்த மூச்சு இந்த ஜீவனை விட்டு கடந்து செல்லும் போது; தாய்மார்களே, உங்கள் சிறு குழந்தைகள் மரிப்பதை நீங்கள் காணும் போது, எட்டு நாள் அல்லது ஐந்து நாள் வாழ்ந்த அந்த பெண் குழந்தை மரித்துப்போனதே, அவளை நீங்கள் மறுபுறத்தில் காணும் போது அவள் அழகான வாலிபப் பெண்ணாக இருப்பாள். பாட்டியே, கூன் விழுந்து, கண் பார்வை மங்கி, போகும் இடம் அறியாத அந்த வயோதிப பாட்டனாரை நீங்கள் அங்கு காணும் போது அவர் சுமார் இருபது வயது கொண்ட அழகான வாலிபனாக வாலிப பிரகாசம் கொண்டவராக தோற்ற மளிப்பார். அவர் எக்காலத்தும் அப்படியே இருப்பார். அவர் கையை நீங்கள் தொட்டுப் பார்க்கலாம், அவருடன் நீங்கள் கை குலுக்கலாம். உங்கள் கைகளை அவர் தோளின் மேல் போடலாம். ஆனால், அங்கு அவர் உங்களுக்கு கணவனாக இருக்கமாட்டார். அவர் உங்களுக்கு சகோதரனாக இருப்பார். ஓ, என்னே! அவர் கணவனைக் காட்டிலும் மேலானவராக இருப்பார். நீங்கள் அவரை நேசித்தீர்கள் அல்லவா? ஆம், நிச்சயமாக அது மாம்சப் பிரகாரமான அன்பு. ஆனால், தெய்வீக அன்பு வரும் வரைக்கும் காத்திருங்கள். அந்த உண்மையான தெய்வீக அன்பு உங்களைப் பற்றிக் கொள்ளும் வரைக்கும் காத்திருங்கள். அது என்னவென்று அப்பொழுது உணர்ந்து கொள்வீர்கள். இங்குள்ளது புகைந்து கொண்டிருக்கும் குப்பைமேட்டைப் போன்றது. அது ஒன்றுக்கும் உதவாது. அதில் ஒன்றுமில்லை. என் நண்பனே, இப்பொழுது நான் உங்களுக்குக் கூறும் ஆலோசனை என்னவெனில்.... 100சற்று பின்பு... எப்பொழுதாவது மற்ற இரண்டு அதிகாரங்களின் மேல் நான் பேச வேண்டுமென்று விரும்புகிறீர்களா? ஆண்டவர்... சாட்டக்வா கூட்டங்களுக்கு முன்பு நான் சிறிது ஒய்வு பெற வேண்டும். இவைகளை அக்கூட்டங்களில் என்னால் பிரசங்கிக்க இயலாது. அங்கு வெவ்வேறு கருத்துக்களைக் கொண்ட அநேகர் கூடுகின்றனர். பாருங்கள்? இது சபைக்கு மாத்திரமே. பாருங்கள்? இவைகளை அங்கு பிரசங்கிக்க இயலாது. இங்கு என்ன வேண்டுமானாலும் பிரசங்கிக்க எனக்கு உரிமையுண்டு. இது என் கூடாரம். எனவே, இவைகளை நான் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். அங்குள்ளவர்கள் இரட்சிக்கப்பட்டுள்ளனர் என்று நம்புகிறேன். ஆனால், நீங்கள் எங்கு நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து, அதில் நடப்பது எவ்வளவு மேலானது! நீங்கள் தடுமாறி தடுக்கி விழுவதைக் காட்டிலும், நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதை உறுதியாய் அறிந்து கொள்ளுதல் மிகவும் நல்லதல்லவா? நாம் ஒளியில் நின்று ஒளியில் நடந்து எப்பக்கம் செல்கிறோம் என்பதை உறுதியாய் அறிந்து கொள்வோமாக! அது நல்லது. கர்த்தர் உங்களோடிருப்பாராக! 101இங்குள்ள ஒவ்வொருவரும் தங்கள் ஸ்தானத்தில் பொருத்தப்படாவிட்டால் நீங்கள் ஒருக்கால் இல்லாளாக (house - wife) மாத்திரம் இருக்கலாம், நீங்கள், ''சகோ. பிரான்ஹாமே, என் வாழ்க்கையில் நான் ஆண்டவருக்கு ஒன்றுமே செய்யவில்லை. நான் பிரசங்கியல்ல எனலாம், உங்கள் குடும்பத்தில் பிள்ளைகளைப் பெறுவதற்கு மாத்திரமே. தேவன் உங்களை இவ்வுலகில் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அந்த பிள்ளைகளின் குடும்பத்திலிருந்து வேறொரு குடும்பம்தோன்றி, அதில் ஒருவன் போதகனாகி, லட்சக்கணக்கான ஆத்துமாக்களை கிறிஸ்துவினிடம் நடத்த ஏதுவுண்டு. அதற்காக நீ இவ்வுலகில் தேவை. ஒரு நோக்கத்திற்காக நீ இங்கிருக்கிறாய் என்று உனக்குத் தெரியுமா? நீ ஒருக்கால், இப்பூமியில் நான் அனுபவித்தது துன்பம் மாத்திரமே. ஒவ்வொரு மாலையும் என் பிள்ளைகளை வெளியே அழைத்து சென்று, அவர்களுக்கு உண்ண என்ன கொடுப்பதென்று ஆலோசித்து துன்பப்பட்டிருக்கிறேன். காலணிகள் இல்லாத என் ஏழை பிள்ளைகளைக் கண்டு கண் கலங்கியிருக்கிறேன். என்னிடம் ஒரு பழைய வண்டி உள்ளது. அதில் நானும் என் மனைவியும் சபைக்குச் செல்வோம் என்று கூறலாம். சகோதரனே, கவலைப்படாதே! தொடர்ந்து அவரில் அன்பு கூறுவாயாக உனக்காக அவர் ஒரு நோக்கத்தை வைத்துள்ளார். இப்பொழுதுள்ள நிலையில் நீ இருந்து கொண்டு முன்னேறிச் செல். ஒருக்கால் நீ எந்த பிரசங்கத்தையும், பிரசங்கிக்காமல் இருக்கலாம். ஆனால், ஒருக்கால் அப்படி பிரசங்கிக்கும் ஒருவருடைய முப்பாட்டனாக நீ இருக்க வகையுண்டு. 102உங்களுக்குத் தெரியுமா? (அவன் பெயர் என்ன?) லேவி ஆபிரகாமின் அறைக்குள் இருந்த போதே ஆபிரகாம், மெல்கிசேதேக்கை சந்தித்த போது, லேவி தசமபாகம் கொடுத்து விட்டான் என்று வரவு வைத்து விட்டார். எத்தனை பேருக்கு அது தெரியும்? ஆபிரகாம், ஈசாக்கைப் பெற்றான். ஈசாக்கு, யாக்கோபைப் பெற்றான். யாக்கோபு, லேவியைப் பெற்றான் அப்படியானால் தகப்பனார், பாட்டனார், முப்பாட்டனார் லேவி தன் முப்பாட்டனாருக்குள் இருந்தபோதே, மெல்கிசேதேக்குக்கு தசம்பாகம் கொடுத்தான் என்று வேதம் அவனுக்கு வரவு வைத்துவிட்டது. என்னே, என்னே, என்னே சகோதரனே! ஓ... 103இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவன் ஒரு இரவு இங்கிலாந்தில் இரட்சிக்கப்பட்டான். அவன், ''எனக்கு மிக்க மகிழ்ச்சி! எனக்கு மிக்க மகிழ்ச்சி!'' என்றான். ஆம், அது உண்மையென்று அறிந்து அவன் மிக்க மகிழ்ச்சி கொண்டான், ஒரு மகிமையான நாளில் - அது எந்த நாள் என்று எனக்குத் தெரியாது. நான் கண்டது தரிசனமானால், நான் இவ்வுலகில் இருந்தேன் என்று என்னால் சொல்ல முடியாது. இதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் - இந்த ஒலிநாடாவைக் கேட்பவர்களும் கூட நான் தரிசனம் கண்டேனா அல்லது ஆவியில் எடுத்துக் கொள்ளப்பட்டேனா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்பொழுது நான் என் சகோதரன் நெவிலின் கரங்களைப் பிடிப்பது போன்று, அது அவ்வளவு தத்ரூபமாய் இருந்தது. நான் அந்த ஜனங்களைக் கண்டு அவர்களிடம் பேச முடிந்தது. அங்கு என் முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள், அவள், ''என் கணவரே'' என்று என்னை அழைக்கவில்லை. என் அருமை சகோதரனே'' என்று தான் அழைத்தாள். 104அநேக ஆண்டுகளுக்கு முன்பு நான் கூடச் சென்ற பெண் ஒருத்தி அங்கிருந்தாள். இங்குள்ள சிலருக்கு ஊடிகாவைச் சேர்ந்த ஆலிஸ் லூயியைத் தெரிந்திருக்கலாம், அவள் மிகவும் அருமையான, உத்தமமான கிறிஸ்தவப் பெண். அவள் சிறிது பருவம் கடந்து விவாகம் செய்தாள். முதலாம் பிரசவத்தின் போது, அவள் மரித்துப் போனாள். அவள் வீட்டிற்கு நான் சென்றபோது அவள் மரித்துப்போனாள், என்று அறிவிக்கப்பட்டது. நான் உள்ளே சென்ற போது யாருமே அறையில் இல்லை, ''திருமதி எம்மர்க் இருக்கிறார்களா?“ என்று நான் கேட்டுக்கொண்டே சென்றேன். அவள் ஒரு அருமையான கிறிஸ்தவ வாலிபனைக் கலியாணம் செய்து கொண்டாள். அவளும் ஒரு அருமையான கிறிஸ்தவப் பெண். அவளுடன் நான் எல்லாவிடங்களுக்கும் சென்றிருக்கிறேன். அப்பொழுது எங்களுக்கு பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது இருக்கும். அவள் அருமையான கிறிஸ்தவள். உண்மையான கிறிஸ்தவ மார்க்கத்தை தவிர அவள் ஒன்றும் அறிந்திருக்கவில்லை, அப்பொழுது நான் பாவியாயிருந்தேன். ஆயினும் அவளுடன் நான் சென்று கொண்டிருந்தேன்... அவளுடைய வீட்டுக்கு நான் சென்றேன். அவளுடைய கணவன் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன். மிகவும் நல்லவர். அவள் மரித்துப் போனாள் என்று செய்தித்தாளில் பார்த்தேன். அங்கு சென்றபோது அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். நான் கூட்ஸிடம் சென்று, ''திருமதி எம்மர்க் இருக்கிறார்களா?'' என்று கேட்டேன். அவர், ''பில்லி அவள் சடலம் அந்த அறையில் உள்ளது'' என்றார். நான் அங்கு சென்று சவப்பெட்டியின் அருகில் நின்றேன்.'' நான், ''ஆலிஸ், நான் இருள் சூழ்ந்த இருட்டறைகளுக்கு சென்றிருக்கிறேன். இருள் சூழ்ந்த வீதிகளில் நடந்திருக்கிறேன். நீயும், நானும் ஒருமித்து அந்த வீதிகளில் நடந்து, நதிக்கரைக்கு சென்று, அங்கு படகுகளிலிருந்து எழும்பும் இனிய ஓசையை நாம் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். நீ எவ்வளவு நாணயமான பெண்ணாக இருந்தாய்! உன்னுடைய வாழ்க்கைக்காக நான் தேவனுக்கு எவ்வளவாக நன்றி செலுத்தியிருக்கிறேன் என் அருமை சகோதரியே, தேவனுடைய சமாதானத்தில் இளைப்பாறுவாயாக'' என்று மனதில் எண்ணினேன். 105அன்றிரவு நான் கண்ட தரிசனத்தில், அவள் என்னிடம் ஓடி வந்தாள். அவள், ''ஆசிர்வதிக்கப்பட்ட என் சகோதரனே'' என்று கூறி, அவள் கைகளை என் தோளின் மேல் போட்டாள். ஓ, ஓ, சகோதரனே, சகோதரியே, அது என்னை மாற்றினது என் பழைய நிலையில் நான் மறுபடியும் இருக்க முடியாது. அது மிகவும் தத்ரூபமாயிருந்தது. உங்களைக் காண்பது எவ்வளவு தத்ரூபமாயிருக்கிறதோ, அவ்வளவு தத்ரூபமாய் அது அமைந்திருந்தது. ஆகவே, எவ்வித பயமுமில்லை இன்றிரவு முடிவதற்கு முன், நான் மரித்தாலும் எனக்கு பயமில்லை. என் சிறிய மகன் ஜோசப்பை நான் வளர்த்து அவனை பிரசங்க பீடத்தில் காண விரும்புகிறேன். அப்பொழுது நான் இந்த வேதாகமத்தை எடுத்துக் கொண்டு... நான் ஓரிடத்திற்கு சென்று, அங்கு ஜோசப் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றவனாக தேவனுடைய ஆவி அவன் மேல் தங்கின வாலிபனாக பிரசங்கபீடத்தில் நின்று பிரசங்கம் செய்வதை நான் காணும் போது, அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருப்பான் என்று நம்புகிறேன். அவன் பிறப்பதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நான் அவனைக் கண்டு, அவன் இவ்வுலகில் தோன்றுவான் என்று நான் உங்களிடம் கூறினது ஞாபகமிருக்கிறதா? நான் குழந்தைகளை பிரதிஷ்டை செய்து கொண்டிருந்த போது, அவனை பிரசங்க பீடத்தின் பக்கத்தில் அழைத்து நான் என்ன கூறுகிறேன் என்று என்னையும் அறியாமல், ''ஜோசப், நீ ஒரு தீர்க்கதரிசி'' என்று கூறினேன். 106அன்றொரு நாள் நான் முற்றத்தில் நின்று கொண்டிருந்த போது, அவன் என்னிடம் வந்து, ''அப்பர், இயேசுவுக்கு உங்களைப் போலவே கைகள் இருக்குமா?'' என்று கேட்டான். நான், ''ஆம், மகனே, ஏன் கேட்கிறாய்?'' என்று கேட்டேன். அவன், “நான் சைக்கிளின் மேல் உட்கார்ந்து கொண்டு சாராள் (அது அவள் தங்கை) பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பிவரக் காத்திருந்தேன்'' என்றான். அவனை வீதியில் செல்ல நான் அனுமதிப்பதில்லை. அவன் இப்படி சாய்ந்துக் கொண்டு சைக்கிளின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தான். நான் மேலே நோக்கிய போது, உங்கள் கையைப் போன்ற ஒருகை, வெள்ளை நிறமுள்ள முழுக்கை சட்டை அணிந்து என் தலைக்கு மேல் இருப்பதைக் கண்டேன். அது மேலே சென்றுவிட்டது. அது இயேசுவின் கையாக இருக்குமா? என்று கேட்டான். நான் தாயைப் பார்த்தேன். தாய் என்னைப் பார்த்தாள். அவன் திருமதி. உட்ஸ் வீட்டிற்கு சென்றான். அவர்கள் இங்கு எங்கோ உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்களால் இயன்றவரை நாங்கள் அவனைக் கேள்விகள் கேட்டோம். அது ஒரு தரிசனம், அவன் அதைக் கண்டான். சிறிய ஜோசப்பின் நேரத்தை நான் காணும்போது, இயேசு வர தாமதிப்பாரானால், அவன் விவாகம் செய்வதைக் காண நான் உயிர் வாழ்வேன் என்று நம்புகிறேன். 107எனக்கு வயதாகிவிட்டது. என் நரைமயிர் கழுத்தைச் சுற்றிலும் உள்ளது. கூடுமானால் இன்னும் இருபது, முப்பது லட்சம் ஆத்துமாக்களை கிறிஸ்துவினிடம் வழிநடத்த விரும்புகிறேன். பூமியின் எல்லா எல்லைகளிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டுமென்பதே எனது தீர்மானம். ஆம், ஐயா. தேவனே, எனக்கு உதவி புரியும். அப்பொழுது நான், அதை செய்வேன். சகோ. மைக், அந்த நேரம் வருவதை நான் காணும் போது. நான், மேடா தாய் நேரத்தை காண முடிகிறது. அப்படித்தான் என் அன்பு மனைவியை நான் அழைக்கிறேன். அவளுக்கும் வயதாகிக் கொண்டே போகிறது. அவளுடைய தலைமயிர் நரைத்து விட்டது. நாங்களிருவரும் மங்கிக்கொண்டே போவதை நீங்கள் காண்கிறீர்கள். ரெபேக்காவுக்காக, நான் தேவனுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அன்றிரவு அவளுக்கு இசை கற்பித்துக் கொடுக்கும் உபாத்தியாயினி என்னிடம், ''அவள் மாத்திரம் இதே ரீதியில் தொடர்ந்து முன்னேறினால், அவள் எந்த உச்ச நிலையையடைவாள் என்று என்னால் சொல்லவே முடியாது'' என்றாள். சாராள், ஆர்கன் இசைக்கருவி படிக்க வேண்டும்; பெக்கி, பியானோ இசைக்கருவி படிக்க வேண்டும். ஜோசப்பை, பிரசங்க பீடத்தில் காண வேண்டும், என்று விரும்புகிறேன். 108அப்படி நிறைவேறும் போது, நானும் தாயும் தடிபிடித்து தள்ளாடி நடந்து வந்து, என் மகன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றவனாய், அதே சுவிசேஷத்தை அவனும் பிரசங்கிப்பதைக் காண்பேன். இந்த வேதாகமத்தை எடுத்து, அவன் கையில் கொடுத்து, ''மகனே, இது உன்னுடையது. அதில் நிலைநிற்பாயாக! ஒரு வார்த்தையிலும் கூட ஒப்புரவாகாதிருப்பாயாக! இனியவனே, அதில் முற்றிலும் நிலைத்திரு. கவலைப்பட வேண்டாம். யார் உனக்கு எதிராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவன் உன் பட்சத்தில் இருப்பார். அதில் எழுதப்பட்ட விதமாகவே ஒவ்வொரு வார்த்தையையும் பிரசங்கம் செய்வாயாக! அப்பா உன்னை நதிக்கு மறுகரையில் சந்திப்பார்'' என்று கூற விரும்புகிறேன். என் மனைவியை என் கரங்களில் அணைத்துக் கொண்டு, யோர்தானைக் கடக்க விரும்புகிறேன்... அது வரைக்கும், தேவனே, நான் உத்தமனாக ஊழியத்தில் நிலைநிற்பேனாக! அதற்காக செலுத்த வேண்டிய கிரயம் என்னவானாலும், எத்தனை பேர் என்னை விட்டுச் சென்றாலும், எனக்குக் கவலையில்லை. ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைக்கு உண்மையும் உத்தமமுள்ளவனாய் நிலைத்திருப்பேனாக அப்பொழுது, அந்த நாள் வரும்போது, நான் கடந்து அக்கரைக்குச் சென்று, ''என் விலைமதிக்க முடியாத சகோதரனே, என் விலைமதிக்க முடியாத என் சகோதரியே'' என்று கூறி அங்குள்ளவர்களைச் சந்திப்பேன். 109வாலிபப் பிரசங்கியே, ஊழியத்திற்கு சென்று துன்பத்தை அனுபவி வாலிப பிரசங்கிமார்களே. ஒன்றும் செய்யாமல் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டாம். சென்று ஆத்துமாவை சம்பாதியுங்கள். ஏதாவதொன்றை செய்யுங்கள். முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். அங்கு உட்கார்ந்திருக்கும் வாலிபப் பிரசங்கியே, நிறுத்த வேண்டாம். தேவன் உன் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக! அந்த வாலிபப் பிரசங்கி என் வாலிபப் பருவத்தை நினைப் பூட்டுகிறான். அவனைக் காட்டிலும் சற்று இளையவனாக நான் இருந்தபோது, அப்பொழுது எனக்கு ஏறக்குறைய இருபது வயது இருந்திருக்கும். அந்த மூலைக்கல்லை நாட்டினேன், அப்பொழுது நான், ஊதா கோட்டையும், வெள்ளை கால் சட்டையையும் அணிந்திருந்தேன். முப்பத்தொன்று ஆண்டுகளுக்கு முன் அந்த மூலைக்கல்லை நாட்டினேன். அப்பொழுது எனக்கு என்ன வயதிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்பொழுது, நான் இளைஞனாக இருந்தேன். அங்கு நான் நின்று கொண்டு மூலைக்கல்லை நாட்டின் முதற்கொண்டு, நான் ஒரு வார்த்தையிலும் கூட ஒப்புரவாகவில்லை. அந்த வார்த்தையை நான் அப்படியே எடுத்துரைத்தேன். என் சாட்சி அங்கு புதைக்கப்பட்டுள்ளது. அதை நான் வேதாகமத்தின் பின்னாலுள்ள ஏட்டில் (Fly leaf) எழுதி, அதை கிழித்து, மூலைக்கல்லுடன் வைத்து புதைத்தேன். அது இப்பொழுதும் அங்குள்ளது. அது பரலோகத்தில் தேவனுடைய நித்திய வார்த்தையின் பக்கங்களில் எழுதப்படுவதாக முடிவு வரைக்கும் நான் அதற்கு உத்தமனாய் நிலைநிற்பேனாக! 110ஜெபத்திற்காக இப்பொழுது நாம் ஒரு நிமிடம் தலை வணங்குவோம். இன்றிரவு கூட்டம் முடிவு பெற்றது. நாம் ஒரு அதிகாரத்தை மாத்திரமே முடித்தோம். அது நியாயமல்ல. நீங்கள் மற்ற அதிகாரத்துக்கும் விளக்கம் பெற வேண்டும். அவர் எவ்வாறு சபையை அதன் ஸ்தானத்தில் பொருத்துகிறார் என்பதைக் குறித்து. தேவனுக்கு சித்தமானால் எப்பொழுதாவது அதை நாம் விளக்கலாம். ஒரு பெரிய கூட்டத்திற்காக நான் சாட்டக்வாவுக்கு போகும் முன்பு சற்று ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். அங்கிருந்து நான் ஒக்லாஹாமாவுக்குச் செல்கிறேன்.